Wednesday, July 18, 2012

கர்த்தர் மனித குல எதிரி-பாபேல் கோபுரம் கதை!

                                                  பாபேல் கோபுரம்

//ஆதியாகமம் 11:

1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. 2 மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். 3 அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, ″வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்″ என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர். 4 பின், அவர்கள் ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். 5 மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
 
6 அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.
  
7 வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ என்றார். 8 ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
 
9 ஆகவே அது ″பாபேல்″ என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.//

கர்த்தர் என்னும்  ஆண்டவர் மனித குல எதிரி, மக்கள் ஒற்றுமையைக் கெடுக்கிறார்.

10 comments:

 1. மக்கள் ஒற்றுமையை கடவுள் தடுத்தாரா?

  இவர் கடவுளா?

  ReplyDelete
 2. You are talking so much against Lord and Holy Spirit.

  You would be hugely punished

  ReplyDelete
 3. http://vazhipokkanpayanangal.blogspot.in/

  Can you comment on this site and contents

  ReplyDelete
 4. மனித குலம் ஒரே மொழிப் பேசி இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை .. மனிதனுக்கு முன் தோன்றிய நியாண்டர்தல் கூட வேறு மொழிகள் பேசக் கூடியவர்களாக இருந்திருக்கக் கூடும் .... !!!

  ஹோமோ சாப்பியன்கள் ஆப்பிரிக்காவில் இருக்கும் போதே பலக் குழுக்களாக பிரிந்தனர். அப்போதே வெவ்வேறு மொழிகள் உருவாகத் தொடங்கி இருக்கக் கூடும் .... !!!

  இந்தக் கதை வெறும் கதையாக மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது .

  ReplyDelete
 5. வாருங்கள் நண்பரே,

  நாம் பைபிளை நடுநிலையாக, நல்ல வேளையாக சாத்தான் புண்ணியத்தில் கிடைத்த நன்மை-தீமை அறியும் அறிவான பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தால் பைபிளின் இறையியல் கர்த்தர் மனித குல விரோதி எனத் தெளிவாகுகிறது. அறிவியல் ரீதியாக ஆறாய்ந்தால் பைபிளின் பக்கங்கள் ஒன்று கூடத் தேராது.
  http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_17.html

  பூமி தான் சூரியனிச் சுற்றுகிறது என்னும் பைபிள் கோட்பாட்டை வைத்துக் கொண்டு விஞ்ஞானி கலிலியோ தன் வாழ்நாளின் இறுதி நாட்கள் முழுதும் ஜெயிலில் கழித்தார். ஆனால் சர்ச் மெதுவாக் மாறி வருகிறது.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நல்ல பதிவு நண்பரே உண்மையில் வேதங்கள் கட்டுக் கதைகள் அடங்கிய புத்தகமே. அழகிய தமிழில் பைபிளில் உள்ள உளறல்களை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 8. இனியவரே வாருங்கள்,

  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 9. தங்கள் அறியாமை பற்றி வருந்துகிறேன் கர்த்தர் மனிதரின் எதிரி அல்ல அவர் தானே மனிதனை படைத்தார் பிறகு அவர் எப்படி நமக்கு எதிரி ஆக முடியும். உங்கள் அன்னை உங்களுக்கு எதிரியாக இருக்க முடியுமானால் நீங்கள் இப்போது எப்படி இப்போது இருக்கிறீர்கள். ரோமர் 5.8 வசனத்தை வாசித்து தியானித்துபாருங்கள். மனிதனின் மீது வைத்த அன்பினால் அவரே மனிதனாக பிறந்து பாடுகளை பொறுமையாக சகித்து பாவியாகிய நமக்கு ரெட்சிப்பை கொடுத்தார். தம்முடய பரிசுத்த ரத்தத்தை சிந்தி இந்த உலகில் எந்த மனிதனும் காட்ட முடியாத அன்பை வெளிப்படுத்தினார். கர்த்தர் மிகுந்த அன்புள்ளவர் இரக்கமுள்ளவர்.

  ReplyDelete
 10. என் கடவுளே! என்னை ஏன் கைவிட்டீஇர்!!.. என்ற மரண ஓலத்துடன் இறந்த மனிதரை நீங்கள், வரலாற்று ஆதாரமே அப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் - ஒரு யூத இனவெறி பிடித்த, யூதர் அல்லாத கடவுள் மகன்களை- நாய், பன்றி எனப் பேசிய அந்த ஏசுவை நீங்கள் தெய்வீகர் என மூட நம்பிக்கையில் பேசுகிறீர்.

  //யோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே...

  யோவான்6:48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.//

  மன்னாவை சாப்பிட்ட அனைவரும் பூமியில் இறந்தார்கள் தான்.

  இதை சொன்னவரை யாருமே உண்ணவில்லையா? ஏசு உளறினாரா? சுவிசேஷக் கதாசிரியர்கள் பொய்யாய் ஏசு வாயில் இதைப் போட்டார்களா?

  ReplyDelete