Thursday, July 5, 2012

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?-3

பகுதி-1  பகுதி-2
யூதாசு மரணம் எவ்வாறு? giottojudas



யோவான்6:32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.
48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '

யோவான்13:26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.



மத்தேயு27:
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மாற் 15:1; லூக் 23:1 - 2; யோவா 18:28 - 32)
images?q=tbn:ANd9GcSoSyIdTLAUD6YC8qOFxDrf3yhJelfl_bMqlSLvi_8ctmpJYp4U1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
யூதாசின் தற்கொலை
(திப 1:18 - 19)
மத்தேயு 27:
3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' 00-159-256_ps2பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.
அப்போஸ்தலர் பணி)1:16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர், தான் யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணம் கொண்டு யூதாசு தானே ஒரு நிலம் வாங்கி அதில் நின்று இருந்த போது உடல் பலூன் போல உப்பி வெடித்து இறந்தார் இந்த ஏசுவினால் தனக்கு தேவையான நெருங்கிய சீடர் என்று தேர்ந்தெடுத்த 12 பேருள் ஒருவர்.
ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்து இறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் எனக் கூறுகிறது.
ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.
apostles

எது உண்மை? இரண்டுமே பொய்யா



1 comment:

  1. முதலில் தற்கொலை செய்து கொண்ட யூதாசு உயிர்த்து எழுந்து பின் வெடித்து மரணத்திருக்கலாமா?

    என்ன கதை இது?

    ReplyDelete

ஈவெராவின் யுனஸ்கோ விருதும் டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும்

ஈவெராவின் யுனஸ்கோ விருதும்- வினோத்பாபு - மாற்றுத்திறனாளி உலக கோப்பை டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும் https://www.facebook.co...