Sunday, July 8, 2012

ஈஸா குர்ஆன் உமருக்கு பதில்-கர்த்தரின் ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு குழப்பம்.

  


நம் கட்டுரையை வாசகர் ஒருவர் ஈஸா குர்-ஆன் இணையத்தில் பதிலிட அதை கருப்பையா எனும் நண்பர் சுட்டினார்.
http://isakoran.blogspot.in/2012/06/blog-post_09.html

திரு.உமர் பதிலாக ஒரு மழுப்பல் கட்டுரை தந்துள்ளார்.

http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html

வெற்று மழுப்பல்கள்.
1   2  3    4       5

இதன் சாரம்- //அப்பா பெயரில் மகன் பேரன் இருக்க முடியாதா என்னும் மழுப்பல்கள்//-
 ஏன் நீங்களக கதைகளை புனைந்து இருக்கலாம் என்று மழுப்புகிறீர்கள்.

மேலும் இக்கதைகளில் ஒரு அருமையான உண்மையும் உள்ளது, அடுத்தவன் மனைவியை யூதரல்லாத மக்கள் கடவுள் பக்தி கொண்டோர் ஒழுக்கத்தோடே இருந்தனர். ஆனால் தாவீது குறைந்தபட்சம் 3பெண்களை அடுத்தவன் மனைவியை அபகரித்தல் பைபிளில் உள்ளது.



முதலில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய பைபிளியல் கோட்பாடுகள், அகழ்வுகளை தவறாக மேல்நோகில் பைபிளுடன் இணைத்தல் போன்றவை- நவீன விஞ்ஞான கார்பன்-14 சோதனையில் முழுமையாய் பொய்த்ததை மறைத்து இன்னும் காலம் ஓட்டும் மழுப்பல்களை உமரும் தருகிறார்.


ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300௨00 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
ஆய்வு நூல்-R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”:


இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

   
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
//ஆபிரகாம் வாழ்வில் இரண்டுமுறை- மனைவி தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் அருவருப்பான யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.//

மேலும் பைபிள் பற்றி, பைபிளியல் பற்றி இஸ்ரேலின் புதைபொருள் அகழ்வாரய்ச்சி பற்றி உண்மைகளை நாம் தருவோம்.


நாம் நடுநிலையாக பைபிளை, அதில் வரலாற்று பின்னணி உள்ளதா என ஆராய்ந்து எழுதுகிறோம்.

முழுமையாக பல பைபிளியல் பல்கலை கழகங்கள்- பேராசிரியர்கள் நூல்கள் அடிப்படையில் தருகிறோம்..

வரலாற்று பைபிளியல் அடிப்படையை நாம் தொடர்ந்து பகிர்வோம்.




10 comments:

  1. மிக அழகாக யூதக் கலைகளஞ்சியம் சொல்வதை மிக தெளிவாக விளக்கினீர்.

    பைபிளை - தற்கால பைபிளியல் அகழ்வு உண்மைகள் கொண்டு சொல்வதை நீங்கள் தொடர்ந்து விளக்குங்கள்.

    ReplyDelete
  2. ஒரு சிறு கட்டுரையில் சான் -ஜெர்ரி தாமஸ் விட்ட கதையை உமரைக் கொண்டே மறுக்க வைத்தீரே? நியாயப் பிராமணம் முழுதும் மோசேவிற்கு கர்த்தர் எகிப்திலிருந்து திரும்பி வரும்போது தந்தார், மோசே மரணம் செய்தியை யோசுவா சேர்த்தார் என்றார் அவர் அனால்- உமர் மூன்று ஆசிரியர்கள் ஒரே கதையை வெவ்வேறு ஆசிரியர்கள் புனைந்திருக்கலாம் என உமர் சொல்கிறார்.

    பாராட்டுக்கள்.

    //ஒரே கதை மூன்று வித்தியாசமான பெயர்களில் கூறப்பட்டுள்ளது என்பார்கள் அல்லது இந்த மூன்று நிகழ்ச்சிகள் நமக்கு ஆதியாகமத்திற்கு மூன்று ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது என்றும் கூறுவார்கள். //

    அந்தச் சப்பைக்கட்டு போதாது என்று- தாத்தா-பேரந் அப்பா ஒரே பெயர்- பைபிளில் இல்லத ஒன்றைக் கற்பனையில் நினைச்சுக்கோ என்னும் கதை வேறு.
    //இஸ்ரேலின் "அருவருப்பான" யாவே//

    "அருவருப்பான" - தவிர்த்திருக்கலாமே
    அந்த பைபிள் ஆய்வு நூலகள் இணையத்தில் இருக்குமா? இறக்க தொடர்பு கிடைக்குமா?

    ReplyDelete
  3. யூத கலைக்களஞ்சியம் இவை வெறும் கதையாகத் தான் இருக்கும் என்கிறதே!

    நிச்சயமாக உமர் அண்ண பதில் தருவார். தர வேண்டும்.
    http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html

    ReplyDelete
  4. உமர் அண்ண பதில் கொடுத்துள்ளார் பார்த்தீர்களா? யூத்க் கலைகளாஞ்சியம் சொல்வதை பாஆ.....ர்ர்ர்ர்....க்..க்.கவே... இல்..லை. ஆனாலும் நீங்கள் விமர்சனத்தை சிறிதாக வைத்ததை பெரிதாக்கி தப்பிக்கப் பார்க்கிறார்.

    http://isakoran.blogspot.in/2012/07/blog-post_09.html
    நீங்கள் பைபிளியல் முடிவுகளை -பல ஆண்டுமுன் ஏற்றவை என விளக்காததை விளக்கி கட்டுரையை மாற்றும்படி - சிறு விண்ணப்பம்.

    ReplyDelete
  5. நானே காலையில் பார்த்தேன். பதில் எழுதிகொன்டிருந்த போது உங்கள் பதில் வந்துள்ளது.
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_09.html

    நண்பரே இவ்வலைப்பூவின் தலைப்பு என்ன? நாம் முடிந்தவரை விவிலிய சம்பவங்களை உள்ளபடியே ஆய்வுக்கு உள்ளாக்குவது. நாம் எந்த அறிஞரைச் சொன்னாலும் - அவர்களை லிபரல் -நம்பிக்கையற்றோர் என்பர்.

    ஆனால் இப்படி பதிலுக்கு பதில் வரும்போது விவரமாக எழுதத் தூண்டுகிறது. உங்களுக்கும் உமர்க்கும் நன்றி.

    ReplyDelete
  6. சுலைமான் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    //"அருவருப்பான" - தவிர்த்திருக்கலாமே
    அந்த பைபிள் ஆய்வு நூலகள் இணையத்தில் இருக்குமா? இறக்க தொடர்பு கிடைக்குமா?//

    1இராஜாக்கள் 11:3 சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்.4 சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கிவில்லை.5 சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையுதம் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார்.6 இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை.7 சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார்.8 இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.9 ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது.
    நாம் பைபிளின் ஆபிரஹாம்-மோசே-ஏசு கடவுள் வார்த்தை நடையைத் தான் பயன்படுத்தினோம்.

    புத்தகங்கள் எல்லாம் காபிரைட் உள்ளவை, ஆயினும் பலர் ஏற்றி உள்ளனர்.
    இங்கே சில உள்ளன.
    http://www.mediafire.com/#0u0ma7e3mfsgh

    ReplyDelete
  7. மோவாபியரின் அருவருப்பான கெமோசு
    அம்மோனியரின் அருவருப்பான மோலேக்கு
    தோனியரின் தேவதையான அஸ்தரேத்
    அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோ
    இஸ்ரேலின் அருவருப்பான யாவே

    சரியாகத் தான் உள்ளது

    ReplyDelete
  8. http://en.wikipedia.org/wiki/Abraham#Historicity_and_origins
    Historicity and origins
    Nothing in the Genesis stories can be related to the history of Canaan of the early 2nd millennium: none of the kings mentioned are known, Abimelech could not have been a Philistine (they did not arrive until centuries later), Ur would not become known as "Ur of the Chaldeans" until the early 1st millennium, and Laban could not have been an Aramean, as the Arameans did not become an identifiable political entity until the 12th century.[18] Joseph Blenkinsopp, Emeritus Professor of Biblical Studies at the University of Notre Dame has asserted that the narrative of Abraham originated from literary circles of the 6th and 5th centuries BCE as a mirror of the situation facing the Jewish community under the Babylonian and early Persian empires.[10] Blenkinsopp describes two conclusions about Abraham that are widely held in biblical scholarship: the first is that, except in the triad "Abraham, Isaac and Jacob," he is not clearly and unambiguously attested in the Bible earlier than the Babylonian exile ; the second is that he became, in the Persian period, a model for those who would return from Babylon to Judah.[19] Beyond this the Abraham story (and those of Isaac and Jacob/Israel) served a theological purpose following the destruction of Jerusalem, the Temple and the Davidic kingship: despite the loss of these things, Yahweh's dealings with the ancestors provided a historical foundation on which hope for the future could be built.[11] There is basic agreement that his connection with Haran, Shechem and Bethel is secondary and originated when he became identified as the father of Jacob and ancestor of the northern tribes; his association with Mamre and Hebron, on the other hand (in the south, in the territory of Jerusalem and Judah), suggest that this region was the original home of his religion.[12]

    ReplyDelete
  9. My God,

    You go deep and nothing left in Bible to defend

    ReplyDelete
  10. மிக அருமையாக ஆய்வு செய்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...