Jagan’s Tirumala visit rakes up controversy
YSR Congress president Y S Jaganmohan Reddy at the Lord Venkatewara temple in Tirumala on Sunday. Photo: Special Arrangement
http://www.thehindu.com/news/national/andhra-pradesh/jagans-tirumala-visit-rakes-up-controversy/article5743884.ece
YSR Congress president Y.S. Jaganmohan Reddy who offered prayers at the Lord Venkateswara temple in Tirumala on Sunday raked up a controversy again.
Mr. Jagan, along with the party leaders and hundreds of supporters, arrived at the hill shrine. He entered the main temple complex like any other commoner from the Vaikuntam queue complex. Allegations are rife that scores of his followers forcibly gained entry into the temple without proper authorisation.
The followers failed to produce proper identity proof which is mandatorily required during the time of entry for the darshan.
TTD draws flak
The Tirumala Tirupati Devasthanams (TTD) administration also came under sharp attack not only for the indiscriminate issuance of VIP tickets but also for keeping the queues vacant ahead of the arrival of the YRS Congress president to the temple.
Even though nobody was sure whether there was a need to accept any kind of declaration from Mr. Jagan as is being observed in the case of devotees belonging to other religions, the authorities maintained that they, in fact, had apprised the party leaders of the regulations.
திருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகனை நுழைய அனுமதித்தது ஏன்?: தேவஸ்தானத்துக்கு பா.ஜனதா கண்டனம்
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மே 03, 11:38
திருமலை, ஏப். 3-
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோவில் நிர்வாகத்தை அணுகி, அதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்ட பின்னரே, சன்னதிகளுக்குள் நுழைய முடியும்.
உறுதிமொழி படிவத்தில், நான் கடவுள் கோவிந்தாவை மனதார நம்புகிறேன் என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்து அல்லாதோர் அந்த படிவத்தில் கையெழுத்திட வேண்டும். பல முக்கிய பிரமுகர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டுதான், சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன், அங்கு தங்கி இருந்து விட்டு, நேற்று காலை சாமி தரிசனத்துக்காக கோவிலுக்கு வந்தார். இங்கு ஏற்கனவே பிரசாரம் செய்த தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜெகனை கடுமையாக தாக்கிப்பேசினார்.
ஜெகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவர் ஒரு நாத்திகர். டெல்லியில் உள்ள சோனியாவே இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். ஆனால், ஜெகன்மோகன் இங்கு இருந்து கொண்டே கோவிலுக்கு சென்றதில்லை. இவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்தால், குண்டர் ராஜ்ஜியம்தான் நடக்கும் என்று குற்றம் சாட்டினார்.
இந்த குற்றசாட்டை பொய்யாக்கவே, பிரசாரத்துக்கு வந்த ஜெகன்மோகன், திருப்பதி கோவில் சென்று தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. கோவிலுக்கு ஜெகன்மோகனுடன், அவரது கட்சி வேட்பாளர் பூமன் கருணாகர ரெட்டி மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் சென்றனர்.அவருக்கு வி.ஐ.பி.களுக்கான தரிசனத்துக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜெகன்மோகன் கிறிஸ்தவர் என்பதால், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்க முயன்றனர். ஆனால், அந்த படிவத்தில் கையெழுத்துபோட ஜெகன் மறுத்து விட்டார். கடந்த 2009-ல் இங்கு வந்திருக்கிறேன். அப்போது, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்டுள்ளேன். எனவே, ஒவ்வொரு முறை வரும்போதும் கையெழுத்து போடவேண்டிய அவசியம் கிடையாது.
சோனியாகாந்தி இங்கு தரிசனத்துக்கு வந்தபோது, அவரிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கினீர்களா? என்று கேட்டு அவரும், உடன் வந்தவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மேலும், ஒரு வி.ஐ.பி.யுடன், 10 பேர் மட்டுமே வரவேண்டும். ஆனால், 60 பேர் வந்துள்ளீர்கள் என்று கோவில் நிர்வாகிகள் கேட்டதற்கும், முறையான பதில் அளிக்காமல் அடாவடியாக நடந்து கொண்டுள்ளனர். தவிர, ஜெகன்மோகனு டன் வந்தவர்கள், ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டுள்ளனர். இதனால், கோவில் நிர்வாகத்தினருக்கு முகம் சிவந்து போய்விட்டது.
இவ்வளவு சர்ச்சைக்கு மத்தியில் ஜெகன்மோகன் சாமி தரிசனம் செய்தார். சுமார் 3 மணி நேரம் கோவிலுக்குள் இருந்துள்ளார். ஜெகன்மோகனின் இந்த செயலுக்கு மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்து பாரம்பரியத்தை மீறி, ஜெகனை கோவிலுக்குள் நுழைய, தேவஸ்தானம் அனுமதித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
No comments:
Post a Comment