Tuesday, May 4, 2021

ஞானவெட்டியான் 17ம் நூற்றாண்டு நூல்

ஞானவெட்டியான் என்னும் நூலை எழுதியவர் சாம்பமூர்த்தி என்னும் ஆதிதிராவிடர்., சித்த மருத்துவம் அறிந்தவர். 17  வயதில் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். தம்மைத் திருவள்ளுவரின் மறுபிறப்பு என்று கூறிக்கொண்டவர்.

சங்க இலக்கிய நூல்களை தமிழில் தொன்மையானவை அதிலும் புறநானூறு & அகநானூறு நூல்களில்  எதுகை மோனை மற்றும்  வரி எண்ணிக்கை அளவு கட்டுப்பாடு இன்றி செந்தொடையில் அமைந்துள்ளன. தமிழ் மொழி நெகிழ்ச்சி அடுத்த ஐநூறு ஆண்டுகளில் வர சங்க இலக்கியங்கள் பொமு 100 -பொஆ 700 இடையே எழுந்தது. அதற்குப் பின்பாக 8ம் நூற்றாண்டில் தொல்காப்பியமும் 9ம் நூற்றாண்டில் திருக்குறளும் எழுந்தது. திருக்குறள் குறள் வெண்பா,  பல புதிய நெகிழ்ந்சொல் மாற்றம் கொண்ட இடைக்கால நூல் என்பது பன்னாட்டு அறிஞர்கள் ஏற்பது.
திருக்குறள் தமிழ் மொழி நன்றாக நெகிழ்ச்சி அடைந்து சங்க இலக்கியத்திற்குப் பிற்பாடு எழுந்த  தொல்காப்பியம் பின்பாக 9ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட நூல். திருக்குறள் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் ஒரு உன்னதமான வாழ்வியல் களஞ்சியம். 17ஆம் நூற்றாண்டில் எழுந்த ஞானவெட்டியான் என்ற நூலை திருவள்ளுவர் இயற்றியதாக ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளதைப் பற்றி திருக்குறள் ஆராய்ச்சியாளர் முனைவர் முகநூல் பக்கங்கள்

 

ஞான வெட்டியான் என்பது சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல்களுள் ஒன்று. ஞான வெட்டியான் என்பதற்கு அறிவுநெறியைக் காட்டுகின்றவன் என்று பொருள். வெட்டியான் ஒருவன் உயர் வகுப்பினரை நோக்கிக் கூறுவது போல இந்நூல் பாடப்பட்டுள்ளது. வெட்டியான் ஒருவன் அறிவுரை கூறுவதால் ஞான வெட்டியான் என்று பெயர் வழங்கப்படுகிறது. 
 

நூலாசிரியர்[தொகு]

ஞான வெட்டியான் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூலாகும்.சித்தர்களின் வரலாற்றை ஆய்ந்தவர்கள் பலர் இந்நூலை வள்ளுவர் பாடியதாக நம்புகின்றனர். இந்நூல் திருவள்ளுவரால் பாடப்பட்டது என்றாலும் திருக்குறளைப் பாடிய வள்ளுவர் வேறு, ஞான வெட்டியான் பாடிய வள்ளுவர் வேறு என்று கொள்ளவேண்டும் என்று சிலர் சொன்னாலும் திருக்குறளின் பல கருத்துகள் ஞான வெட்டியானில் காணப்படுவதால் இந்நூல் வள்ளுவர் பாடியதெனக் கூறுகின்றனர்.

காலம்[தொகு]

ஞான வெட்டியானில் அதிவீரராம பாண்டியன் பெயரும் அவர் இயற்றிய நைடதத்தின் பெயரும் காணப்படுகிறது.

"சாயாமல் அதிவீரராமபாண்டியன் சொல்லும் தமயந்தி சரித்திர நைடதமும்" என்பது ஞானவெட்டியான் பாடல். அதிவீரராம பாண்டியன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. ஆதலால் ஞான வெட்டியான் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கவேண்டுமென்பர். இது காலத்தால் பிற்பட்டதாயினும் கருத்துக்கள் பழைமையானவை. இவை பதினெண் சித்தர்களின் கருத்துக்களை எடுத்துரைப்பவை.
 
நூலின் சிறப்பு

இந்நூலில்,

  • மக்கள் தாயின் வயிற்றில் கருக்கொள்ளுவது
  • கருவிலே வளர்வது
  • கருவில் வளரும் குழந்தைகளுக்கு அங்கக் குறைகள் ஏற்படுவதன் காரணம்
  • அங்கக் குறைகள் ஏற்படாமல் நல்ல குழந்தைகளைப் பெறும் வழி
  • குழந்தை பிறந்து வளரும் விதம்
  • நோயணுகாமல் உடலைப் பேணிக்காக்கும் வழி
  • உடலை வலுப்படுத்தும் யோகநெறி
  • பிணிகளைத் தடுப்பதற்கான காயகல்பம்
  • வாதமுறை

இவை பற்றி கூறப்பட்டுள்ளன.
பொதுவாக மக்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. சாதி மத இனபேதம் பாராட்டுவோர் அறிவற்றவர்கள், மனித சமுதாய ஒற்றுமையை விரும்பாதவர் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. மதம், சாத்திரம், தெய்வம், மதவேடம் முதலியவைகளால் மக்களை அறிவீனராக்கும் குருமார்களை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.

No comments:

Post a Comment