தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஏன் இன்று வரை கீ.வீரமணியை இன்றுவரை விசாரிக்கவில்லை.
பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக்கொள்ளுவும்.
"பேராசிரியரின் பொறுக்கித்தனம்... மாணவிகளுக்கு ஆபாச எம்.எம்.எஸ்.. தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலை., யில் அதிர்ச்சி.!" என்கிற தலைப்பில் 08-01-21 பல்வேறு செய்தி இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. மேலும் அதே செய்தி, 07-01-21 பாலிமர் டிவி இணையதளத்தில், "பாலியல் தொல்லை.... பேராசிரியர் சஸ்பெண்ட்.! மகளிர் காவல் ஆய்வாளர் அலட்சியம்" என்கிற தலைப்பிலும் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வந்து பல மாதங்களாகியும், இந்த செய்தியை பற்றி, தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைகழக வேந்தர் கி.வீரமணி வாயே திறக்கவில்லை.
பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் வந்த செய்தியை முழுமையாக வாசிப்போம். "தஞ்சாவூரில், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், மாணவிகள் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ், புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நபர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்ஆர் கூட தராமல், மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஒருவர், அலையவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூர் வல்லத்தில், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
இங்கு பேரிடர் மேலாண்மைத்துறை பேராசிரியராக ஸ்ரீலால்பாண்டியன் என்பவர் பணியாற்றுகிறார். இவர் மீது, தஞ்சாவூர் பிலோமினாள் நகர் பகுதியில் வசிக்கும், முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், வல்லம் டிஎஸ்பி.யிடம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி புகார் அளித்தார். அதில், தனது மகள், அந்த பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், 2ஆம் ஆண்டு பிஎஸ்சி படிப்பதாகவும், அவரது செல்போனுக்கு, பேராசிரியர் ஸ்ரீலால்பாண்டியன், ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்புவதோடு, வாட்ஸ்அப்பில், ஆபாச புகைப்படங்களை அனுப்புவதாக, புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது மகள் மட்டுமின்றி, மேலும் 6 மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளிப்பதாகவும், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த பேராசிரியரின் பாலியல் தொல்லை தாளாமல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், தனது புகார் மனுவில், முன்னாள் இராணுவ வீரர், ஆற்றாமையோடு விவரித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து, வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலை போலீசார் விசாரிக்க, டிஎஸ்பி உத்தரவிட்டார். ஆனால், இந்த புகார் மனு மீது, சிஎஸ்ஆர் கூட தராமல், வல்லம் மகளிர் காவல்நிலைய போலீசார், தொடர்ந்து அலைகழிப்பதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
https://www.polimernews.com/amp/news-article.php?id=133628&cid=1
No comments:
Post a Comment