Sunday, May 2, 2021

திருவள்ளுவரின் இறை வணக்கக் கோட்பாடு

 திருவள்ளுவர் நன்கு வளர்ச்சி அடிஅந்த மொழிநிலையோடு, பாயிரத்தோடு இடைக்காலத்தில் எழுந்த நூல் ஆகும். கடவுள் வாழ்த்து எனத் தொடங்கினாலும் அதன் ஆரம்பமே அறிவை வலியுறுத்தலும், கல்வியின் பயனை சொல்வதுமே. 

நாம் கல்வியினை கற்கத் தொடங்குவது "அ" என எழுதுவதிலிருந்து, இந்த உலகம் இறைவனில் இருந்து தொடங்கியது என்பார். கல்வி கற்றதன் பயன் என்பது அனைத்து அறிவினையும் உள்ளான இறைவன் திருவடி பற்றுவதற்கே என அடுத்த குறளிலேயே தெளிவாக்குவார். உலகமே, அனைத்திலும் என்ற வள்ளுவர் அடுத்த குறளிலேயே நம் மனத்தினுள்ளேயே உள்ளவர் என மேலும் எளிமையாக்குவார்.  வள்ளுவம் மனிதனின் இறுதி தேவை என்பது பிறவிப் பெருங்கடலை மீண்டும் மீண்டும் இவ்வுஅலகில் பிறக்கும் நிலையை இறைவன் திருவடியை பற்றினால் மட்டுமே என அவ்வதிகாரத்தை முடிப்பார்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.                                   மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

வள்ளுவர் பாயிரத்தில் கடைசியாக அறன் வலியுறுத்தல் வைத்துள்ளது, வள்ளுவத்தின் திரள் பொருளே ஒவ்வொரு செயலிலும் அறம் செய்ய வேண்டும் 

வள்ளுவத்தின் வேர் கடவுள் நம்பிக்கை.

கல்வி கற்பதின் பயன் நிறைவான அறிவின்னர் உலகின் தொடக்கமான இறைவன் திருவடி பற்றவே- அந்த இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிக்கடலை கடக்க இயலும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)


பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362:அவாவறுத்தல்
மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:நிலையாமை
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  குறள் 36: அறன்வலியுறுத்தல்.
அறத்தைச் முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு வரும் பிறவிகளும் துணை ஆகும்.

நாட்டின் அரசிற்கு வள்ள்வம் கொடுக்கும் அடிப்படையும் - பண்டைய முதல் உரையான மணக்குடவர் உரையும்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.  

மனித வாழ்வில் நடைபெறும் உண்மையான நிகழ்வுகளைத் திருவள்ளுவர் தொகுத்து அவற்றிற்கு ஏற்ற தெய்வங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

குறள் 1) எழுத்தென்றால் பகவனையும்,
குறள் 2) கற்றல் என்றால் வாலறிவனையும்,
குறள் 3) நீடுவாழ மலர்மிசை ஏகியவனையும்.
குறள் 4) இடும்பை இல்லாத வாழ்விற்கு வேண்டுதல் வேண்டாமை இலாதவனையும்,
குறள் 5) இருள்சேர் இருவினையும் சேராமல் இருக்க இறைவனையும்,
குறள் 6) நெறி நின்று, நீடுவாழப் பொறிவாயில் ஐந்தவித்தானையும்,
குறள் 7) மனக்கவலையை மாற்றிடத் தனக்குவமை இல்லாதனையும்,
குறள் 8) பிறவாழிகளை நீத்தல் செய்ய, அறவாழி அந்தணனையும்,
குறள் 9) கோள்கள் பொறியில் குணமில்லாமல் போக, எண்குணத்தானையும்
குறள் 10) பிறவிப் பெருங்கடல் நீந்த இறைவனையும்

’திருக்குறளைச் சமயச் சிமிழுக்குள் அடக்க முயல வேண்டா’
சமயநூற் பயிற்சியற்ற, வள்ளுவத்துக்கான உரைகளையும் பார்த்திராத போலி முற்போக்கு கும்பலின் வெற்றுவேட்டு ஜல்லி!
குறட்பாக்களைக் கட்டாயம் சமயச் சிமிழுக்குள் அடைத்தே ஆகவேண்டும் எனும் நேர்ச்சைக்கடன் எதுவும் எமக்கில்லை.
பற்றுநீங்கி ஆன்மிகத்தில் தோய்ந்தாருக்கென்றே ‘நீத்தார் பெருமை’ எனும் அதிகாரம் வகுத்துள்ளது வள்ளுவம். குறளின்கண் மறைமுகமாக இடம் பெறும் புராணத் தகவல்களும் பல. ’அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ததீசி முனிவரைச் சொல்வதை மறுப்பது பாசாங்குத்தனம் இல்லாமல் வேறு என்ன?
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர்பிரான், உயிரினம் பல இருக்க ஆவுக்கு நீரளிக்கும் உயர்ந்த தர்மத்தை உவமை கூறுவார்.
சேரமான் பெருமாள் நாயனாரின் ‘திருக்கயிலாய ஞான உலா’ குறட்பாக்களை அப்படியே எடுத்தாண்டுள்ளது.
குறளின்கண் இடம் பெறும் சமயம்சார் சொற்கள் பல. அவற்றையெல்லாம் நீக்க முடியுமா? அவ்விதம் நீக்க முடியுமானால் சமயச் சிமிழுக்கு வெளியே வள்ளுவத்தை எடுத்து விடலாம்.

*ஆதி பகவன்
*எண்குணத்தான் (விஜரத்வாதி அஷ்டகுணா:)
*அடியளந்தான் (திரிவிக்கிரமன்) 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. குறள் 610:
மணக்குடவர் உரை:மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
மு. வரதராசன் உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

*செய்யாள் (இலக்குமி) 167
*உலகியற்றியான் (விச்வஸ்ய கர்த்தா) 1062
*இந்திரன்25
*அவியுணவின் ஆன்றோர் (தேவர்கள்)
*ஆவுக்கு நீர் (கோ ஸம்ரக்ஷணம்)
*அளறு (நரகம்)
*புத்தேள் உலகு (சுவர்க்கம்)
*ஓத்து (வேத அத்யயநம்) 134
*பார்ப்பான் (வேதியன்) 134
*அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்) 560
*தென் புலத்தார் (பித்ருக்கள்) 43
*விருந்து (ஆதித்யம்)
*தவம்
*அவி சொரிந்து வேட்டல் (யாகம்) 
*நோன்பு (விரதம்)
*புத்தேளிர் (தேவர்)
*கூற்று (யமன்)
*பிறவாமை (அபுநர்பவம்)
*மறை மொழி (மந்திரம்)
*ஊழ் (விதி)
*திங்களைப் பாம்பு கொள்வது (சந்திர கிரஹணம்) 1146
*வாய்மை (ஸத்யம்)
*கள்ளாமை (அஸ்தேயம்)
*கொல்லாமை (அஹிம்ஸை)
*மற்றீண்டு வாரா நெறி (மோக்ஷம்)
*தாமரைக் கண்ணான் உலகு (பரமபதம்)

திரு,
செய்யாள், 84
தாமரையினாள்,  617
தவ்வை,167
முகடி, 617
இந்திரன்,25
வேந்தன்,899
காமன்,1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். குறள் 1197:
மணக்குடவர் உரை:தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
சாலமன் பாப்பையா உரை: ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?
நிலமென்னும் நல்லாள், 1040  924
அணங்கு,
தென்புலத்தார்,
அமரர்,
அவியுணவின் ஆன்றோர்,
தெய்வம்,
தேவர்,
புத்தேளிர்,
வானத்தவர்,
வானோர்,
விசும்புளார்

 அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1

இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
  மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 35:4


அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
  கல்லார்-கண் பட்ட திரு - குறள் 41:8
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
  திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள் 92:10
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
  நல்லவர் நாணு பிற - குறள் 102:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
  நெஞ்சத்து அவலம் இலர் - குறள் 108:2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3

அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
  நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4
அமரகத்து (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
  தமரின் தனிமை தலை - குறள் 82:4

  அமரருள் (1)
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 13:1

 அமிழ்தம் (1)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1

 அமிழ்தின் (1)
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6

  அமிழ்தினும் (1)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
  சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4

  அமிழ்து (1)
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10

கூற்றத்தை (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
  ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4

  கூற்றம் (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
  ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9

 கூற்றமோ (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5

 கூற்று (4)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
  ஆற்றலதுவே படை - குறள் 77:5
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3

 புத்தேள் (5)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

  புத்தேளிர் (1)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8

விசும்பின் (2)
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
  பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 விசும்பு (1)
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
  இந்திரனே சாலும் கரி - குறள் 3:5

 வானத்தவர்க்கு (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6

 வானம் (5)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
  வானம் நணியது உடைத்து - குறள் 36:3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

 வானோர்க்கு (1)
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6

 வானோர்க்கும் (1)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8

அண்ணாத்தல் (1)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
  அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 26:5

 அணங்கு (2)
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
  மாய மகளிர் முயக்கு - குறள் 92:8
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2
 அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1

அவி 
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
  ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3

  அவித்தான் (2)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
  இந்திரனே சாலும் கரி - குறள் 3:5

மறை ஓத்துக்கு (வேத அத்யயனத்துக்கு) முதன்மை தரும் விதத்தில் ‘ஓத்தூர்’ என்றே ஒரு பாடல் பெற்ற சைவத்தலம் ஒன்றும் தமிழகத்தில் உள்ளது - ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' (காழிப் பிள்ளையார்).
வள்ளுவத்தை சநாதனத்திலிருந்து பிரிப்பதும், சமணத்தோடு ஒட்ட வைப்பதும் மிகவும் செயற்கையான பயனற்ற நிலைக்காத முயற்சிக

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...