Wednesday, May 5, 2021

சிஎஸ்ஐ கன்னியாகுமரி பேராயர்.செல்லையா ஒன்றரை கோடி மோசடி ஊழல்

சிஎஸ்ஐ கன்னியாகுமரி பேராயர்.செல்லையா ஒன்றரை கோடி மோசடி ஊழல்.

சென்னையை சேர்ந்த ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு மோசடி சொத்துக்கள் மோசடி டாக்குமென்ட்களை வாங்கி ஒன்றரை கோடி சர்ச் மக்கள் பணத்தை ஊழல் செய்துள்ளதாக புகார். நீதிமன்றம் ஏற்று விசாரிக்கச் சொல்லி உள்ளது                                                                                                                                                   

சர்ச்சில் காணிக்கை  கொடுப்பதில் தாமாதமானால் அப்போஸ்தலர் நடபடிகளில் 5ம் அதிகாரத்தில் உள்ள அனனியா- சப்பீராள்கதையை கூறி பாதிரியார்கள் மிரட்டுவார்கள். பாதிரியார் கொள்ளை அடிக்கும் போது பரிசுத்த ஆவி ஏன் தண்டிக்க மாட்டேன் என்கிறது. மக்களை ஏமாற்றி பணம் பிடுங்க மட்டுமே பைபிள் கதைகள்.

ஒன்னரை கோடி ரூபாயை மோசடி செய்ததாக சிஎஸ்ஐ பேராயர் செல்லையா மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
*ஒன்றரை கோடி ருபாய் கொள்ளையடிப்பதற்க்காக தென்னிந்திய திருச்சபை, கன்னியாகுமரி பேராயத்தின் பேராயர் ஏ.ஆர். செல்லையா போலி ஆவணம் தயாரித்ததான குற்றச்சாட்டு சம்பந்தமான வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு, நாகர்கோவில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு, நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், CRLMP No. 1301/2021 என்ற வழக்கில், 04.05.2021 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.*
*குமரி CSI பேராயத்தில், ஒன்றரை கோடி ருபாய் நிதி மோசடி செய்வதற்க்காக பேராயர் ஏ.ஆர். செல்லையா, ஐந்து தனியார் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த கடிதம் அனுப்பியதாக தயார் செய்த தேதி குறிப்பிடாத போலி ஆவணங்களை, குமரி பேராய பொருளாளர் திரு. தங்கராஜ் அவர்களிடம் தனது 07.10.2019 என தேதியிடப்பட்ட கடிதம், பார்வை Ref: B/1300/2019 -னுடன் இணைத்து, அக்கடிதத்தில் 06.10.2017-ம் தேதியில் Financial Administrator-ஆக காணப்பட்ட திரு. ராபட் புரூஸ் என்பவர், நெய்யூரில் சி.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி துவங்குவதற்க்காக, தனியார் நிதி நிறுவனத்தாரிடம் இருந்து கடனாக பெற்றுள்ள ஒன்றரை கோடி ருபாயினை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.*
*இந்த விவகாரத்தை பொருளாளர் திரு. தங்கராஜ் அவர்கள் 24 பேர் கொண்ட பேராய காரிய நிர்வாக குழுவில் (Diocesan Executive Committee) தெரியப்படுத்தியபோது, பேராய செயலர் பைஜூ நிசத் பாலை தவிர அனைவரும் கீழ்காணும் காரணங்களை வலியுறுத்தி, ஒன்றரை கோடி ருபாய் நிதியை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.*
*1. Loan Account நம்பருக்கு பதிலாக தனி நபருக்கான Savings Account No குறிப்பிடப்பட்டுள்ளது.*
*2. Loan Contract ஆவணமில்லை*
*3. கம்பனி சட்டம் பிரிவு - 3 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 45 I(a) யின் படியாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களா என்பதை உறுதி செய்வதற்க்கான ஆவணமில்லை*
*4. பேராய தேர்தலை நடத்துவதற்க்காக நியமிக்கப்பட்ட Administrative Committee-க்கு தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்க அதிகாரமில்லை, குமரி பேராய திருச்சபை சட்டத்தில் அதற்கு வழிவகையுமில்லை*
*5. குமரி பேராய காரிய நிர்வாக குழுவின் அங்கீகாரமும், அனுமதியும் பெறப்படவில்லை*
*6. சென்னை Registrar of Companies அலுவலகத்தில், Church of South India Trust Association என பதிவு பெற்றுள்ள கம்பனி, இவ்வாறாக தனியார் நிறுவனங்களிடம் கடன் நிதி பெறுவது, கம்பனி சட்டம் பிரிவுகள் 73, 180(1)(c), 185 மற்றும் 186-ன் படி சட்டவிரோத செயலாகும்.*
*அதன் பின்னர் இந்த விவகாரம் சம்பந்தமான ஆவணங்கள், சமூக ஊடகங்களில் பெருமளவில் வெளியானது. அதனை தொடர்ந்து, பள்ளிவிளை ஜெயக்குமார் அவர்கள், இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்து, நாகர்கோவில் மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் முறைப்படியான விசாரணை மேற்கொள்ளப்படாமல் விசாரணை அதிகாரி கால தாமதம் செய்ததால், நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இப்புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள மாவட்ட குற்றப் பிரிவு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடரப்பட்டது.*
*வழக்கை விசாரித்த மாண்பமை நீதிபதி அவர்கள், 04.05.2021 அன்று, கீழ்வருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளர்:*
*”Order pronounced. All records perused. On perusal of document there is a prima facie case to investigate the matter. Payment due letter is not proper. There is a sufficient prima Facie to Investigate the matter. Hence this complaint forwarded to Inspector of Police, DCB, Wing Nagercoil for investigate and reported the FIR and same is forwarded to this court immediately.”*
*நீதிமன்ற உத்தரவின் தமிழாக்கம் கீழ்வருமாறு:*
*”உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில், இந்த விவகாரத்தை விசாரணை செய்ய முகாந்தரமுள்ளது. கடன் நிலுவைத் தொகை கோரி அனுப்பப்பட்ட கடிதம் முறையாக இல்லை. இந்த விவகாரத்தை விசாரணை செய்ய தகுந்த முகாந்தரமுள்ளது. எனவே, இந்த புகாரை விசாரணை செய்து, முதல் தகவல் அறிக்கையை உடனடியாக இந்த நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திட, நாகர்கோவில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்படுகிறது.”*
*சட்டம் தன் கடமையை செய்யும்!*

No comments:

Post a Comment