Thursday, May 27, 2021

காமக்கொடூரன் பாடல் திருடர் வைரமுத்துவிற்கு கேரள விருது கேவலமான நடவடிக்கை



 


1985ம் ஆண்டு முதல் மரியாதையில் எழுதினார் வைரமுத்து இப்படியாக‌
"காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சி
விவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சி
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சி ஊருக்குள்ள பேச்சு"
2021ல் அதே வரிகளை மாற்றி இப்படி எழுதியிருக்கின்றார், ஆக என்ன தெரிகின்றது?
36 வருடமாக அவர் திருந்தவே இல்லை என்பது தெரிகின்றது
(இந்த பாடலுக்கு ஏன் போக்சோ சட்டம், குழந்தைகள் வன்கொடுமை சட்டமெல்லாம் பாயவில்லை என்பதுதான் தெரியவில்லை)
மலையாள தேசத்தில் "ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு" (O.N.V) என்றொரு கவிஞர் இருந்தார், நம்ம ஊர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் போல் இடதுசாரி, நல்ல புலவர் எழுத்தாளர் என பெரும் அடையாத்தை பெற்றார்
(பெயர் நீலகண்டன் வேலு,ஒற்றபிலா என்பது அவரின் ஊர், குரூப் என்பது அவரின் சாதி மிக பிற்படுத்தபட்ட சாதி )
அன்னாரின் படைப்புள் கொண்டாடபட்டன, சாஹித்ய அகாடமியினை தாண்டி ஞான பீட விருது பெற்ற பெரும் சிறப்பாளர், அவர் 2017ல் இறந்தார் அவர் நினைவாக ஆண்டு தோறும் கேரள அரசு இலக்கிய விருது வழங்கும்
இந்த விருது தமிழக கவிஞர் என சொல்லபடும் வைரமுத்துவுக்கு இம்முறை வழங்கபட்டிருக்கின்றது, கேரளம் ஒன்றும் தமிழகம் அல்ல என்பதால் அங்குள்ள பலர் வரிந்து கட்டுகின்றனர், இதில் நடிகை பார்வதி முக்கியமனவர்
பார்வதி தமிழ் படங்களில் நடித்திருக்கின்றார், கேரளாவில் சின்மயி போல் பலரின் முகமூடியினை கிழித்து கொண்டிருக்கின்றார்
இந்த கேரளத்தின் சின்மயி வைரமுத்துவுக்கு விருது கொடுக்கபட்டதை எதிர்க்க விஷயம் பற்றி எரிகின்றது
மிக பெரிய மானுடவாதியும், பெண் விடுதலையும் சொன்ன கவிஞனின் விருதை பாலியல் சர்ச்சையில் சிக்கிய
வைரமுத்துவுக்கு கொடுப்பது ஏற்றுகொள்ள முடியாது என்கின்றது கேரள குரல்கள்
சரி, வைரமுத்து எப்படி என்ன எழுதினார் என நாம் யோசித்தால் நம் நினைவில் இந்த வரிகள்தான் வருகின்றன‌
"ஓ கொட்டும்மலரே. அமுதம் கொட்டும் மலரே
இது தேனின் ஊற்று.. இதில் தீயை ஊற்று
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்"
என்ன யழவு வடியுமோ தெரியாது என நினைவினை திருப்பினால் அடுத்த வரி மீள்கின்றது
"கொஞ்சம் பொறு..கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள் வீசுகின்றேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தணமாய் என்னை பூசுகின்றேன்"
என்ன யழவையும் பூசட்டும் என வெளிவந்தால் அடுத்த பாடல் ஒலிக்கின்றது, அன்னாருக்கு திடீரென குளிந்துவிட்டது
"இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது"
அத்தோடு விட்டாரா, இது கம்பன் காணாத சிந்தனை என தன் காலரை தானே தூக்கியும் விட்டு கொள்கின்றார்
என்னய்யா இவருக்கு இப்படி குளிர்கின்றது என அடுத்த பாடலை திருப்பினால் ஒரே அவசரமான பரபரப்பு
"கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம்தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்"
இந்த பாடலிலாவது வைரமுத்துவினை காக்க வாதாடலாம், ஏ மலையாளிகளே இதெல்லாம் தத்துவம்
"பிறந்த இடம் நாடுதே கண்
கறந்த இடம் தேடுதே மடநெஞ்சம்" என்ற பட்டினத்தார்
வார்த்தையில் சொன்ன தத்துவம் என எடுத்து கொள்ளலாம்
இவன் காமத்திலும் தத்துவம் சொன்ன பட்டினத்தார் வாரிசு, சிருங்கார சதகம் பாடினாலும் பெண்ணாசை வெறுத்த பத்ருஹரியார் வாரிசு என தமிழ்பாசத்தில் வாதிட்டாலும் தானே சறுக்குகின்றார் கவிஞர்.
அதெல்லாம் முடியாது, கட்டிபிடிப்பேன் , கட்டி பிடித்தே நண்டு பிடிப்பேன் ஆமை பிடிப்பேன் என கவிஞர் தத்துவபாடலிலும் காமத்தில் மூழ்குகின்றார்
அவர் நண்டை எங்கேயும் பிடித்து தொலைக்கட்டும் என பாடலை நிறுத்தினால் இன்னொரு பாடல் அச்சுறுத்துகின்றது
"என் உடல்வழி அமிர்தம் வழிகின்றதோ
இது காதலின் ஆறாம் படிநிலையோ.."
என்னய்யா இவர், அங்கே கள் வடியும் என்கின்றார், இங்கே அமிர்தம் வழிகின்றது என்கின்றார் எப்பொழுதும் எதையாவது வடித்து கொண்டே இருப்பார் போல என அடுத்த பாடலுக்கு தாவினால் அது மகா அச்சுறுத்தல்
"நிலவை கொண்டு வா..கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா..மெத்தை போட்டு வை
காயும் சூரியனை...கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட...இந்திரனை காவல் வை"
இந்த கருமத்துக்கு காவல் வேறா என நகர்ந்தால், இவர் ஏன் இப்படியெல்லாம் எழுதுகின்றார் என அடுத்த பாடலை தேடினால் அவரின் விளக்கமும் வருகின்றது
"உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா
இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள"
இதைவிட என்ன விளக்கம் அவர் அவரை பற்றி கொடுத்துவிட முடியும்?
மயக்கத்தை தீர்த்து மன்னித்துவிடு, ஒழுக்கத்துல சிலது தப்பி போகும், நான் மண்ணுக்குள்ள போறதுவரை திருந்த மாட்டேன் என தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டார் கவிஞர்
இப்படிபட்ட கவிஞருக்கு கேரள அரசின் இடதுசாரி கவிஞனின் விருது நிச்சயம் சரியல்ல, ஆனால் இந்த அற்புத கவிஞனுக்கு அதைவிட பெரிய விருது கொடுத்தாக வேண்டும்
இந்த "ஸ்வேதா மேனன்" விருதோ இல்லை "அபிலாஷா" விருதோ வழங்கி, அதை ஷகீலா கையால் கொடுக்க வேண்டும்
இப்படி ஒரு விருது வழங்கபட்டால் எந்த மலையாளி எதிர்க்க முடியும், ஏன் தமிழ்நாட்டு சின்மயி கூட எதிர்க்க முடியுமா என்ன?
கேரள அரசு இதுபற்றி பரிசீலிக்கும் என நம்புவோம்
https://www.facebook.com/stanley.rajan.5/posts/10218897518924109?__cft__[0]=AZX0OPxHS3RCFW24UWH0Fk95foUDf-gbWO51nef057mBF3l9xlnouvZYS9EMmxzhECAgAFL8jfSNJBQGrctBVBVkFSuOtrtd_e8lQHX7ZlJoDWd8cFORivOTFF9N0BZlTVAiAzeYJSXUsOaUY31ioEHrGJyDTFX7lf_vWhczsl2iNA&__tn__=%2CO%2CP-R



 

No comments:

Post a Comment