https://www.facebook.com/groups/madhyamararasiyal/permalink/3366208683696088/
ஒரு மனிதன் பொது வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும்.... மற்றவர்கள் அவரை.... அவர் சார்ந்த மதம் எது என்பதன் அடிப்படையில் அணுக முயற்சிப்பது மிகவும் மோசமான (இதைவிட மோசமான வார்த்தையை நாகரிகம் கருதி இங்கு பயன்படுத்தவில்லை) செயல் ஆகும்.
அதைவிட மோசமானது பொதுவாழ்வில் இருக்கும் ஒரு மனிதன்... பொதுவெளியில், தனது சுயநலத்துக்காக மதத்தைக் கொண்டுவருவது.
அந்த வகையில் திராவிடர்களின் இளவரசர் "" நான் ஒரு கிறிஸ்தவன்.....நான் ஒரு முஸ்லிம்....என்மனைவி கிறிஸ்தவர்"" என்று பேசிய பேச்சு அநாகரீகத்தின் உச்சம்....அதைவிட கேவலம்....இதை கேட்டு சங்கிகள் வயிறு எரியும் என்று சொல்லி சிரித்தது.
இங்கு, எனக்கு, கவிஞர் வாலி அவர்களின் கீழ்காணும் பொன்னான பாடல் வரிகள் நியாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
{ வயிறு வலிக்க
சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறு எரிய
சிரிப்பவர்கள் மிருக ஜாதி }
என்பதே அந்த பாடல் வரிகள்
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அல்லாவை தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்க முடியாது....முகமது நபிகளே அவர்களின் இறுதி தூதர்...அவரது வழிகாட்டுதலை தவிர வேறு எதையும் ஏற்க முடியாது.
அதேபோன்றதே கிறிஸ்துவமும்...கிருத்துவர்கள் முகமது நபிகளை தங்களது தூதராக ஏற்பார்களா?
இந்த இரண்டு சமயங்களிலும் கடவுள் மறுப்பு....நாத்திகம் என்று பேசினால் பேசும் நபர்களை பர லோகத்துக்கு அனுப்புவதுதான் தொன்றுதொட்டு வழங்கிவரும் வழக்கம்.
ஆகவே ஒரு கிரிஸ்தவர் அல்லது முஸ்லிம் நாத்திகராக இருக்கவே முடியாது.
இந்த விஷயங்கள் கூட தெரியாத சாதாரண குடிமகன் கூட யாரும் இந்த காலத்தில் இல்லை.
அப்படி என்றால் உண்மையில் நீங்கள் கிறிஸ்தவரா அல்லது முஸ்லிமா.
இந்துக்கள் தான் ஏமாறப் பிறந்தவர்கள்.... திராவிடம், பகுத்தறிவு என்னும் பெயரில் ஏய்க்கின்றீர்கள் விட்டு விடுவோம்... கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்....
நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொள்கிறோமே நாங்கள் பைத்தியங்களா.....இல்லை எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசும் நீங்களா?
ஒன்றுமே புரியவில்லையே.....
No comments:
Post a Comment