இருக்கு வேதத்தில் இருமுறை இடம்பெறும் சொல் ஶிஶ்நதேவா: (शिश्नऽदेवाः) எனும் பன்மைச்சொல். அது நடுகல் வடிவ இலிங்கத்தைச் சுட்ட வேண்டுமானால் ஒருமையில் அமைந்திருக்க வேண்டும். அதைப் பிரித்துப் பொருள்கொள்ள வேண்டுமானால் ஶிஶ்ந , தேவா: என இரு பதங்களாகப் பிரியும். இலிங்கம் என்பதோடோ, இலிங்க வழிபாட்டாளன் என்பதோடோ இம்மூலச்சொல் சற்றும் ஒட்டாது. கல்லை வழிபடுபவனை 'தேவன்' என்று சொல்ல மாட்டார்கள். புலனடக்கம் இன்றி உலக இன்பங்களை நுகர்வோர் என்பதே திரண்ட பொருள். யாஸ்கரும் , துர்கரும், ஸாயணரும் அதே பொருளில்தான் உரை செய்துள்ளனர்.
र्मा शि॒श्नदे॑वा॒ अपि॑ गुर्ऋ॒तं नः॑ ॥
मा । शिश्नऽदेवाः । अपि । गुः । ऋतम् । नः ॥ Ṛgveda 7.21.5
शिश्नदेवानभि वर्चसा भूत् … Ṛgveda 10.99.3
இந்திய மெய்யியலில் புலனுகர்ச்சி எப்போதுமே கண்டனத்துக்குள்ளாகிறது. வயிற்றுக்கும், அதற்குக் கீழிருக்கும் உறுப்புக்கும் முதன்மை தருவது "ஶிஶ்ந உதர ப்ரதாநம்" என இகழப்பட்டுள்ளது. மறைகளின் விரதம், உறக்கம் நீக்கல் போன்ற கர்ம காண்டச் சடங்குகளும் ஒருவனது புலன்களைக் கட்டுப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை.
19ம் நூற்0 வெள்ளைக்கார ஆய்வாளர்கள் கிளப்பிவிட்ட இப்பொய்த்தகவல் மிகக்கடுமையான கண்டனங்கள் பெற்று ஓய்ந்து விட்டது.


No comments:
Post a Comment