Saturday, March 15, 2014

யூதாசு மரணம் எவ்வாறு

இயேசு எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளி இயேசு மரணம் பற்றி தெளிவாக உள்ளதா? இதற்கு நாம் சீடர் யூதாசு மரணம் எவ்வாறு- அறியப் பார்ப்போம்.   
                                                                                 

இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்(மத் 26:14 - 16; லூக் 22:3 - 6)
மாற்கு14:10 பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்.11 அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்(மத் 26:20 - 25; லூக் 22:21 - 23; யோவா 13:21 - 30)
17 மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.18 அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ' என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ' நானோ? நானோ? ' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.20 அதற்கு அவர், ' அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்.21 மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ' என்றார்.

யூதாசின் தற்கொலை(திப 1:18 - 19)
3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் பாதிரிகளிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் பாதிரிகள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

 மதச் சங்கக் கூட்டம் நடக்க அதில் ஏசுவிற்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என தீர்ப்பு தரப்பட மனம் வெறுத்த யூதாசு முன்பு யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணத்தை தூக்கி வீசிவிட்டு யூதாசு தற்கொலை செய்து இறந்தார். யூதாசு ஏசு மரணத்தின் முன்பே தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது. மதப் பாதிரிகளிடம் சங்கம் குயவன் நிலத்தை வாங்கினார்கள்.  
சுவிசேஷங்கள் ஏசு இறந்து 40 வருடம் பின்பு புனையப்பட்டவை. அப்போஸ்தலர் நடபடிகள் என்ற நூலில் இதன் ஆசிரியர் லூக்கா  சுவிசேஷம் கதாசிரியர்  லூக்கா என்கிறார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள் 1:14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது:16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான்பின்பு யூதாசு  தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.21 ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர், தான் யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணம் கொண்டு யூதாசு தானே ஒரு நிலம் வாங்கி அதில் நின்று இருந்த போது உடல் பலூன் போல உப்பி வெடித்து இறந்தார் இந்த ஏசுவினால் தனக்கு தேவையான நெருங்கிய சீடர் என்று தேர்ந்தெடுத்த 12 பேருள் ஒருவர்.
இயேசு சீடர்களைத் தானே தேர்ந்தெடுத்தார் எதற்கு

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பாவம் யூதாசு கெட்டவனா? இல்லை ஐயா இல்லை! யூதாசு கெடக் காரணம் ஏசுவே. அவர் கையால் அப்பம் தந்து ஏசு யூதாசிடம் சாத்தானை அனுப்பினார்.
இயேசு தன்னை கடவுள் என்றும் தன்னிடமிருந்து உணவு பெற்றால், வானிலிருந்து வந்த மன்னாவை உண்டவர்கள் பூமியில் இறந்தது போல அல்லாமல், ஏசுவை ஏற்றவர்கள் பூமியில் மரணமடையமாட்டார்கள் என்றார்.

யோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.  33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.

35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

6:9 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் பூமியில் இறந்தனர்.50 உண்பவரை பூமியில் இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.


ஏசு வாழ்வில் நடந்தது

யோவான்13:26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 யூதாசு இயேசு  கையிலிருந்து  அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். 


யூதர்கள் இறந்த மனிதர் ஏசுவைத் தெரியும், தெய்வீகர் என்பது இல்லை எனத் தெரியும். சர்ச்சின் மதமாற்ற இலக்கு யூதரல்லாத புற ஜாதியினர். எனவே கிரேக்க மொழியில் ஏசுவை அறியாதவர்களால் புனையப் பட்டதே சுவிசேஷங்கள். ரோமன் ஆட்சி கைப்பாவையாய் சர்ச் மாறிய பின் லத்தீனில் 4- 5 ஆம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது வல்காத்து ஆகும்.
ஏன் பழைய ஏற்பாடு கூட ஒரே நேரத்தில் அதாவது பொ.மு.300 – பொ.கா. 100 இடையே எபிரேயம் கிரேக்கத்தில் எழுதப் பட்டவை தான்.
குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள். அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவி- நல்ல சேஷம்- செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பெயரில் தான் நாமும் கூற வேண்டும்.
மத்தேயு புனைவது -இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது- ஆனால் இவ்வசன்ம் எங்கு உள்ளது

செக்கரியா11:12 அப்போது நான் அவர்களை நோக்கி, உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்: இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள் என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.  13 ஆண்டவர் என்னிடம், "கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!" என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். 


ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்து இறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் எனக் கூறுகிறது.
ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.
 யூதாசு தற்கொலைக்குப்பின் பாதிரிகள் நிலம் வாங்கினாலும் ரத்நிலம் - யூதாசே நிலம் வாங்கி அந்த நிலத்தில் உடப்பு ஊதி வெடித்து இறந்ததால் ரத்த நிலம். இதிலும்   தீர்க்கம்  நிறைவறியது, அதிலுமே  தீர்க்கம் நிறைவறியது
எது உண்மை? இரண்டுமே பொய்யா?

1 comment:

  1. ஒருவர் ஒரு முறை தான் மரணம் அடைய முடியும்.

    ReplyDelete