9 வயது சிறுமி பலாத்காரம் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் கைது - ADDED : செப் 22, 2025
ஓசூரில் காப்பகத்தில் படித்து வந்த 9 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் பள்ளி தாளாளரான 61 வயதாகும் சாம் கணேஷ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஒரே வளாகத்தில் பள்ளி மற்றும் காப்பகம் நடத்தி வந்த சாம் கணேஷின் பாலியல் துன்புறுத்தல் பற்றி சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மற்றும் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்திய பின் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாலியல் சீண்டலுக்கு உடந்தையாக இருந்ததாக தாளாளரின் மனைவியும் ஆசிரியையுமான ஜோஸ்பின் மற்றும் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்....!
ஓசூர்: ஓசூர் அருகே குழந்தைகள் இல்ல பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், பள்ளி நிர்வாகி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தன்னார்வ அமைப்பு சார்பில், குழந்தைகள் இல்லம் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி நடத்தப்படுகிறது. ஆதரவற்ற அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களின் குழந்தைகள், 33 பேர் இங்கு தங்கி படிக்கின்றனர். இதில், 9 வயது சிறுமி, நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 12ல் மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறி, அவரது தாயை வரவழைத்து அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தெரிய வந்ததால், அவரது தாய், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையில் புகார் செய்தார்.
கலெக்டர் தினேஷ்குமார் பார்வைக்கு இப்பிரச்னை சென்றது. மாணவியை நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நேற்று நேரில் விசாரித்தார்.
இதில், பள்ளி நிர்வாகி ஷாம் கணேஷ், 63, மாணவியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், ஷாம் கணேஷை நேற்றிரவு கைது செய்தனர்.
சம்பவத்தை மறைக்க முயன்றதாக, ஷாம் கணேஷ் மனைவி ஜோஸ்பின், 61, ஆசிரியை இந்திரா, 36, கட்டப்பஞ்சாயத்து பேசிய செல்வராஜ், 63, நாதமுரளி, 37, ஆகிய, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment