Wednesday, July 22, 2015

இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே?

 உலகின் பெரும்பாலன மொழிகளில் பெரும் செலவில் மொழி பெயர்த்து ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பிடும் கிறிஸ்துவ மதத்தின் தொன்மம் புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் இயேசு. இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே. புதிய ஏற்பாடு புராணக் கதைகளை நேர்மையாய் ஆராய்ந்தால் -எழுதியவர்களுக்கு உண்மையான ஏசு பற்றி அறியாது- செவிவழி கதையையே புனைந்தனர் என்பது அறிஞர்கள் ஏற்பது.

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork  

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார். 
நாம் வரலாற்றில் பொதுக் காலம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் ஏசுவை தேடினால் ஏசுவின் கைது, மரண தண்டனை அனைத்தும் ரோமன் கவர்னரே காரணம் எனத் தெளிவாகும்
 யோவான் 18:3 யூதாஸ்  ஒரு ரோமன் படை வீரர் குழுவைக்  கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். 12 ரோமன் படை வீரர்களும் ஆயிரம் வீரர் தலைவனும்  இயேசுவைக் கைது செய்தனர்.
 யோவான் 19:19 ரோமன் கவர்னர் பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.  21 யூதர்களின் தலைமை பாதிரி பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. இயேசு தன்னை யூதருடைய அரசன் என்று சொல்லிக் கொண்டார்   எழுத வேண்டும்” என்றான்.  22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

  நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது -கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன் என்றே பொருள். இயேசுவின் குற்றங்கள் விசாரணைக்குப்பின் தரப்பட்ட மரண தண்டனை தூக்குமரத்தில் தொங்குதலிலும் ரோமன் ஆட்சிக்கு எதிரான ஆயூதத் தீவிரவாதிகளுக்குத் தான்.

யூதப் புராணமான பழைய ஏற்பாட்டின் அடிப்படை இஸ்ரேலின் ஆட்சி உரிமை இஸ்ரேலிற்கான எல்லை தெய்வம் யாவே ஆபிரகாமிற்கு தந்தார் அது பின் தாவீது பரம்பரை எனச் சுருஙும்
 உபாகமம் 17:14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப் போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது.

2 சாமுவேல் 7:8தாவீதுக்கு இதைக் கூற வேண்டும். “நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும், நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். 12 அப்போது உனது சொந்த மகனை அரசனாக்குவேன்.13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன்.16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

இக்கதையை ஸ்தேவான் என்பவர் பேசுவதாய் அப்போஸ்தலர் நடபடிகள் அத்தியாயம் ஏழின் சுருக்கம்
 அப்போஸ்தலர் 7: நமது தேவன் அழைக்க, ஆபிரகாம் கல்தேயர்  நாட்டை விட்டு வந்தார்.தேவன் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் 400 வருடங்களுக்கு  அடிமைப்படுத் மோசமாக நடத்துவர். உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர். பின் மோசே தலைமையில் வெளியே வந்த போது பிற தெய்வ வழிபாடு செய்ததால் நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்

இயேசு 5000 பேருக்கு போதனைக் கதையில், மக்கள் அவரை ராஜாவாக்க கலகம் செய்வர் என

யோவான் 6:15 அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசுவின் கைதின் போது சீடர்கள் ஆயுதம் வைத்துருந்தனர்.
யோவான் 18: 10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான்.
கதைப்படி ஏசு பழைய உடம்பில் மீண்டும் வந்தபோது சீடர் கேட்டதாக
  அப்போஸ்தலர் 1: அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.

அடிப்படைவாத யூதர் தன்னை தேர்ந்தெடுக்கப் பட்டவன் என நம்பி யூதர்  ல்லாதவர்களை மிகக் கேவலமாய் பார்க்கின்றனர். இயேசுவின் இனவெறி இங்கே


மாற்கு 12:14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார்.  16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். 

 ரோமனியர்கள் நாய்கள், துரத்துங்கள் என்பதே இயேசு
 மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.
 மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.  22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே  நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. 

பழங்கதையில் தாவீது பரம்பரை ராஜா- போர் வேற்றி ஆட்சி என்பதை, சில யூதப் பிரிவுகள், முதலில் கிரேக்கர்களும் பின் ரோமன் ஆட்சியும் இஸ்ரேலை அடிமைப் படுத்த யுகம் முடியும் காலம் வந்தது, உலகம் அழியுமுன் இஸ்ரேல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - தாவீது பரம்பரை மனிதன் ஆட்சியைப் பிடித்து நேராக பரலோகம் அழைத்து செல்வர் என எழுந்த ஒரு நம்பிக்கையே கிறிஸ்து வருகை எனும் கோட்பாடு. இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார், ரோமை வீழ்த்த தன்மீது வெற்றிக்கான ஆசி வரும் என நம்பிட, கடைசியில் ரோமன் தூக்கு மரத்தில் தொங்கியபோது கடைசியாய் சொன்னது.   

 மாற்கு 15:34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?”
உலகம் அழியப்போவது மேசியா காலத்தில் எனும் நம்பிக்கையை மாற்றி, இரண்டாவது வருகை அதுவும் மிகச் சில மாதங்களில், திருமணமாகாதோர் திருமணம் செய்ய வேண்டாம் என்ற பவுல் ஏசுவை ஏற்றால் மரணம் கிடையாது, நேராக சொர்கம் என்றார். 
  1 கொரி 15:51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.
யோவான் 6:31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் பூமியில்  என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 

யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.

C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”


இறந்த யூதப் போர் வீர மேசியாவை தெய்வமாக்கிய   கட்டுக்கதையே கிறிஸ்துவம்No comments:

Post a Comment

Pakistan Parliament discussions