கோயமுத்தூர் CSI டையோசிஸ் பிஷப்.துரை அவர்களின் உறவினர்கள் |
பிஷப் அவர்களின் உறவினர்கள் டையோசிஸ்ஸின் முக்கிய பதவிகளில் நிறைந்துள்ளனர். பிஷப்Rt.Rev.துரை அவர்களின் மனைவி Mrs.Rev.சூடாமணி துரை அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட பதவிகள் ஆவன.
1. Ann’s Human Resource Centre,
2. Mother.Jothi - Womens Empowerment 3. Sahayam - Leprosy Rehabilitation 4. Tree - Tribal Women - mowerment - 20 மாவட்டங்களில் நடக்கும் திட்டம் 5. Nesam- Prisoners Family Welfare, 6. Yuvathi- Grilcnild Programme 7. Casu - HIV/AIDS Care and Support, 8. Pasam - Senior Citizen’s Welfare 9. Thunai- Widows Welfare, 10. STC- Secretarial Training Centre 11. Tabitha Tailoring institute, 12. Sengithi - Care for Araramis.
இவைகளில் பெரும்பான்மையானவைகளுக்கு ஜெர்மனி தேசத்திலிருந்து உதவிகள் ஏராளமாக கிடைக்கிறது.
மேலே காணப்பட்ட ஸ்தாபனங்களுக்கு பணவுதவி அவசரமாக தேவை என்று ஜெர்மனி நாட்டில் உள்ள அனைத்து சபைகளுக்கும் உதவி கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
(ஜெர்மனியில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் இதை விசாரித்து இதற்குமுன் கோயமுத்தூர் டையோசிஸ்க்கு அனுப்பப்பட்ட உதவி பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டு மேற்கொண்டபின் மாத்திரமே உதவிகளை அனுப்பி இந்த நல்ல காரியங்களுக்கு உதவலாம். காரணம் இதுவரை பெற்ற உதவிகள் செலவழித்த கணக்குகளில் பல தவறுகள் நடந்துள்ளது என்று கேள்விப்படுகிறோம். ஜாமக்காரனை டொச் மொழியில் மொழிபெயர்த்து வளமையாக சபைத்தலைவருக்கு கொடுக்கும்போது இவ்விவரத்தையும் குறிப்பிட்டு இவைகளின் விவரம் தேவையானால் உங்கள் மூலமாகவே அவர்களை எழுதச்சொல்லுங்கள்).
சேலத்தில் மட்டும் 6 ஸ்தாபனங்களுக்கு பிஷப் அவர்களின் மனைவி தலைவி பதவியில் இருக்கிறார்.
ஆடிட்டர் கணக்குப்படி ஒருமுறை சேலம் வந்தால் 6 ஸ்தாபனங்களிலும் பிரயாண செலவு-உள்பட மற்ற செலவுகளுக்கான பெரும் தொகையாக தனித்தனியாக TA செலவு தொகையைஒவ்வொரு ஸ்தாபனத்தின் பெயரிலும் பெற்றுக்கொள்வதாக செய்திகள் கூறுகிறது. ஆடிட்டர் அவர்களும் அதை ஆட்சேபித்து இருக்கிறார்.
|
கோயமுத்தூர் பிஷப்.துரை அவர்களின் உறவினர்களின் பதவி பட்டியல் |
பெயர் | உறவின் முறை | பதவி |
1. Mr.Murthi | பிஷப்.துரையின் கூடபிறந்த தம்பி | Erode CSI College Secretary |
2. Mr.Dhanabalan | பிஷப்.துரையின் கூடபிறந்த அண்ணன் | CSI ஆரம்ப, தொடக்கப் பள்ளிகளுக்கும் Correspondent ஆக. |
3. Mrs.Sudamanidurai | பிஷப்.துரை அவர்களின் மனைவி | கண் ஆஸ்பத்திரியின் தலைவர், மன நலம் குன்றியவர்களின் விடுதி தலைவர். - Working Womens Hostel தலைவர் - போதகசேகர Chief Executive Officer |
4. Mr.Samuel Sargunam | பிஷப்பின் அண்ணன் மகன் | Treasurer - Visitor பதவி CSI Hr. Sec. Schools, Erode. |
5. Mrs.Metila | பிஷப்பின் அண்ணன் மகள் | CSI Hr. Sec. School, Erode.இன்டர்வியூ இல்லாமலே சேர்க்கப்பட்டவர் இவருக்கு பள்ளி அலுவலக வேலை தெரியாததால் ரிட்டயர்ட் ஆன கிளார்க் தனக்கு உதவியாக தற்காலிக வேலையில் அமர்த்தி 4000 சம்பளமாக கொடுக்கிறார்களாம். |
6. Mr.Daniel Thangam | பிஷப் அண்ணன் மகன் | Paying Hostel Warden. ஏற்கனவே மூன்று இடங்களில் வேலைசெய்து பல குற்றச்சாட்டுகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறார். |
7. Mr.Godwin Santhosh | பிஷப்பின் அண்ணன் மகன் | உடற்கல்வி ஆசிரியர். இவருக்கு சீனியராக பலர் காத்திருக்க எந்தவித இன்டர்வியூயும் இல்லாமல் ஆசிரியர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. |
8. Mr.Edwin Santhosh | பிஷப்பின் மற்றொரு அண்ணன் மகன் | அப்பாசாமி கல்லூரியில் புரொபஸர் வேலை. |
9. Mrs.Jaculin | பிஷப் மனைவியின் தங்கை | CSI (Salem) Hr. Sec. School BTஆசிரியை பதவி |
10. Isreal Uthaya Thangam | பிஷப் அண்ணன் மகன் | CSI விடுதி நோட், புக் சப்ளை செய்வது |
பிஷப்.துரை அவர்களின் சொந்தங்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. மேலே உள்ள பதவி விவரங்களை தொகுத்தவர்கள் அதை எழுதும்போது மேலும் மீதியுள்ள உறவினர் இரண்டு பேர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலே வாசித்த விவரங்கள் எந்த அளவு உண்மையானது. இப்போது அவர்களில் எத்தனை பேர்களுக்கு வேறு புது பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனைபேர் பதவியில் இப்போது இல்லை என்ற விவரங்கள் எனக்கு தெரியாது.
இதில் பிஷப்.துரை அவர்களின் கூடப்பிறந்த தம்பியான மூர்த்தி என்பவருக்குதான் சுமார் 3 கோடி ரூபாய் 3 செக்குகளாக டையோசிஸ்ஸிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கோடிகளின் கணக்கின் விவரத்தை கோயமுத்தூர் இம்மானுவேல் ஆலய வெஸ்ட்ரியில் வைத்து சபைமக்கள் பிஷப்பிடம் கேள்வி கேட்டப்போதுதான் வாடா போடா என்ற ஏகவசனத்தில் கேள்வி கேட்டவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் வெகுண்ட மக்கள் பிஷப் காரையும், பிஷப் மகனின் காரையும் போகவிடாமல் சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
உறவினர் லிஸ்ட்டில் முதலாவதாக காணப்படும் நபர் Mr.மூர்த்தி அவர்கள் ஆவார். இவர் Erode CSI Christian Art College செயலாளராக இருந்தவர் இவர். பிஷப்.துரை அவர்களின் கூடபிறந்த சகோதரர் ஆவார்.
இவரும் முன்னாள் டையோசிஸ் பொருளாளருமான Mr.சுவாமிதாஸ் என்பவரும் மேற்படி கல்லூரி பேங்க் கணக்கில் Co-Signatoryயாக செயல்பட்டு Bank of Maharastra, Erode Branch A/c. CD 100361ல் நான்கு செக் உபயோகித்துள்ளார்.
1. Cheque No.254870 Date 10-08-2007 தொகை 50 லட்சம் 2. Cheque No.254871 Date 15-09-2007 தொகை 50 லட்சம் 3. Cheque No.254872 Date 25-10-2007 தொகை 45 லட்சம் 4. Cheque No.254873 Date 26-11-2007 தொகை 25 லட்சம்
ஒரு கோடியே எழுபது லட்சம் என்ற இந்த மொத்த தொகையானது கல்லூரியின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு வசதிக்காக என்று எழுதப்பட்ட அதற்காக செலவழிக்காமல் இவர்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் வெளியரங்கமான குற்றச்சாட்டு.
மேலும் இந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படி கோயமுத்தூர் டையோசிஸ் நீதி மற்றும் சொத்து பராமரிப்புக்காக ஒரு கமிட்டி உண்டு. அந்த கமிட்டியிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை அல்லது நிர்வாக கமிட்டியிடமாவது அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறைகோடுகளை அறிந்து சிலர் கல்லூரி நிர்வாகக் குழு, அலுவலக பொறுப்பாளர்களிடம் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. கிறிஸ்டியன் வெல்பேர் மூவ்மெண்ட் என்ற சபைக்காக பாடுபடும் நல்லெண்ண சங்கம் 26.8.2008ல் தினத்தந்தி என்ற தினசரி நாளிதழில் எச்சரிக்கை விடுத்தது. அதன்பின் பிஷப் சார்பில் வக்கீல் பதில் எழுதினார். அதன் முடிவு இதுநாள் வரை அறியவில்லை.
ஈரோடு பெண்கள் ஆசிரியர் பயிற்சியில் பள்ளியின் கரஸ்பான்ட்டாக இருக்கும் பிஷப்அவர்களின் உடன்பிறந்த தம்பி திரு.மூர்த்தி அவர்களிடம் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்க 80லட்சம்கொடுக்கப்பட்டது. இதுவரை இதற்கான செலவு செய்ததின் காரணத்தையோ, கணக்கையோ காண்பிக்கவில்லை.
இதுபோல ஏராளமான பெரும்தொகைகளை கையாண்ட திரு.மூர்த்தி அதன் கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இதன் காரணமாக திரு.மூர்த்திஅவர்களுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ்ஸில் விவரம் அறிவிக்கப்பட்டு தேடுதல் ஏற்பாடு நடந்துள்ளதால் மூர்த்தி என்பவர் தேடப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
முன்காலத்தில் பிஷப்பாக பணி செய்தவர் யாவரும் இயேசுவின் வழியை பின்பற்றி நடந்தனர்.
நான் ஊழியம் கொள்ள வரவில்லை. நான் ஊழியம் செய்யவே வந்தேன் என்று இயேசு கூறினார்.
ஆனால் இன்று பிஷப்மார் பதவி ஏற்றவுடன் ராஜாவைப்போல் பவனி வர மிக உயர்ந்த விலையுள்ள பல கார்களை டையோசிஸ் பணத்தில் வாங்கி பவனி வரவே ஆசைப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் பங்களாக்களும், பிளாட்களும், பினாமி பெயரில் சொத்துகளும் வாங்கி குவிக்கின்றனர். தன் சொந்தக்காரர்களை பணம் பெரும்பகுதிகளில் பதவி கொடுத்து அவர்கள் மூலமாக பணக்கொள்ளை அபாரமாக நடைபெறுகிறது. திருமண்டல பொறுப்பாளர்களுக்கும் இதில் பெரும்பங்கு செல்வதால் எல்லா தவறுகளுக்கும் பக்கபலமாக நிற்கின்றனர்.
|
சேலம், சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயத்தின் பொருளாளர் பீட்டர் மார்ட்டின் ஞானமணி ரூ.50 லட்சம் மோசடி
http://www.dinamalar.com/news_detail.asp?id=940963&Print=1
சர்ச்ச எனில் ஊழல் அராஜகம் தானா?
சர்ச்சே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்ச்சில் பாவமன்னிப்பு கேள் எனச் சொன்னால் ஊழல் எப்படி குறையும்
No comments:
Post a Comment