Tuesday, July 7, 2015

மெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம் - அரசு செலவில்

மெக்சிகோவில் வினோத திருமணம்:முதலையை மணந்தார் மேயர்
 article-2687535-1F8AEFC900000578-671_634x381 article-2687535-1F8AF51700000578-543_634x353
சென் பாட்ரோ ஹூவாமெலுலா:மீனவர்களின் நலனுக்காக, மெக்சிகோ நாட்டு நகர மேயர், முதலையை திருமணம் செய்துள்ளார்.மெக்சிகோவின் கடற்பகுதியில் அமைந்துள்ள, சென் பாட்ரோ ஹூவாமெலுலாவில், ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய விழாவில், இத்தகைய திருமணம் நடப்பது வழக்கம்.அதன்படி, கடந்த செவ்வாய் கிழமை நடந்த விழாவில், அந்நகர மேயரான, வாஜக்வெஜ் ரோஜாசுக்கும், மரியா இசபெல் என்னும் முதலைக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், முதலைக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டு, மணப்பெண் போன்று வெள்ளை கவுன் அணிவிக்கப்பட்டது.
கிறிஸ்தவ முறைப்படி, அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்பட்டன. இந்த திருமணத்தில், நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நடந்த விருந்தில், மேயருடன், முதலை நடனம் ஆடியது.மேயருக்கும், முதலைக்கும் நடந்த திருமணத்தில், மேயரின் மனைவி மற்றும் மகன் கலந்து கொண்டனர்.
இந்த வினோத திருமணத்தால், ஆண்டு முழுவதும், ஏராளமான மீன்கள், இறால் மற்றும் கடல் உணவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை, அப்பகுதி மீனவர்களிடம் உள்ளது.
இதற்கு முன், மேயர் ரோஜாஸ் திருமணம் செய்த, பல முதலைகள் குறித்த தகவல்கள், வெளியாகாத நிலையில், மரியா இசபெல்லை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது தெரியவில்லை. இந்த திருமணத்திற்கான செலவு முழுவதையும், டவுன் கவுன்சில் ஏற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...