2 பைகளுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தவர்கள் சந்தேகத்தின்பேரில் பிடிபட்டனர்[1]: 10-10-2015 அன்று பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் 2 பைகளுடன் 4 பேர் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட செம்பியம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து விசாரித்த போது அந்த கும்பல் பணம் இரட்டிப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையில் 5 கருப்பு நோட்டு கட்டுகள் இருந்தன. மற்றொரு பையில் நூறு ரூபாய் அளவிற்கு வெற்று காகித கட்டுகள் இருந்தன. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர்[2]. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[3]. மேலும் நூறு ரூபாய் ஒரிஜினல் பணமும் 5 வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரசாயன பவுடரை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது[4]. இந்த மோசடியில் ஈடுபட்ட –
- கரூர் காந்திபுரம் நீலிமேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த பாஸ்டர் மா. மல்லிகா (52/56),
- தூத்துக்குடியைச் சேர்ந்த / கூடுவாஞ்சேரி நேதாஜிநகரைச் சேர்ந்த ராஜன் (39) என்ற ஜெயசிங் பாக்கியராஜ்,
- தூத்துக்குடி மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த யா.தாம்சன் (24), மற்றும்
- மதுரை திடீர்நகர் அலாவுதீன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மு.சேர்ந்த முகமது யூசுப் (22)
ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.


இது இறையியல் தொடர்கதை
கர்த்தர் தரும் 4 மடங்கு வட்டி-
கோடி கோடியாய் பணம் சுருட்டம்-




No comments:
Post a Comment