Saturday, October 24, 2015

சி.எஸ்.ஐ. மதபோதகர்கள், வணிகர்கள் கைகலப்பில் இறங்கியது ஏன்? -வேதபிரகாஷ்

சி.எஸ்.ஐ. மதபோதகர்கள், வணிகர்கள் 

கைகலப்பில் இறங்கியது ஏன்? இது 

வியாபாரச் சண்டையா, வர்த்தக யுக்தியா, 

அல்லது நிதிமுறை சர்ச்சையா?


மார்த்தாண்டம் பிரச்சினை - நியூஸ்.7. போட்டோ
மார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ
கிறிஸ்தவ மதபோதகர்கள் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத பகுத்தறிவு கொள்கைகளினால்ஊக்குவிக்கபடுகிறார்களா?: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்த ஆட்சியாளர்களின் கீழ் மதநம்பிக்கையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளாளர்கள். குறிப்பாக, அவர்கள் நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டால் கூட, இந்து-விரோத சித்தாந்திகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கோவில்கள், அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். கோடி-கோடிக்கணக்கில் உள்ள அச்சொத்துகளை மாறி-மாறி குத்தகை, ஆக்கிரமிப்பு, பட்டா-மாற்றம் போன்ற வழிகளில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு இடங்கள் அவற்றின் சொத்துகளை அம்மாதிரியே செய்யும் போது கூட அரசு தலையிட முடியாத நிலையுள்ளது. அந்நிலையில் அவர்களே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்குள்ளேயே சண்டைகள் வந்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளார்கள், அவற்றில் மதத்தலைவர்கள் முதல், கீழுள்ள நிர்வாகிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் என்று எல்லோருமே அடக்கம். சி.எஸ்.ஐ பற்றி சொல்லவே வேண்டாம். நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றின் மூலம் அவர்களது விவகாரங்கள் பல வெளிவந்துள்ளன. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் வணிக வளாக வாடகை பிரச்சினை தொடர்பாக போதகர்கள்–வியாபாரிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று வரும் செய்தி வியப்பாக உள்ளது.
பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.
பாஸ்டர்கள் வாடகை விசயத்தில் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015.
சி.எஸ்.பேராயத்திற்கு வணிக வளாகம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. ஆலயம், ஆலய வளாகம் முதலியவை உள்ளது பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகம் தான் இப்பொழுதைய பிரச்சினையில் வந்துள்ளது[1]. இங்கு 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அக்கடைகள் பல வணிகர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த வணிக வளாகம் இருப்பதால் எப்போதும், இங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் கணிசமான பணம் சி.எஸ்.ஐக்குக் கிடைத்து வருகிறது. இந்த கடைகளின் வாடகை மற்றும் வைப்புத்தொகையை அதிகரித்து தர வேண்டும் என பேராய நிர்வாகிகள் அங்கு கடைகளை நடத்தி வருபவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், ஒருசில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.
பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015
பாஸ்டர்கள் ரகளை மார்த்தாண்டம் 20-10-2015
போதகர்கள் மற்றும் வணிகர்களுக்குன் இடையில்கைகலப்பு[2]: இந்தநிலையில், 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரது மத-உடைகளோடு படைப்போல அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் உரிமையாளரிடம் பேராயம் நிர்ணயித்த தொகையை தர வேண்டும் எனவும், வாடகை பாக்கியை முழுமையாக கட்ட வேண்டும் எனவும் கூறினர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சினை முற்றி கைகலப்பு மூண்டது[3]. கிறிஸ்தவ போதகர்கள் அங்கிகளுடன் வணிகர்ளுடன் இவ்வாறு தள்ளுமுள்ளு மற்றும் கைக்கலப்புகளில் ஈடுபட்டது, ஏதோ சினிமா பார்ப்பது போன்றிருந்தது[4]. போதகர்களுக்கு ஆதரவாகவும், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு யாரும் உடன்படாததால் பதற்றம் அதிகரித்தது. இதனை வேடிக்கை பார்க்க நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரும் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். அதன்பின்பு, போதகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்
சண்டையில் ஈடுபட்ட போதகர்கள்
இருதரப்புகளிடையே நடந்த பேச்சுவார்த்தை[5]: இதைத்தொடர்ந்து, 20-10-2025 அன்று மாலை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேராயம் சார்பில் ராபர்ட் புரூஸ், மற்றும் ஜெங்கின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகர்கள் சார்பில் ஓரிரு கடைக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் வாடகை தொடர்பாக இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா, ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், வர்த்தகர்களில் சிலர் இவ்விசயமாக போராட்டம் நடத்தவும், கோர்ட்டுக்குச் செல்லவும் தயாக இருப்பதாகக் கூறியுள்ளனர்[6]. அவ்வணிகர்களில் கணிசமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
சி.எஸ்.பேராயத்திற்கும் வியாபாரத்திற்கும் தொடர்புஉள்ளதா?: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் சி.எஸ்.ஐ. பேராயத்திற்கு சொந்தமான நான்கடுக்கு வணிக வளாகத்தில் 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன என்று பார்த்தோம். 20-10-2015 அன்று காலை திடீரென பேராய போதகர்கள் மத-உடைகளோடு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வணிக வளாகத்திற்கு வந்தனர்.  இப்படி 200 கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட  மதபோதகர்கள் என்பது கவனத்தில் ஈர்ப்பதாக உள்ளது. 200 கடைகளுக்கும் இவ்வாறு 200 மதபோதர்களை பொறுப்பில் போட்டுள்ளார்களா, அவர்களை வாடகை வசூல், வாடகை ஏற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், அவர்களை அவ்வேலையை செய்தது மட்டுமல்லாது, வணிகர்களுடன் சண்டையும் போட்டுள்ளார்கள். மதவுடைகள் அணிந்து கொண்டு, அத்தகைய மதம் சம்பந்தமில்லாத காரியங்களில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்று நோக்கத்தக்கது. அப்படியென்றால், மதவிவகாரங்களைத் தவிர, இவர்களுக்கு இத்தகைய மதம்-சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய அனுமதி உள்ளதா அல்லது இரட்டை வேடம் போட்டு வருகிறார்களா, அல்லது அவ்வுடைகளைப் போட்டு மதச்சாயம் பூசி மிரட்ட வந்தார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது[7]. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அவ்வாறு மதவுடைகளுடன் 200 பேருக்கும் மேலாக போதகர்கள் வந்தார்கள் என்றால், அது தீர ஆலோசித்து, திட்டமிட்டு, முடிவெடுத்த காரியம் என்றாகிறது. திடீரென்று சாதாரணமாக அவ்வாறு வந்துவிட முடியாது. அப்படியென்றால், இவர்களுடைய தலைவர் யார், இவர்களை இவ்வாறு தயார் படுத்தி அனுப்பியது யார், வியாபார விவகாரங்களில் கிறிஸ்த அமைப்புகள் ஏன் ஈடுபடுகின்றன, போன்ற கேள்விகளும் எழுகின்றன.
CSR Marthandam
CSR Marthandam
தாக்கிய பாஸ்டர்மீது வழக்கு[8]: மார்த்தாண்டம் வணிக மையம் [Marthandam Chamber of Commerce] இந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 சதவீதத்திற்கு மேலாக வாடகை உயர்த்தப்பட்டது, குறித்து எதிர்ப்பு தெரிவித்தது. மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இதைப்பற்றி வர்த்தகர்கள் புகாரும் அளித்துள்ளனர்[9].  20-10-2015 அன்று நடந்த வணிகர்கள்-போதகர்கள் கைகலப்பு படம்பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில், மத போதகர் சுரேஷ் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. “புதிய தலைமுறை” நிருபர் கே. மது, போதகர்களினால் தாக்கப்பட்டார். குறிப்பாக சுரேஷ் செல்லக்குமார் என்ற பாஸ்டர் தாக்கியதால் அவர்மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 341, 294 (b), 323 மற்றும் 506 (i) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[11].
CSI Shopping complex,  Marthandam

CSI Shopping complex, Marthandam
திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள்விலையேற்றங்கள்,பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களில்ஈடுபடுவது யார்?: வியாபார விவகாரங்களில் கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால், வியாபாரமும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாகிறது. தீவிரவாதிகள் (ஜிஹாதிகள் முதலியோர்) இந்திய ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்று முன்னரே செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதைய நிதியமைச்சர் சிதம்பரமே அதைப் பற்றி பேசியுள்ளார். இப்பொழுது ஆன்-லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. அதில் யார் பணத்தை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள் என்று தெரியாது.  ஷேர்களை, பொருட்களை வாங்கினால் மட்டும் போறாது, அவற்றை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த அளவுக்கு இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதும், தெளிவாகிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் இத்தகைய திட்டமிட்ட விலைக்கட்டுப்பாடுகள், விலையேற்றங்கள், பொருட்களை  பதுக்கி வைத்தல் போன்ற காரியங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. பொதுவாக, பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய காரியங்கள் நடந்து வருகின்றன. அப்படியென்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களைக் குறிவைத்து, இத்தகைய நாணயமற்ற மற்றும் பொருளாதாரத்த்யை சீர்குலைக்கும், சாதாரண மக்களை சுரண்டும் வேலைகள் நடந்து வருகின்றனவா என்று கவனிக்க வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
21-10-2015
[1]  தினத்தந்தி, வணிக வளாக வாடகை பிரச்சினை:போதகர்கள்– வியாபாரிகள் கைகலப்பு மார்த்தாண்டத்தில்பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 21,2015, 1:47 AM IST.
[4] அதாவது பலத்தை, சக்தியை எம்முறையிலும் உபயோகப்படுத்தத் தயாராக உள்ளனர், அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றாகிறது.
[6]  கோவில் சொத்துகள் என்றால், வேறுவிதமாக இருக்கும், இங்கு உண்மையிலேயே அவ்வாறு செல்வார்களா அல்லது சரசமாகி விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.
[7]  செக்யூலரிஸத்தில், மதத்தையும் மற்ற மதம் சம்பந்தமில்லாத காரியங்களையும் சேர்க்கக் கூடாது என்றுள்ளது. “சர்ச் மற்றும் ஸ்டேட்” தனித்தனி என்று கூறிக்கொள்கிறார்கள்.
[8]  The Hindu, Case registered against pastor, Nagerkoil, October.24, 2015; Updated: October 24, 2015 05:45 IST

[9] நியூஸ்.7, மார்த்தாண்டத்தில் தாக்குதல் தொடர்பாகமதபோதகர் மீது வழக்கு, Updated on October 23, 2015.

[11] In connection with an attack on a reporter of a private television channel, a case has been registered against Suresh Chellakumar, Pastor, CSI church, Thalakkanvilai, by Marthandam police on Thursday. According to the police, K. Mathu (44), working for Puthiya Thalaimurai Television, along with a few other reporters, rushed to the CSI shopping complex in Marthandam on Wednesday for recording the scuffle between members of the Marthandam Chamber of Commerce and CSI pastors. Angered by recording of the scuffle, a few CSI pastors are alleged to have abused Mr. Mathu. The reporter was also allegedly attacked and threatened with dire consequences. Accompanying reporters A. Arul Kumar and Shagayakumar tried to safeguard Mathu from the attack but in vain. Mathu refused to get admitted to a hospital for treatment. Marthandam police have registered a case under Sections 341, 294 (b), 323 and 506 (i) of Indian Penal Code against Suresh alias Suresh Kumar, Pastor, CSI church, Thalakkanvilai, based on complaint lodged by Arul Kumar. Further investigation is on.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா