Sunday, October 25, 2015

கோலியாத்தை கொன்றது தாவீதா - எல்க்கானானா?

தொல்லியல் அகழ்வாய்வுகளின்படி பாலஸ்தீன இஸ்ரேல் பகுதிகளில் மக்கள் குடியேற நாடு ஆனது பொமு 930 வாக்கில் தான். 200 ஆண்டு பின்பு அசிரியர்கள் இஸ்ரேலைத் தாக்கி கைப்பற்ற மக்கள் யூதேயாவில் குடியேறினர். சிறு நாடு ஆனது.

தாவீது ஒரு காட்டுவழி வேடன்/ முரட்டு திருட்டு கும்பல் தலைவனாய் இருக்கலாம். 10ம் நூற்றாண்டில் யூதேயாவின் மக்கள் தொகை 3000பேர் மட்டுமே.


ஆயினும் கதைப்படி கோலியாத்தை தாவீது கொன்றதாக ஒரு இடத்தில் உள்ளது பரப்பபடுகிறது. 

1 சாமுவேல் 17: 49 தாவீது தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான்.

50 இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. 51 அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான்.

கோலியாத்தைக் கொன்றது எல்க்கானான்

பெலிஸ்தரோடு போர்  (ERV)

Image result for david and goliath

2 சாமுவேல் 21:15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான்.  16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 71/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான்.
பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், “இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்” என்றனர்.
18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.
19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. 

யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய)  கோலியாத்தைக் கொன்றான். 

. அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.
20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன்.
ஜேம்சரசன் (KJV) மொழிபெயர்ப்பு என்பது 1611ல் செய்யப் பட்ட போது, மூல ஏட்டில் இல்லாதபடிக்கு இதை  திரித்து  மாற்றி வெளியிட்டனர்.  போர்ஜரி
KJV2சாமுவேல்21:19. பெலிஸ்தரோடு இன்னும் வேறொருயுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
KJV 2Sam21:19 And there was again a battle in Gob with the Philistines, where Elhanan the son of Jaareoregim, a Bethlehemite, slew the brother of Goliath the Gittite, the staff of whose spear was like a weaver's beam. 
 NKJV 2Sam21:19 Again there was war at Gob with the Philistines, where Elhanan the son of Jaare-Oregim the Bethlehemite killed the brother of Goliath the Gittite, the shaft of whose spear was like a weaver’s beam.
ஆனால் மற்ற பதிப்புகள் சரியாக வெளியிட்டுள்ளது. 
இது இக்கால போர்ஜரி எனில், பழங்காலத்திலேயே 1நாளாகமம் 20 ஆசிரியர் திரித்து  மூல மொழியில்  "யாவீரின் மகன் எல்க்கானான் பெத்லகேமியன்" என உள்ளதை எல்க்கானான் லாகேமி எனும் கோலியாத்தின் சகோதரனை என போர்ஜரி திரித்து உள்ளார்.  
 1 நாளாகமம் 20:பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தர்களுடன் கேசேர் நகரில் போரிட்டனர். அப்போது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத மகனான சிப்பாயி என்பவனைக் கொன்றான். எனவே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளானார்கள்.
இன்னொரு தடவை, மீண்டும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களோடு போரிட்டனர். யாவீரின் மகன் எல்க்கானான். இவன் லாகேமியைக் கொன்றான். லாகெமி கோலியாத்தின் சகோதரன். கோலியாத் காத் நகரைச் சேர்ந்தவன். லாகேமியின் ஈட்டி மிகப் பெரிதாகவும் பலமானதாகவும் இருந்தது. அது தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் போல் இருந்தது.
இது போதாது மேலும் பல பைபிளியல் மழுப்பலாளர்கள் "எல்க்கானான்" என்பது தாவீது ராஜா ஆகுமுன்பு பழைய பெயராய் இருக்கலாம் எனவும் கதைக்கின்றனர்.  
The medieval Jewish authors of the Targum Jonathan solved the problem by explaining Elhanan as an alternative name for David, a solution which still has supporters among ultra-conservative Christians and Jews.[ Moshe Garsiel concludes "that Elhanan is David’s previous name before he became king."
Image result for the bible unearthed   Image result for the bible unearthed
தொல்லியல் புதை பொருள் அகழ்வாய்வுகளின்படி, சாலமோன் காலத்திற்குப் பிறகு பாலஸ்தீன இஸ்ரேல் சிறு நாடு ஆனது, ஆனால் யூதேயா நாடாக ஆனது பொமு725க்கு பிறகு தான், எல்லாமே கட்டுக்கதை.

No comments:

Post a Comment