Tuesday, February 9, 2016

Britain - Hindus are more Happy than Christians

"பிரிட்டனில் கிறித்தவர்களைவிட இந்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்"

  • 3 பிப்ரவரி 2016
  • http://www.bbc.com/tamil/global/2016/02/160203_happiest_age_group.shtml?ocid=socialflow_facebook

    • 3 பிப்ரவரி 2016

    பிரிட்டனில் மிகவும் சந்தோசமாக வாழ்பவர்கள் 65 தொடக்கம் 79 வயதானவர்களே Image copyrightPA
    Image captionபிரிட்டனில் மிகவும் சந்தோசமாக வாழ்பவர்கள் 65 தொடக்கம் 79 வயதானவர்களே

    பிரிட்டனில் வாழ்பவர்களில் 65 முதல் 79 வயது வரையானவர்கள் அதிக மகிழ்ச்சியோடிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
    வயது வந்தவர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இதை பரிந்துரைத்துள்ளதாக தேசிய புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.
    இந்த வயது இடைவெளியில் உள்ளவர்களே வாழ்க்கையில் நிறைவாகவும், மகிழ்வாகவும் இருப்பதோடு வாழ்க்கையில் முழுமை அடைந்ததாக கருதுவதாகவும் தெரிவிக்கும் இந்த ஆய்வு, ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் 80 வயதுகளில் குறைந்து விடுவதாகவும் தெரிவிகிறது.
    இதற்கு அவர்களின் உடல் நலிவடைவது, தனியாக வாழநேரும்போது ஏற்படும் தனிமை உணர்வு ஆகியவை காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    பிரிட்டனிலுள்ள 300000 க்கும் அதிகமான 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் இறுதியில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளன.
    அப்படியென்றால் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் அல்லது திருப்தி குறைந்தவர்கள் யார் என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 45 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களே என்ற விடையை அந்த ஆய்வின் முடிவு கொடுத்துள்ளது.

    பிரிட்டனில் இருக்கும் இந்துக் கோவிலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மிலிபாண்ட் (ஆவணப்படம்)Image copyrightPA
    Image captionபிரிட்டனில் இருக்கும் இந்துக் கோவிலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மிலிபாண்ட் (ஆவணப்படம்)

    அதிலும் அந்த வயது வகுப்பில் உள்ள ஆண்கள் பெண்களை விட வாழ்க்கையில் மிக குறைவான திருப்தியுடனேயே வாழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
    மேலும் 45க்கும் 59 க்கும் இடைப்பட்டவர்களே அதிகம் பதட்டப்படுபவர்களாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
    தமது பிள்ளைகளையும் பெற்றோரையும் பாதுகாக்கும் சுமை இந்த வயதெல்லைக்குள் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் உள்ளதால் அவர்கள் தமது வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்தவர்களாக வாழ்வதற்கான காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கும் ஆய்வாளர்கள், தொழில் மற்றும் குடும்ப பொறுப்பு ஆகியவற்றை சமநிலையில் பேணுவதற்கான போராட்டமும் இதற்கான காரணமாயிருக்கும் என்கின்றனர்.
    இந்த வயது எல்லைக்கு குறைவானவர்களும் ஓய்வு பெற்றவர்களும், வேறு செயற்பாடுகளில் தமது பொழுதை அதிகம் கழிப்பதனால் அவர்கள் இவர்களை விட மகிழ்ச்சியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    திருமணமான தம்பதியர் மற்றையோரை விட மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவிக்கும் இந்த ஆய்வு, வேலையில் இருப்பவர்களைவிட வேலை இல்லாதவர்கள் குறைவான திருப்தியுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
    பிரிட்டனில் மத நம்பிக்கையற்றவர்களைவிட மத நம்பிக்கையுள்ளவர்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கும் இந்த ஆய்வு, மத நம்பிக்கையுள்ளவர்களில் ஒப்பீட்டளவில் இந்துமதத்தவர், கிறித்தவம் மற்றும் சீக்கிய மதத்தவர்களை விடவும் கூடுதல் மகிழ்ச்சியானவர்களாக காணப்படுவதாகவும் கூறுகிறது.  
  •  http://www.huffingtonpost.co.uk/2016/02/02/office-for-national-statistics-well-being-data_n_9138076.html  

    Official 'Well-Being' Statistics Show Religious People Are Happier Than Atheists

  •   Religious people from all different faiths are happier than those who have "no religion", official data released on Tuesday revealed.






No comments:

Post a Comment