Thursday, November 27, 2025

தகனம் செய்ய எடுத்துச் சென்ற இறந்த பெண் உயிர்த்து எழுந்தார். ஆதி பாவம் போய்விட்டதா?

தகனம் செய்யப்படுவதற்கு முன், 65 வயது பெண், உயிருடன் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம். தாய்லாந்தில், அறுபத்தைந்து வயசு பெண்

 

தாய்லாந்தில் இறந்துவிட்டதாக நம்பப்பட்ட 65 வயதுப் பெண் சவப்பெட்டிக்குள் உயிருடன் இருந்தார்.   https://www.facebook.com/watch/?v=1373290307829341


தகனம் செய்யப்படுவதற்குச் சற்று முன்னர் அவர் உயிருடன் இருப்பதைக் குடும்பத்தார் அறிந்தனர்.

இறுதி சடங்கில் 65 வயது பெண்ணை தகனம் செய்வதற்கு முன் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்! திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.!!

பாங்காக்கில் தகனச் சடங்கிற்கு முன்பு சவப்பெட்டியில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 65 வயது தாய்லாந்து பெண் பரபரப்பை ஏற்படுத்தி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். https://www.tamilspark.com/amp/world/thai-woman-found-alive-in-coffin

தாய்லாந்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாங்காக்கின் அருகே உள்ள ஒரு கோவிலில், இறுதிச்சடங்கிற்கு தயாராக இருந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகனச் சடங்கிற்கு முன் அதிர்ச்சி

நொந்தபுரி பகுதியில் உள்ள கோவிலில், ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கிற்கு முன் சடலத்தை தயார் செய்துக் கொண்டிருந்த பணியாளர்கள், சவப்பெட்டியின் உள்ளே இருந்து அசைவு கண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் ஏற்பட்ட அவர்களும் பண்டிதர்களும் உடனடியாக சவப்பெட்டியைத் திறந்தனர்.

அசைவைக் கவனித்த கோவில் பணியாளர்கள்

சவப்பெட்டியைத் திறந்தபோது, 65 வயதான சோந்திராட் சாகுல்கூ என்ற பெண் மெதுவாக மூச்சுவிடிக் கொண்டிருந்ததும், உள்ளே மெல்லத் தட்டிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரை இறந்துவிட்டார் என நினைத்து இறுதிச்சடங்கிற்காக தயார் செய்து கொண்டிருந்த நிலையிலேயே இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

உடனடி நடவடிக்கை

இதைத் தொடர்ந்து கோவிலின் மடாதிபதி, அனைத்து சடங்குகளையும் நிறுத்தி உடனடியாக மருத்துவ உதவி ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். சுமார் இரண்டு ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்த அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்த விசாரணை

இந்த சம்பவம் மருத்துவ பரிசோதனைகளில் ஏற்பட்ட தவறு மற்றும் மரணம் உறுதி செய்யும் முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் மற்றும் மருத்துவ அதிகாரிகள் விரைவில் முழுமையான விளக்கத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்புமுனை நிறைந்த இச்சம்பவம் தற்பொழுது சர்வதேச அளவில் பேசப்பட்டு வருவதுடன், உயிர் உறுதிப்படுத்தல் விதிமுறைகளின் அவசியத்தையும் மறுபடியும் வெளிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

முடிச்சூர் 42 கோடி புதிய ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது

 முடிச்சூர் 42 கோடி புதிய  ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது Rs 42-crore omni bus facility inaugurated by chief minister M K Stalin last D...