Thursday, November 27, 2025

சன் டிவி கல்யாண வீடு சீரியல் ஆபாசம், அருவருப்பு & வன்முறை -ரூ. 2.5 லட்சம் அபராதம்

 கல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்

Samayam Tamil•18 Sept 2019, 

https://tamil.samayam.com/tv/news/vulgar-scenes-in-kalyana-veedu-serial-sun-tv-fined-rs-2-5-lakh/articleshow/71181314.cms


கல்யாண வீடு சீரியலில் வந்த சில காட்சிகளுக்காக சன் தொலைக்காட்சி சேனலுக்கு பிசிசிசி அமைப்பு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடர் புகழ் திருமுருகன் இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் தொடர் கல்யாண வீடு . சன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த மே மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் அந்த சீரியலில் காட்டிய காட்சிகள் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு பெண் தன் சொந்த சகோதரியை பலாத்காரம் செய்யுமாறு ரவுடிகளிடம் கூறுவது போன்று காட்சி வைத்துள்ளனர். அந்த காட்சியை 15 நிமிடம் காட்டியுள்ளனர்.
  
ரவுடிகளோ சகோதரிக்கு முன்பாக உத்தரவிட்ட பெண்ணையே பலாத்காரம் செய்ய முடிவு செய்கிறார்கள். அந்த கொடூரம் போதவில்லை என்று கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் பலாத்காரம் செய்தவர்களை தண்டிக்கும் விதமாக அவர்களின் மர்ம உறுப்புகளுக்கு தீ வைப்பது உள்ளிட்ட வன்முறை காட்சிகளை காட்டினார்கள்.

இதையடுத்து சீரியல் குறித்து பலரும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து பிசிசிசி (Broadcasting Content Complaints Council) அமைப்பு சன் தொலைக்காட்சி சேனலுக்கும், தயாரிப்பு நிறுவனமான திரு பிக்சர்ஸுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து கடந்த மாதம் நடந்த விசாரணையில் சன் தொலைக்காட்சியும் சரி, திரு பிக்சர்ஸும் சரி தாங்கள் செய்தது சரி என்று வாதாடின. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், காட்சிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் வாதித்தன.

சன் தொலைக்காட்சி, திரு பிக்சர்ஸ் அளித்த விளக்கத்தை ஏற்க பிசிசிசி மறுத்துவிட்டது. இதையடுத்து சன் தொலைக்காட்சி சேனலுக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது 
பிசிசிசி. மேலும் கல்யாண வீடு சீரியல் துவங்கும் முன்பு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது. அந்த மன்னிப்பு வீடியோவை ஒரு வாரம் காட்ட வேண்டும் என்று பிசிசிசி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pallavar Inscriptions out of India

  1. The Đông Yên Châu inscription is an Old Chambinscription written in an Old Southern Brahmic script, found in 1936 at Đông Yên Châu, nor...