Wednesday, March 23, 2016

Sangam Era Coin with Tamil writings found

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=551322&cat=504

கொற்கை பாண்டியன் கால நாணயம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நேரம்:2016-03-23 12:34:38






சென்னை, : தென்னிந்திய நாணவியல் ஆய்வுக்கழக தலைவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நான் வாங்கி சேகரித்து வைத்திருந்த சங்ககால பாண்டியர் நாணயங்களை வேலை பளு காரணமாக முழுமையாக ஆய்வு செய்யாமல் வைத்திருந்தேன். இந்நிலையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த நாணவியல் அறிஞர் ஒருவர் நான் எழுதிய புத்தகத்தில் உள்ள நாணயங்களின் புகைப்படங்கள் தேவை என கேட்டிருந்தார்.

அவர், தொண்மையான நாணயங்களை ஆய்வு செய்து நூல் ஒன்றை வெளியிட விரும்பினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், நான் பாதுகாத்து வரும் நாணயம் ஒன்றை எடுத்து ஆய்வு செய்து அதுபற்றிய குறிப்புகளை கொடுத்துள்ளேன்.  அதாவது, நாணயத்தின் முன்புறம் யானை ஒன்று வலபக்கம் நோக்கி நிற்கிறது. அதன் மேல் இடப்பக்கத்தில் ‘மா’ என்ற எழுத்து உள்ளது. இது மவுரிய பிராமிய வகை எழுத்து. அதை அடுத்து ‘ற’ என்ற எழுத்து உள்ளது. இது தமிழ் பிராமி வகையை சேர்ந்தது. அதற்கு அடுத்ததாக ‘ன்’ என்ற எழுத்து உள்ளது. இதுவும் தமிழ் பிராமி வகையை சேர்ந்தது. ஆக இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்து மாறன் என்று படிக்க முடிகிறது.  பின்புறத்தில், நடுவில் வேலியிட்ட மரம் போன்ற சின்னம் உள்ளது. வலது பக்கத்தில் மரக்கிளைகள் உள்ளன.

வலது பக்கத்தின் அடி மூலையில் ஆறு முகடுகளை கொண்ட மலைச்சின்னம் உள்ளது. மரத்தின் இடப்பகுதி தான் ஆய்விற்கு முக்கியமான பகுதி. இதில் ஒரு முக்கோண எல்லைக்கோடு உள்ளது. ‘மா’ என்ற எழுத்து ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பானை ஓடுகளில் காண முடிகிறது. இதன் காலம் 5ம் நூற்றாண்டு. இந்த நாணயத்தை கொற்கை பாண்டியன் வெளியிட்டிருக்கலாம்.

No comments:

Post a Comment

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!  Fri, 04 Mar 2022 15:49:55 IST    by  Vasu https://www.t...