இன்றைய இந்துவில் வந்திருக்கும் பொள்ளாச்சி சம்பவம் எனக்கு நினைவில் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடந்த்து நினைவில் இருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீ வைத்துக் கொன்ற சம்பவமும் நினைவில் இருக்கிறது. ஆனால் இருநூறு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதெல்லாம் பின்னால் கட்டமைக்கப்பட்டது.
திமுகவின் அடிப்படைப் பிரச்சினை ஆரம்பகால முதலில் இருந்து இன்றுவரை எதையும் மிகைப்படுத்துவதுதான். வரலாற்றை அணுகுவதிலிருந்து மனிதர்களுக்கு அரிதாரம் பூசி மாமனிதர்களாகக் காட்டுவது வரை. இதனால்தான் நடக்காத சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்படுகின்றன. சரியாக எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் திராவிட வல்லுனர்களாக அறியப்படுகிறார்கள்.. உதாரணமாக பொள்ளாச்சி சம்பவம் குறித்து திரு. அ ராமசாமி எழுதிய புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றிற்கு ஆதாரம் என்ன என்ற கேள்வியை திராவிட இயக்கத்தினர் ஒரு போதும் கேட்க மாட்டார்கள்.
1. 1967லிருந்து இன்று வரை திராவிட ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. 60 வருடங்களாக இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பொள்ளாச்சி படுகொலை பற்றி இதற்கு முன்னால் எங்காவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2. படத்தின் இறுதியில் பொள்ளாச்சியில் இருநூறு பேர்கள் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது என்ற செய்தி வருகிறதாம். உண்மையாக இருந்தால், இது காங்கிரஸ் கட்சி மீது செய்யப்பட்டிருக்கும் மிகப் பெரிய அவதூறு. தயாரிப்பாளர்கள் மீது காங்கிரஸ் கட்சி அவதூறு வழக்குத் தொடர வேண்டும்.
3. வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களில் கற்பனை நிச்சயம் இருக்கலாம். இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றைத் திரிக்கும் விதமாக கற்பனை கட்டுத் தெரித்து ஓடக் கூடாது.
4. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நிச்சயம் தமிழைக் காப்பதற்காக அல்ல. அது ஆங்கிலத்தைக் காப்பதற்காக நடந்த போராட்டம்.. அன்று பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம். தமிழுக்கு அன்று எந்த ஆபத்தும் இல்லை. இதையும் காங்கிரஸ் உரக்கச் சொல்ல வேண்டும்.
5. தமிழை திராவிட இயக்கத்திற்கு யாரும் மொத்தக் குத்தகைக்குக் கொடுத்து விடவில்லை. தனித்தமிழ் இயக்கங்களுக்கும் கொடுத்து விடவில்லை. தமிழ் நம் மொழி. அதை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தமிழராக பிறந்த நமக்கு, தமிழ் மீது பலனை எதிர்பார்க்காத அன்பு கொண்ட நமக்குத் தெரியும். இவர்கள் கொடுக்கும் ஊதுகுழல்கள் நமக்குத் தேவையில்லை. நிச்சய்ம் தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஊதுகுழல்கள் நமக்குத் தேவையில்லை.
No comments:
Post a Comment