Wednesday, January 14, 2026

தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு

 

 

இதற்கு பதில் சொல்ல குறுக்கே புகுந்த ராஜீவகாந்தி வழக்கம் போல, கல்வி நிதி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், என வரிசையாக பட்டியல் போட்டாரே தவிர எவ்வளவு என்று சொல்லவில்லை. ஆனால் சுமந்த "எவ்வளவு கொடுக்கனு, ஒரு நம்பரை சொல்லுங்க " என்ற அந்த கேள்வியில் விடாப்பிடியாக இருந்தார். உடனே ராஜீவகாந்தி மெட்ரோ திட்டம், கோவை மெட்ரோ என உளற ஆரம்பித்தார். ராஜீவகாந்தி சொன்னதில் நாம் கவனிக்க வேண்டிய பாயிண்ட், " பட்ஜெட் மேனேஜ்மேண்ட் சட்டப்படி பீஹார், உத்தரப்பிரதேசத்துக்கு அதிகமாக கொடுக்கிறார்கள், தமிழகத்துக்கு குறைவாக கொடுக்கிறார்கள்" என்று உளறினார். அதுவும் பொய். காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பீஹார், உத்தரப்பிரதேசங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
சுமந்த் விடாப்பிடியாக இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்த போது, அரங்கில் இருந்த ராமசுப்பிரமணியன் பதில் சொல்ல வந்தார். "தமிழக நிதியமைச்சர் 3 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மேலும் ஜி எஸ் டி இழப்பு 20000 கோடி என்று சொல்லியிருக்கிறார் " இதை வாங்கி கொடுங்கள் என்று எகத்தாளமாக பேசினார். விவாதத்தை இங்கேயே கட் செய்வோம்.
சரி தங்கம் தென்னரசு இந்த தொகையை குறிப்பிட்டாரா என்றால், ஆமாம், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடன் சம்பந்தமாக கேள்விகள் எழுந்த போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதி பங்கீட்டு கணக்கில் மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் இழந்த தொகை 2.63 லட்சம் கோடி என குறிப்பிட்டார். அதையும் ராமசுப்ரமணியம் தவறாகவே குறிப்பிட்டார்.
இந்த 2.63 லட்சம் கோடி என்ன கணக்கு? தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லையா என்றால் அங்கே தான் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
இந்த தொகை வராமல் போவதற்கு தங்கம் தென்னரசு சொன்ன காரணம் " 9வது நிதிகமிஷனில் 7.9%மாக இருந்த தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு, 15வது நிதிகமிஷனில் 4.08%மாக குறைந்து விட்டது" என்றார். அந்த குறைக்கப்பட்ட சதவிகிதத்தை தொகையாக மாற்றினால் வருவது தான் 2.63 லட்சம் கோடி. (சரி இதென்ன 7% 4% கணக்கு என்றால் அதற்கான விளக்கம் கீழே இருக்கிறது. )
9வது நிதிகமிஷன் இருந்த ஆண்டு 1989-1995
15வது நிதிகமிஷன் இருந்த ஆண்டு 2021-2026 (பார்க்க படம்)
8% ஆக இருந்த தமிழகத்தின் நிதிப்பகிர்வை 4%மாக குறைத்து பாஜகவா? பாஜக ஆட்சிப்பொறுப்பில் வந்த பிறகா குறைக்கப்பட்டது. இல்லவே இல்லை. 2014- காங்கிரஸ் திமுக கூட்டணியில் தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு 4.9%மாக இருந்தது. 8% தில் இருந்து 5% ஆக குறைந்து போது மத்தியில் திமுக தான் ஆட்சியில் பங்கில் இருந்தது. அப்போதெல்லாம் இதைப்பற்றி திமுக வாய் திறந்து பேசியதே இல்லையே. தமிழகத்தின் நிதிப்பகிர்வை 3% குறைத்த போது மந்திரி பதவிக்காக காங்கிரசை மிரட்டி கொண்டிருந்ததே தவிர தமிழகத்தின் உரிமை என்று பேசியதே இல்லை.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 4.9%த்தில் இருந்து 4.08%மாக குறைந்திருக்கிறது. பாஜக அரசில் 1% மட்டுமே குறைந்திருக்கிறது. ஆனால் தங்கம் தென்னரசு மொத்த பழியையும் பாஜக மீது போடுகிறார்.
இன்றைய கேள்வி என்ன? தமிழகம் ஏன் இவ்வளவு கடன் வாங்குகிறது? இவ்வளவு கடன் வாங்கி என்ன செய்கிறீர்கள்? கடன் வாங்கி வட்டி கட்டினால், அது என்ன மாதிரியான நிதி நிர்வாகம்? என்பது தான் கேள்வி. ஆனால் தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைத்துக்கொள்ள மத்திய அரசின் மீது பழி போடுகிறார் நிதியமைச்சர்.
அதுவும் எப்படி? நிதிகமிஷன் நிதிப்பகிர்வை குறைத்தால் தான் தமிழகம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது என்று சப்பை கட்டு காட்டுகிறார். அந்த வாதத்தை எடுத்து வைத்த ராமசுப்ரமணியனும், ராஜீவகாந்தியும், மத்திய அரசிடம் இதை வாங்கித்தர சுமந்த் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நக்கல் அடிக்கிறார்கள்.
1989-ல் இருந்து படிப்படியாக குறைந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே 4%மாக நிலைபெற்றுவிட்டது. ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவிடம் ஏனய்யா இவ்வளவு கடன் வாங்குகிறீர்கள் என்று கேட்டால் 30 வருட கதையை சொல்கிறார்கள். திமுகவே சொல்வது போல் தமிழகத்தின் நிதி உரிமையை காங்கிரஸ் அரசாங்கம் பறித்த போது, வாய் மூடி மவுனமாக உடன் இருந்தது திமுக தான். கச்சத்தீவு, மீத்தேன், மீனவர் பிரச்சினை, நீட் போல தமிழகத்திற்கு உரிய நிதி வராமல் போனதற்கும் காரணம் இதே காங்கிரஸ்+திமுக தான்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு (devoultion) 31% தான்.
Devoultion , Divisible pool போன்ற வார்த்தைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசுக்கு கிடைக்கும் அனைத்து வரி வருமானங்களை ஒன்றாக இணைத்து, வருமான வரி, கார்ப்ரேட் வரி, எக்ஸைஸ் வரி, சிஜிஎஸ்டி என அனைத்து வரி வருமானத்தையும் இணைத்து அதில் மாநிலங்களுக்கு பங்கு தரவேண்டும். இதைத்தான் நிதிகமிஷன் செய்கிறது. இதற்கு பெயர் தான் Divisible Pool. பார்க்க படம்.
குஜராத் முதல்வராக மோடி அவர்கள் இருந்த போது, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் பிரதமரான பிறகு 31% என்பதை 42%மாக உயர்த்தியும் கொடுத்தார். எல்லாவற்றிலும் மோடியை பின்பற்றும் ஸ்டாலினும், நிதிப்பகிர்வை 50%மாக உயர்த்த வேண்டும் என்று சமீபத்தில் நடந்த 16வது நிதிகமிஷன் கூட்டத்தில் பேசினார் என்பது உப தகவல்.
Devolution Formula - சரி மாநிலங்களுக்கு 42% என்று முடிவாகி விட்டது. இதை எப்படி எல்லா மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகை மாறுகிறது, நிலப்பரப்பு மாறுகிறது, இதையெல்லாம் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது தான் devoultion formula . (பார்க்க படம் ). ஒவ்வொரு மாநிலத்தில் மக்கள் தொகை, மக்களின் வருமானம், சூழலியல், நிலப்பரப்பு, வரிவிகிதம் இவற்றை கணக்கில் கொண்டு, எந்தெந்த மாநிலத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதையும் நிதிகமிஷனே முடிவு செய்யும். இதில் தான் தமிழகத்துக்கு 8%மாக இருந்த வரிப்பகிர்வு, 4%மாக குறைந்திருக்கிறது. பீஹாருக்கும், உபிக்கும் அதிகமான நிதிப்பகிர்வு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதே பார்முலா தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
என்னைப்போல கணக்கில் வீக்கானவர்களுக்கு இன்னும் கொஞ்சம் புரியும்படியாக விளக்கம்.
மத்திய அரசுக்கு 100 ரூபாய் வரி வருமானம் என்றால் அதில் 42 ரூபாயை மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டும் என்பது தான் Divisible pool . அந்த 42 ரூபாயிலிருந்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தான் Devoultion Formula . மத்திய அரசுக்கு 100 ரூபாய் வரி வருவாய் என்றால் அதில் 58 ரூபாய் தான் அவர்களுக்கு. அதில் தான் இராணுவம், கடற்படை, விமானப்படை, இஸ்ரோ, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், சம்பளம் என அனைத்தையும் செய்கிறது. அது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் சமூக நல திட்டங்களுக்கும் பங்களிப்பு செய்கிறது என்பதையும் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.
மாநிலங்களை பொறுத்தவரை மாநிலத்துக்கென்று தனி வரி வருவாய் இருக்கிறது. அதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரி இப்போது மீண்டும் தமிழக அரசின் கடன் மற்றும் வஞ்சிப்பு பிரச்சாரத்திற்கு வருவோம்.
மத்திய அரசுக்கு 30 லட்சம் கோடி வரி வருவாய் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் 41% (தற்போதைய வரிப்பகிர்வு ) 9.3 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பிரித்து தர வேண்டும். அந்த 9.3 லட்சம் கோடியில் தமிழகத்துக்கான பங்கு 49,200 கோடி ரூபாய். இதுவே காங்கிரஸ் ஆட்சி காலத்தின் பார்முலாவாக இருந்தால், வரிப்பகிர்வு 5% ஆக இருந்த போதிலும் 46200 கோடி ரூபாய் தான் கிடைக்கும்.
ஆக காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தை விடவும் மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுப்பது மோடி தான் என்பது அப்பட்டமான உண்மை.
அப்படியிருக்க மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, நிதி தர மறுக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்று திமுகவின் பிரச்சாரமெல்லாம் பாஜக வெறுப்பை இங்கே விதைப்பதற்காக செய்யப்படும் நாடகம் தான். மேலும் நிதி மேலாண்மையில், அரசு நிர்வாகத்தில் தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைத்துக் கொள்வதற்காகவும் மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த கணக்குகள் பாமர மக்களுக்கு தெரியப்போவதில்லை என்பதால், மக்களின் அறியாமையை பயன்படுத்தி பொய்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் அனைத்திற்கும் மிகக்குறைவான வரிபகிர்வே தரப்படுகிறது. (பார்க்க படம் )
குஜராத் - 3.4%
மஹாராஷ்டிரா - 6.3%
கர்நாடகா - 3.6%
இந்தியாவில் பீஹாரும், உத்தரப்பிரதேசமும் தான் அதிக நிதிப்பகிர்வு மாநிலங்கள்.
பீஹார் - 10%
உத்தரபிரதேசம் - 18%
இது தான் இவர்கள் கண்ணை உறுத்துகிறது. இரண்டுமே பாஜக ஆட்சி என்பதால் திரும்ப திரும்ப உத்தரப்பிரதேசத்தை பார், பீஹாரை பார் என்று உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் உண்மை என்ன. காங்கிரஸ் ஆட்சியிலும் பீஹாருக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் அதிக நிதி வழங்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் திமுக வாயை திறக்கவே இல்லையே. நடந்து முடிந்த பீஹார் தேர்தலில் ஒருவேளை பாஜக தோற்று, இந்தி கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தாலும் பீஹாருக்கு 10% கிடைக்கும். வருகிற உபி தேர்தலில் இந்தி கூட்டணி ஜெயித்தாலும் அதே 18% தான் கிடைக்கும்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதிபகிர்வு கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மேற்குவங்காளம் 7.5 % பெறுகிறது.
அதே சமயம் மத்திய அரசு தன்னுடைய நிதியை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் செலவு செய்யும். இவர்கள் அதையும் குற்றம் சொல்கிறார்கள். மேலும் மத்திய அரசு தன்னுடைய நிதி ஆதாரத்துக்காக Cess , Surcharge வசூலிக்கிறது. அதிலும் மாநிலங்களுக்கு பங்கு வேண்டும் என்று எதிர்க்கட்சி மாநிலங்கள் கேட்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வரிப்பகிர்வு மட்டும் அல்லாமல் Grant in-aids என்ற பெயரில் எல்லா மாநிலங்களுக்கும் நிதி ஆதாரத்திற்கு சப்போர்ட் செய்கிறது மத்திய அரசு. இவையில்லாமல் மத்திய அரசு திட்டங்களுக்கான தொகை தனி.
தமிழக அரசின் பட்ஜெட் டாக்குமென்ட படி சென்ற நிதி ஆண்டில் 2024-2025 நிதி ஆண்டில் மத்திய அரசு கொடுத்த நிதி மொத்தமாக 73,109 கோடி.
Grant in-aids - 23,354 கோடி
Central ஷேர் - 49755 கோடி.
அதுவே 2025-2026 நிதி ஆண்டில் 81,856 கோடி மத்திய அரசு கொடுக்கிறது.
Grant in-aids - 23,834 கோடி
Central ஷேர் - 58022 கோடி.
மோடி அவர்களின் வளர்ச்சி கொள்கைகளாலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் சிறப்பான நிதி நிர்வாகத்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கு 1,54, 965 கோடி நிதியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டே சொல்கிறது.
இவ்வளவையும் வாங்கி கொண்டு மத்திய அரசு நிதியே தரவில்லை என்று ஒப்பாரி வைக்கிறது திமுக. தங்களின் மோசமான நிர்வாகத்தை பாஜக மேல் பழி போட்டு மறைத்துக் கொள்கிறது திமுக. தங்களை நோக்கி வரும் கேள்விகளை தவிர்ப்பதற்காக பொய்களை மட்டுமே சொல்கிறது திமுக.
மக்களுக்கு இந்த உண்மைகளை கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் பூனைக்கு மணி கட்ட போவது யார்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களை chatgpt யிடம் கேட்டு பெறப்பட்டு வெரிஃபை செய்யப்பட்டவை. படங்கள் chatgpt மூலம் உருவாக்கப்பட்டவை. நீங்களே நேரடியாக chatgpt இடம் கேட்டு verify செய்து கொள்ளலாம்.




No comments:

Post a Comment