Monday, January 12, 2026

ஹிஜாப் / புர்கா : மத கட்டளையா? அல்லது –சமூக ,கலாச்சார் ஆடையா? - சாதிக் சமத்

 ஹிஜாப் / புர்கா : மத கட்டளையா? அல்லது –சமூக ,கலாச்சார் ஆடையா?




குரானில் எங்குமே

“இந்த வடிவிலான இந்த நிறத்தில் இந்த நீள அகலத்தின் துணியே இஸ்லாமிய அடையாளம்”
என்று இல்லை பணம் கொடுத்து முக்காடு வாங்கி அணியவேண்டும் என்று குரான் எங்குமே சொல்லவில்லை.

புர்கா ,ஹிஜாப் முக்காடு:
துணியின் வடிவம் அதில்
நிறம்
தையல்
சுற்றளவு அளவு, கலைநயம் ,மதிப்புக்கூட்டல் விலை ஆகியவை மட்டுமே ஹிஜாப்,புர்காவில் இருக்கிறது
மாறாக
அதில் இறையச்சம் பணிவு ,பார்வையை தாழ்த்துதல் ,ஜினா(விபச்சாரம்),ஃபாஹிஷா (மானக்கேடு /அருவறுப்பு )அதில் இல்லை

குரான் எதையும் ஸ்டாண்டர்ட் யூனிஃபாரமாக நிர்ணயிக்கவில்லை.

👉 புர்கா / ஹிஜாப் என்பது:

அரேபிய, பெர்சிய, பைசாண்டிய யூத,கிருத்துவ கலாச்சாரங்களில் இருந்த pre-Islamic உடை .
இஸ்லாத்தின் சொந்த தயாரிப்பு அல்ல .

பின்னர் “இஸ்லாமிய அடையாளம்” என மௌலவிகள் மூலமும் ஆட்சி அதிகாரம் மூலம் புனிதப்படுத்தப்பட்டது
ஆனால்

இன்று கடையில் காசு கொடுத்து வாங்கும் ஒரு துணிக்கு
தெய்வீக புனிதம் கொடுத்து மத உரிமையாக மாற்றுவது அயோக்கியதனமானது

முஸ்லிம் பெண்கள் யூடிபில் பேசினால் இன்ஸ்டாகிராம் முகநூலில் பாட்டு பாடினால் டான்ஸ் ஆடினால் முனை வெட்டப்பட்ட முல்லாகளுக்கும் மூமின்களுக்கும் பிபி எகிறிவிடுகிறது

“இஸ்லாத்தை இழிவுபடுத்துகிறாள்” –
“இஸ்லாத்தை அவமதிக்கிறாள்” ஹிஜாப் அணிந்து டான்ஸ் ஆடுகிறாள் புர்கா அணிந்து ரீல்ஸ் போடுகிறாள் என்ற சிரைத்த மீசைகளின் கூக்குரல் மதினா கப்ருஸ்தான் வரை கேட்கிறது

ஆனால்:

சினிமாவுக்கு ஃபைனான்ஸ் போடும் முஸ்லிம்களுக்கு எதிராக சினிமாவில் நடிக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு எதிராக சினிமாவில் இசையமைக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு எதிராக சினிமாவில் இயக்குனராக இருக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு எதிராக முஸ்லிம் சினிமா பாடகருக்கு எதிராக முஸ்லிம் சினிமா ஒளிப்பதிவாளருக்கு எதிராக இந்த முனைவெட்டிகள் கருத்துக்கள் கூறுவது இல்லை எந்த தா(K)டி மௌலவியும்
எந்த ஜும்ஆ உரையிலும்
ஆவேசப்படுவது இல்லையே ஏன் ?

இது மதமல்ல — மார்க்கம் என்று கதறுவோரே..

-பேண்ட்,கோட் ,கவுன் ,மேக்ஸி→ கிறிஸ்தவ அடையாளம் என்று யாரும் கூறுவது இல்லை

வேஷ்டி,புடவை,ஜாக்கெட் ,பாவாடை,சுடிதார் → ஹிந்து அடையாளம் என்று யாரும் கூறுவது இல்லை

கைலி / லுங்கியை → நாத்திகர்களான பெரியார்,கலைஞர் உடுத்திய போது எவனும் இது முஸ்லிம் அடையாளம் என்று சொல்லவில்லை

தொப்பியை எம்.ஜி.ஆர் ,நேரு ,சாவர்க்கர் அணிந்திருந்தபோது இது முஸ்லிம் அடையாளம் என்று எவனும் சொல்லவில்லை

அப்படியென்றால்:

🤔 ஒரு பெண் தனக்குப் பிடித்து,
தன் பணத்தில் வாங்கி அணியும் துணி
எப்படி “இஸ்லாத்தின் சொத்து” ஆகிறது?

குர்ஆன் முழுவதும்:
தக்வா → உள்ளார்ந்த நிலை
அமல் → செயல்
அக்லாக் → நடத்தை
இவை எதுவும்:
“இந்த வகை உடை அணிந்தால் தான் பணிவு” வரும்
என்று ஒரே இடத்திலும் சொல்லப்படவில்லை.
குர்ஆன் 49:13
“அல்லாஹ்விடம் உயர்ந்தவன் – அதிக தக்வா உள்ளவன்”

ஹிஜாப் / புர்கா — குர்ஆனில் இல்லாத “மத அடையாளங்கள்”

“ஹிஜாப் அணியுங்கள்” — குர்ஆன் சொல்லவில்லை
“புர்கா அணியுங்கள்” — குர்ஆன் சொல்லவில்லை குரானில் பல வசனங்களில் ஹிஜாப் என்ற வார்த்தை வருகிறது ஒரு வசனத்தில் கூட அது பெண்களின் அன்றாட ஆடை என்ற அர்த்தத்தில் வரவில்லை
குர்ஆனில் வரும் சொல்:
ஜில்பாப் (جلباب) அதுவும் முஹம்மதின் மனைவிகளுக்கு முஹம்மது அல்லாஹ்வின் பெயாரால் கூறியது
33:59
“நபியின் மனைவிகளுக்கும், மகள்களுக்கும்,
மூமினான பெண்களுக்கும் —
தங்கள் ஜில்பாப்களை தாழ்த்திக் கொள்ளச் சொல்லுங்கள்”
👉 காரணம்:
அதுவும் குரானில் கூறப்பட்டுள்ளது
அடையாளம் காணப்பட
விமர்சனம் / தொந்தரவு தவிர்க்க
📌 இது:
ஆன்மீக உத்தரவு அல்ல
விமர்சனங்களுக்கு அஞ்சி பாதுகாப்புகளுக்கான கட்டளை/ உத்தரவு.

முதலில் யாருக்கு? — நபியின் மனைவிகள்

“அதிகமான எண்ணிக்கை — முஹம்மதின் மனைவிகள்”
ஆம்.
ஏன்?
அவர்கள் public figures உம்முல் மூமினாத்தி
அவர்களைப் பற்றி வதந்தி / அரசியல் தாக்குதல்
சமூக குழப்பம்
👉 அதனால்:
முக்காடு = பாதுகாப்பு / அடையாள உத்தரவு
இது அனைவருக்குமான யூனிஃபாரம் அல்ல
இன்னொரு முக்கிய கண்டிஷன் /கட்டளை குரான் சொல்கிறது

மூமினான பெண்கள்” — இங்கே தான் அதிகார மோசடி
குர்ஆன் தெளிவாக:
முஸ்லிம் ≠ மூமின்
📌 குர்ஆன் 49:14

> "நீங்கள் மூமின்கள் இல்லை; 'முஸ்லிம்கள்' என்று சொல்லுங்கள். ஈமான் இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை."

👉 அதாவது: முஸ்லிம்களுக்கு ஈமான் உள்ளே நுழையவில்லையாம்
மூமினுக்கு மட்டும் உள்ளே நுழைந்து விட்டதாம் = உள்ளார்ந்த நம்பிக்கை
அது அல்லாஹ் மட்டுமே அறிந்தது ஜில்பாப் முஹம்மதின் மனைவிகளுக்கும் நபியின் மகள்கள்
இவர்கள்:
பொதுமக்கள் அல்ல அடுத்து
மூமினான பெண்களுக்கு மட்டுமே

அப்படியிருக்க:
“இவள் மூமினா?” அவள் முஸ்லிமா
என்பதை எப்படி அறிவது
👉 மௌலவிகளுக்கு என்ன ரிசீட்?
யார் தீர்ப்பு சொல்வது? — இதுதான் மையக் கேள்வி

“ஒரு முனையறுத்த மௌலவி
தன் வீட்டிலுள்ள பெண்களையே
யார் முஸ்லிம், யார் மூமின்
என்று வரிசைப்படுத்த முடியாத போது
ஊரில் உள்ள பெண்கள்மீது அதிகாரம் செலுத்துவது எப்படி சரியாகும் ?”
📌 இஸ்லாமிய உரையில்:
நிய்யத் (intention)
ஈமான் (faith)
இரண்டும்:
❌ மௌலவிகாளால் அல்லது அவர்களது அடிப்பொடிகள் தீர்மானிப்பதோ தீர்ப்பளிப்பதோ அல்ல
✅ அல்லாஹ் மட்டுமே தீர்ப்பான்
அப்படியென்றால்:
பெண்களின் உடையை
= ஈமானின் அளவுகோல்
என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்

குர்ஆன் கூறுவது:

நிய்யத் (உள்ள நோக்கம்) அல்லாஹ்வுக்கே தெரியும்

ஈமான் அல்லாஹ்வுக்கே உரியது

ஆனால் நடைமுறையில்:
பாய்மார்கள்

முஸ்லிம் பெண்ணின் ஆடைக்குள் = ஈமானை தேடுகிறார்கள் ஆடைகளை பெண்களின் ஈமானுக்கு தக்வாவிற்கு அளவுகோல் என்கிறார்கள்

முஸ்லிம்ஆணின் செயல்கள்? கணக்கில் இல்லை

#முதலில்_நீங்கள்_திருந்துங்கடா

இது இந்தியா / ஆப்கான் / ஈரான் அல்ல

ஈரான் பெண்களே முக்காடுகளுக்கு எதிராக முனைவெட்டிகளை நோக்கி குரல் எழுப்பி வரும் வேளையில் தமிழகத்தில்/இந்தியாவில் பஞ்சா ஆடுகிறீர்களே வேலைக்கு ஆகுமா?

"முஸ்லிம் அடையாளம்" என்ற பெயரில்
பெண்கள் மீதான சமூக அழுத்தம்
தொடர்கிறது இதை அரசும் கண்டுக்கொள்வதில்லை காவல் துறையும் கண்டுக்கொள்வதில்லை
இங்கேயுள்ள சமூக போராளிகளோ மதியம் “பாய் கடை” பிரியாணி பொட்டலத்திற்காக வாய்மூடி இருக்கிறார்கள்

உன் மதம் உண்மையில் வலுவானதாக இருந்தால்:
ஒரு டான்ஸ் வீடியோவால்
ஒரு இன்ஸ்டா ரீலால்
அது “இழிவடையாது” டா

சாதிக் சமத்

No comments:

Post a Comment

திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக SG.சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது

 திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது தினத்தந்தி அலுவ லக ...