தி.மு.க.தேர்தல் வாக்குறுதி-- 1967
தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி சிதைத்த 1967 சட்டமன்ற தேர்தல்.
"ஐய்யய்யோ பொன்னம்மா!
அரிசி விலை என்னம்மா?"
"காமராஜ் அண்ணாச்சி! கருப்பட்டி விலை என்னாச்சு?"
"கக்கா! மாணவர்கள் என்ன கொக்கா?"
*அது மட்டுமா...*
"கூலி உயர்வு கேட்ட அத்தான்...
குண்டடி பட்டு செத்தான்"
என, உணர்ச்சிமிகு கோஷத்தோடு...
*வாக்குறுதிகள் வேறு!*
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை பயன்படுத்தி...
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு ஒரு படி அரிசி...
உடனே கிடைக்கும்.
படிப்படியாக...
ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம்."
"பையிலே பணம்; கையிலே அரிசி"
"கடல்நீரை குடி நீராக்குவோம்...
*கடல் பாசியில் இருந்து அல்வா தயாரிப்போம்"*
"தேங்காய் நாரில் இருந்து ரப்பர் தயாரிப்போம...!"
"ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவோம்..." "சம்பளமின்றி அமைச்சர்கள் பணிபுரிவோம்..."
இது நடக்கக் கூடியதா?
நடந்ததா?
நடத்தத்தான் முடியுமா?
ஏமாந்த தமிழக மக்களுக்கு... பொய்யான வாக்குறுதிகள், கவர்ச்சித் திட்டங்கள்...
*அன்று ஆரம்பித்த*
*தி.மு.க.-வின்* *பொய் பிரச்சாரம்* *இன்று வரை தொடர்கிறது*
அடுத்த கட்டமாக...
********************
பூவின்றி, பொட்டின்றி தலைவிரி கோலமாய் கதறிய பெண்களின் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.
"காகிதப் பூ மணக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது."
என, புரிந்து கொள்ள முடியாத மேடைப் பேச்சும்...
அடுக்குமொழியும்!
மற்றும்,
இடைவிடா பொய் பிரச்சாரமும் அன்று காங்கிரஸை வீழ்த்தியது.
*மேலும்,*
'ஹிந்தி எதிர்ப்பு' போராட்டமும் சேர்ந்து கொண்டது.
அண்ணாதுரை,
ராஜாஜி,
இடதுசாரி மற்றும் வலதுசாரி கம்யூனிஸ்ட்,
காயிதேமில்லத், ,
சிலம்புச் செல்வரின் தமிழரசு கழகம்...
என வலுவான எட்டு கட்சி கூட்டணி வேறு...
*உச்சகட்டமாக...*
ஓட்டுச் சாவடிகளுக்கு முன்...
அன்று மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றிருந்த, 'எம்.ஜி.ஆர். குண்டு காயம் காரணமாய் கட்டுப் போடப்பட்டிருந்த புகைப்பட போஸ்டர் வேறு...!
இத்தனையும் சேர்ந்து ஓங்கிய குரலாய்...
*வீழ்த்தியது காமராஜரை!*
அன்று,
தமிழக அரசியலை அடியோடு புரட்டிப் போட்டதின் விளைவுகளை இன்று வரை சந்தித்து வருகிறோம்.
அணைகளைக் கட்டி...
தொழிற்சாலைகளை அமைத்து...
வேலை வாய்ப்புகளை பெருக்கி...
கல்விக்கு முக்கியத்துவம் தந்து...
வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒரு மாநிலத்தை...
ஆழிப் பேரலையாய் அப்படியே வாரி சுருட்டி விட்ட சுனாமி தான்...
*1967 தேர்தல்.**மற்றும் *தி.மு.க.-வின் வெற்றி*
வானொலிச் செய்தியில் முதல் தேர்தல் முடிவே...
'காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகி தோல்வி!'
தொடர்ந்து,
அகில இந்திய காங்கிரசின் 'பெருந்தலைவர் கர்மவீரர்' காமராஜர் தோல்வி!
முதல்வர் பக்தவத்சலம் உட்பட எட்டு அமைச்சர்களின் தோல்வி!
மாய வலையில் சிக்கி கொண்டது தமிழகம்...
ஆட்சியை பிடித்தது தி.மு.க. 
'மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்' என்றார் பெருந்தலைவர்.
ஆனால்...
முதல்வர் பக்தவத்சலம் மட்டும் ஓங்கி கூறினார்.
*'தமிழகத்தில் விஷக்கிருமி பரவிவிட்டது...*
*தமிழக மக்களை கடவுள் காப்பாற்றட்டும்*
*நான் சங்கீதம் கேட்கப் போகிறேன்.*
என்றார்.
அவர் சொல்லி,
55 ஆண்டுகள் ஆகி விட்டன...
'அன்றைய தமிழகம், இன்றைய தமிழகம்' என ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சம் நடுங்குகிறது.
*காமராஜர் பற்றி மேலும் அறிய சில துளிகள்...*
இப்படியும் ஒரு முதல்வரா!
இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம்.
"மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள்...
நாம் அமைதி காப்போம்"
இது தான் தேர்தலில் தோற்ற பிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் காமராஜர் கூறியது.
இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?
அதனால் தான் அவர் 'பெருந்தலைவர்' காமராஜர்
இப்பேர்ப்பட்ட மாமனிதர் காமராஜர் ஆட்சி ஏன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது?
தமிழ் நாட்டிற்கும்,
தமிழக மக்களுக்கும் என்ன கொடுமைகள் அவரது ஆட்சியில் நடந்தது?
*கொடுமை எண் - 1
*
காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %.
அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37%
*கொடுமை எண் - 2
*
ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்.
ஏழை, பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம்.
*கொடுமை எண் - 3
*
மணிமுத்தாறு,
வைகை அணை,
சாத்தனூர் அணை,
கீழ் பவானி,
மேல் பவானி அணைகள்,
அமராவதி,
புள்ளம்பாடி,
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்,
நெய்யாறு...
இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள்.
இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 2, 07, 000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன.
*கொடுமை எண் - 4
*
BHEL திருச்சி,
ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை,
ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்,
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
சௌத் இந்தியா விஸ்கோஸ்...
இப்படி பல தொழில் வளர்ச்சி கொடுமைகளும் நடந்தேறின!
*கொடுமை எண் - 5
*
இதுபோக மந்திரிகள் தங்களை பிரபலபடுத்திக் கொள்ளாமை...
பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல - வீடு திரும்பும் எளிமை...
அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு...
ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல...
'வள்ளலே!'
'ஏழைகளின் இதயத் துடிப்பே!'
என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை.
ஆனால், இன்று...
ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட...
தெரு முழுக்க டியூப் லைட் போட்டு,
ஆளுயர போஸ்டர் அடித்து...
'வரலாற்று சாதனை' என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி திராவிட வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வருடம் 1967.
அன்று,
காமராஜரை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து...
தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு...
55 வருடம் ஆகி விட்டது.
நமது அப்பனும், பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற்கடித்த பாவத்துக்கு தான்...
நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச் சீரழிகிறோம். 
அன்று முதல் இன்று வரை...
இவர்களின் *போலியான வாக்குறுதிகளை* நம்பி...
இன்னும் விடியலை தேடி... யோசிக்காமல் வாக்களித்து விட்டு...
*'வேசி' பட்டமும்...* *'ஓசி' பட்டமும்...* வாங்கி கொண்டு... *போக்கத்து நிற்கிறார்கள் தமிழக மக்கள்.*
"ஜாதியை ஒழிப்போம்..." என்று சொல்லிக் கொண்டு, ஜாதியை வளர்க்கவே செய்கிறார்கள்
அன்று, ஆட்சிக்கு வருவதற்கு முன்...
"மதுவிலக்கு என்றாலே முழு மதுவிலக்கு தான்..." என்றவர்கள்,
இன்று தமிழகம் முழுவதும் மேலும் மேலும் மதுக்கடைகளை திறப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.
முந்தைய ஆட்சியில்...
மின்கட்டண உயர்வு முதல் பால் விலை உயர்வு வரை எதிராக கோஷமிட்டவர்கள்...
இன்று, அனைத்தையும் முழு மூச்சாக உயர்த்தி விட்டார்கள்.
No comments:
Post a Comment