Thursday, March 6, 2014

சீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும்- கிறிஸ்துவ சூழ்ச்சிகளும்

சீசருக்கு வரி செலுத்துதல்
 

(மத் 22:15 - 22; லூக் 20:20 - 26)

மாற்கு12:13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ' என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, 'ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்' என்றார்.16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' சீசருடையவை ' என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

லூக்கா20:19 மறைநூல் அறிஞர்களும் தலைமைக்  பாதிரிகளும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்களுக்கு அஞ்சினார்கள்.20 ஆகவே அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி
22 சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா? ' என்று கேட்டார்கள்.

இந்தக் கதை பலவிதத்தில் முக்கியமானது. 

ஏரோதியர் என ஒரு பிரிவு இருந்தது இல்லை. யூதேயாவை ஆண்டது ரோமன் கவர்னர். கலிலேயாவிற்கு எரோது. ஜெருசலேமில் தலைமை பாதிரி (மோசேயின் நாற்காலியில் அமர்ந்தவர்கள்) ரோம் கவர்னரால் நியமிக்கப்பட்ட சதுசேயர்கள்.

இஸ்ரேல் மக்கள் ரோம் ஆட்சியை வெறுப்பவர்கள், வரி வசூலிப்பவரை வெறுப்பதை பல வசங்களில் காணலாம்.ஏசு வரி கொடுக்கலாம் என்றால் மக்கள் அவரை வெறுப்பர், வரி கொடுப்பது தவறு எனில் ரோமன் வீரர்கள் கைது செய்யலாம். இதனால் இது ஒரு விதமாக மாட்டிவிட கேட்டதாம்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள், Are the New Testament Documents Reliable? என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார், - If He had saud "Yes" he would forfeit much Poplular Goodwill, if he said "No" he would be charged with formenting Sedition. ...  Jesus not only avoided the dilemma, but turned it soon to emphasis, the basic theme of his ministry The Real Jesus -FF.Bruce pages79-80  

பழைய ஏற்பாடு கதைகள்படி இஸ்ரேல் யூதர்கள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, எபிரேயர்கள் மக்கள், யூதர் அல்லாத பிற மக்களை ஏசு ரேராக நாய்- பன்றி என்பதையும் நாம் சுவிசேஷத்தில் காண்கிறோம். இங்கே சொன்னது ரோமன் மன்னன் படமும் அந்த புற இனமும் (நாய்கள்) விரட்டி அடிக்கப்பட வேண்டும். யாவேவிற்கு உரிய நாட்டில் யாவே மக்கள் இருக்க வேண்டும். ரோமன் மன்னன் சீசர் வெளியே செல்லவேண்டும் என்பதை அழகாக கூறுகிறார்.


உபாகமம்17: 14 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன் என்று நீ சொல்வாய்.15 அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.


மக்கள் சீசரை வெறுப்பதால் இக்கேள்வி எனும்போது நாம் இன்னொரு கதையைக் கீழே காணலாம்

யோவான்19:12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூத மக்கள், ' நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி ' என்றார்கள்.  13இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். ' கல்தளம் ' என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் ' கபதா ' என்பது பெயர்.14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூத மக்ககளிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.15அவர்கள், ' ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், ' உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் பாதிரிகள், ' எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை ' என்றார்கள்.


யோவானின் இந்தக் கதை முழு பொய் என்பது முதல் கதையிலிருந்து புரியும்.மேலும் இக்கதையில் விசாரணைக்கு பிலாத்து அரண்மணை வெளியே வந்ததாக கதை.பண்டிகை அன்று யூதரல்லாத பிலாத்து வீட்டினுள் நுழைவது நியாயப்பிரமாணம்படி தவறு, இப்படி நடக்கவில்லை எனக்க் காட்ட இக்கதை.

லூக்கா 13:1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.

பைபிளின் இஸ்ரேல் கடவுள் கர்த்தருக்கு பலி செலுத்துவோரை தேவாலயம் உள்ளெ நுழைந்து கொன்றவர், பிலாத்துக்கு நியாயப்பிரமாணம் மீது சற்றும் லட்சியம் கிடையாது.

இயேசு வரி செலுத்துதல்
மத்தேயு17: 24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, 'உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?' என்று கேட்டனர்.25 அவர், ' ஆம், செலுத்துகிறார் ' என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, ' சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா? ' என்று கேட்டார்.26 ' மற்றவரிடமிருந்துதான் ' என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், ' அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.

இஸ்ரேல் நாடு குடிமக்கள் அவர்கள் நாட்டில் வரி கட்டத் தேவையில்லை எனத் தான் இங்கே காண்கிறோம்.
பரிசேயர்கள் ரோம் ஆட்சியை மறுத்தவர்கள் ஆனால எதிர்க்கவில்லை, பொறுத்து சென்றவர்கள். சதுசேயர்கள் ரோம் ஆட்சியோடு ஒட்டி உறவாடி பதவி பணம் சம்பாதித்தனர்.

மத்தேயு16:6இயேசு அவர்களிடம், ' பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்என்றார்.7 ' நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார் ' எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்...12 அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை; மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.


எனவே ஏசுவுடைய இயக்கம் ரோம் ஆட்சியை எதிர்ப்பது, அவர் வார்த்தைபடி நாய்கள் யூதரல்லாத ரோமினரை கர்த்தருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலிருந்து விரட்ட வேண்டும்.

இந்த்க் கதையை நாம் இத்தோடு விடலாம் எனில் தெளிவாக சுவி கதை ஆசிரியர் காசினை (δηνάριον dēnarion ) தெனாரியம்  என்கிறது.     தெனாரியம்காசு ஏசு காலத்தில் யூதேயாவில் புழக்கத்தில் வரவே இல்லை(இணைப்பு)

The coin   Main article: Tribute penny

denarius featuring Tiberius. The inscription on a denarius of the period reads Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs ("Caesar Augustus Tiberius, son of the Divine Augustus").
The text identifies the coin as a δηνάριον dēnarion,[1] and it is usually thought that the coin was a Roman denarius with the head of Tiberius. The coin is also called the "tribute penny." The inscription reads "Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs" ("Caesar Augustus Tiberius, son of the Divine Augustus"). The reverse shows a seated female, usually identified as Livia depicted as Pax.[2]
However, it has been suggested that denarii were not in common circulation in Judaea during Jesus' lifetime and that the coin may have instead been an Antiochan tetradrachm bearing the head of Tiberius, with Augustus on the reverse.





மாற்கு சுவி 70 - 75ல் புனையப்பட்ட போது தவறாக என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். சுவி கதாசிரியர்கள் ஏசுவை அறியாத பிற்காலத்தினர் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம்.

ஏசு மிகத் தெளிவாக ரோம் ஆட்சியை தேவனின் இடத்திலிருந்து விரட்டுங்கள் என்பதை சர்ச் பாதிரிகள் உளறல் முறையில் ஏசு ரோம் ஆட்சி தொடரட்டும் ஏசு என் கவலை மேலுலகம் எனத் திரித்து, ஆங்கிலேய ஆட்சியை கிறிஸ்துவ மக்கள் பெருமளவில் எதிர்க்காமலும் பார்த்துக் கொண்டனர்.



4 comments:

  1. 1மக்கபேயர்2: மத்தத்தியாவின் எதிர்ப்பும் போரும்
    27 பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கைமீது பற்றுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும் என்று உரத்த குரலில் கத்தினார்.28 அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.29 அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கிவாழச் சென்றனர்.30 அவர்களும் அவர்களுடைய மைந்தர்களும் மனைவியரும் கால்நடைகளோடு அங்குத் தங்கினார்கள்: ஏனெனில் கடுந்துயரங்கள் அவர்களை வருத்தின.31 மன்னனின் கட்டளையை அவமதித்தோர் பாலைநிலத்து மறைவிடங்களுக்குப் போய்விட்டனர் என்று தாவீதின் நகராகிய எருசலேமில் இருந்த அரச அலுவலர்களுக்கும் படைவீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.32 உடனே படை வீரர்கள் பலர் அவர்களைத் துரத்திச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்து, அதற்கு எதிராகப் பாசறை அமைத்து, ஓய்வுநாளில் அவர்கள்மீது போர்தொடுக்க ஏற்பாடு செய்தனர்.

    ReplyDelete
  2. ரோமன்13:1 ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை: இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.2 ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள்.3 நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை: தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்: அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்.4 ஏனெனில் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தொண்டர்கள். ஆனால் தீமை செய்தால், நீங்கள் அஞ்சவேண்டியதிருக்கும். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் இருக்கிறது. அது வீணாக அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. தீமை செய்வோர் மீது கடவுளின் தண்டனையை நிறைவேற்ற அவரே ஏற்படுத்திய தொண்டர்கள் அவர்கள்.5 ஆகவே கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சாற்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும்.6 இதற்காகவே நீங்கள் வரிசெலுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும் போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்.7 ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்: அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்: மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.

    ReplyDelete
  3. 1பேதுரு :13 அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பணிந்திருங்கள்:14 அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள்.15 இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.16 நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்: விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்: கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.17 எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்: சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்: கடவுளுக்கு அஞ்சுங்கள்: அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்.

    ReplyDelete
  4. ரோமன் ஆட்சியை காக்கா பிடிக்க இப்படி பவுல் எழுதியிருப்பார்.

    ReplyDelete