Directed by | Babu Janardhanan |
---|---|
Produced by | Salim P. T. |
Written by | Babu Janardhanan |
Starring | Kunchacko Boban Jyothi Krishna Suraj Venjaramoodu Anumol Tini Tom Thilakan |
Music by | Afsal Yousuf |
Cinematography | Sinu Sidharth |
Edited by | Sobhin K. Soman |
Production
company |
Green Advertising
|
Distributed by | Saldal |
Release dates
|
|
Country | India |
Language | Malayalam |
"கடவுள் விற்பனைக்கு" (God for Sale) என்கிற மலையாள படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.
அப்படம் சரியான முறையில் எடுக்கப்படவில்லை. வாலிபன் ஒருவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறார். அதன்பின்பு பெந்தகொஸ்தே கிறிஸ்தவத்திற்கு செல்கிறார். யேசுவுக்காக சாட்சி பகருகிறார். அவரை விட்டு அவருடைய மனைவி பிரிகிறார். அங்கிருந்து கொண்டு குழந்தையை பலியிட முயலுவதாக கதையை நகர்த்திய விதம் படத்தை கேலிக்கூத்தாகிறது. இஸ்லாமை தொடமால் விட்டது அதன் தயாரிப்பாளர் சலீம் இருப்பதாலோ என்கிற கேள்வியும் எழுகிறது. அருமையான கதைப் படத்தை சரியான முறையில் எடுக்காமல் விட்டதால் படம் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. கதாநாயகனை பைத்தியக்காரனாக்கி கதையை ஒட்டி ஒட்டி கதை நகர்த்தியது கதை ஓட்டத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் அவரை சாமியாக மக்கள் நினைப்பதும். அவர் ஆசீர்வாதம் வழங்குவதும் கதைக்கு வலு சேர்க்கிறது. படத்தின் முடிவு நிறைவாக உள்ளது. இப்படத்தை வேறு யாரேனும் வேறு மொழியில் வித்தியாசமான முறையில் எடுத்தால் படம் நன்றாக ஓடும்.
No comments:
Post a Comment