Wednesday, March 23, 2016

School Boy Hangs himself in Hostel in Chenglepet

சென்னை: செங்கல்பட்டு அருகே பள்ளி விடுதியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த கீழவேடு பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 

பள்ளி வளாகத்தில் விடுதி இயங்கி வருகிறது. அங்கு 32 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். ரூபியா செயின், இவரது கணவர் செயின் சக்கரவர்த்தி ஆகியோர் பள்ளியின் பொறுப்பாளர்களாக உள்ளனர். பெரிய இரும்பேடு கிராமத்தை சேர்ந்த எலியாஸ் கிரிஸ்டோபர் என்பவரின் மகன் அன்புராஜ் (16), இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, விடுதியில் தங்கி வந்தான். நேற்று காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு செல்ல தயாரானார்கள். 

அப்போது, அன்புராஜை சக மாணவர்கள் தேடியபோது காணவில்லை. இதையடுத்து, அவனது அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விடுதி காப்பாளர் டார்ச்சர் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டானா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

CSI சர்ச் குடியிருப்பு பகுதியில் புதைத்த கிறிஸ்துவ பிண உடல்களை எடுத்து வேறு இடத்தில் புதைக்க உத்தரவு

சென்னை மதநந்தபுரத்தில் குடியிருப்பு பகுதியில் CSI சர்ச் கிறிஸ்துவ புதைத்த பிணங்களை   உயர் நீதி மன்றம் அகற்ற உத்தரவு https://www.newindianexp...