Friday, January 26, 2018

வைரமுத்துவின் வேசித்தன வியாபார டெக்னிக் - அம்பலப்படுத்திய மாணவர்கள்

15325361_1154679894580687_59963018431066
வைரமுத்து தன் புத்தகங்களை விற்கும் ரகசியத்தை அம்பலப்படுத்திய மாணவர்கள் 
July 21, 2014
Image may contain: 1 person, standing

கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்.

அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது.

அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி, அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240 , 5oo புத்தகங்களின் விலை 1,20,000(ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ) ஆனால் நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம்.

அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது ,அவருடைய உதவியாளர் பேசினார். மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார். அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,

இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் . ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .

பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்

– கி.விஜயகுமார்

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...