வைரத்துவின் ஆபாச வரிகள்: பெண் கவிஞர் வேதனை
Published: Wednesday, January 11, 2006, 5:30 [IST]
திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் படத்தில் கவிஞர் வைரமுத்து ஆபாசமான வார்த்தைகளுடன் பாடலை எழுதியிருப்பது வேதனையைத் தருவதாக கவிஞர் நிர்மலா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராமநாராயணன் தயாரிப்பில், கருணாநிதியின் கதை வசனம், முரளி, பிரபு, நவ்யா நாயர் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பாசக்கிளிகள். பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும்ஆபாசமான ஒரு பாடலை எழுதியுள்ளதாக நிர்மலா சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்தவரான நிர்மலா சுரேஷ், திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், இப்போதெல்லாம் நான் தமிழ்ப் படத்தைத் தணிக்கை செய்யும் குழுவில் இடம்பெறுவதையே தவிர்க்கிறேன்.காரணம் அந்த அளவுக்கு ஆபாசம் தலைவிரித்தாடுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகியுள்ள படம் பாசக்கிளிகள். அப்படத்தில் வைரமுத்து மிகவும் ஆபாசமாகஒரு பாடலை எழுதியுள்ளார். இதனால் தான் அந்தப் படத்தின் தணிக்கைக் காட்சிக்கு நான் போகவில்லை.
கருணாநிதியின் படத்திலேயே ஆபாசப் பாடல் இடம் பெறும் அளவுக்கு சினிமா தரமிழந்து போயுள்ளது வேதனையைத் தருகிறது.
தமிழ் சினிமாக்களில் ஆபாசம் மித மிஞ்சி நிற்கிறது. இதனால் தான் நான் சமீப காலமாக தணிக்கை குழுவில் இடம் பெறுவதைதவிர்த்து வருகிறேன்.
இப்போதுள்ள தணிக்கை குழு உறுப்பினர்களில் பலருக்கு சினிமாவின் அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை. எது ஆபாசம், எதுவன்முறை என்பது அவர்களுக்கு சரியாக தெரியவில்லை.
இதனால் தான் பல ஆபாசக் காட்சிகள் படங்களில் இடம்பெற்று விடக் கூடிய நிலை உள்ளது.
சில பெண் கவிஞர்கள் விரைவில் புகழ் பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆபாசமாக எழுதுகிறார்கள். அப்படிப்பட்டகவிஞர்களின் கவிதைத் தலைப்புகள் கூட படு ஆபாசமாக உள்ளது. அதைப் படிக்கவே முடியவில்லை என்றார் நிர்மலா சுரேஷ்.
No comments:
Post a Comment