Thursday, January 25, 2018

ஜான் சாமுவேல்- திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்துவ மத வெறியர்

சென்னை ஆசியவியல் நிறுவனம் என்பது ஜப்பானியர் பொருள் உதவியுடன் புத்த மதம் பற்றியும், போதி தர்மர் பற்றியும் ஆராய்ச்சி செய்ய பெரும் பொருளுதவி பெற்று நடக்கும் நிறுவனம். ஆனால் இதன் இயக்குனராய் இருந்த தீவிர கிறிஸ்துவர் ஜான் சாமுவேல் பெரும் பணம் கையாடல் செய்தார், ஊழல் செய்தார் என தாற்காலிக நீக்கமும், பின் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வீ.ஆர். கிருஷ்ண ஐயர் அறிக்கையால் நீக்கவும் பட்டார். கிறிஸ்துவ ரௌடிகளோடு நுழைந்து காலித்தனம் செய்ய கைதாகி சிறை சென்று வெளியானார், ஜாப்பானியர் காலில் விழுந்தும், சட்ட ஒட்டைகளாலும் வெளிவந்து நிறுவனத்தைக் கைப்பற்றி தற்போது தமிழர் விரோதச் செயல்களுக்கு அந்நிறுவனத்தைப் பயன்படுத்தி வருகிறார்.


ஆசியவியல் இயக்குனர்  ஜி. ஜான் சாமுவேல்  பல லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார்.
பேராசிரியர் குழந்தைசாமி, அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ண ஐயர், தமிழறிஞர் கொடுமுடி சண்முகம், காவல்துறை முன்னாள் டி.ஐ.ஜி. லக்ஷ்மிநாராயணன் போன்ற அறிஞர் குழு பதவி ஏற்றது. கிறிஸ்துவ ரௌடிகளோடு நுழைந்து காலித்தனம் செய்ய கைதாகி வெளியானார், ஜாப்பானியர் காலில் விழுந்தும், சட்ட ஒட்டைகளாலும் வெளிவந்து நிறுவனத்தைக் கைப்பற்றி அதை தமிழருக்கு நாகரீகம் கற்று தந்தது கிறிஸ்துவ தொன்மக் கதை நாயகர் ஏசு சீடர் தாமஸ் எனப் பல மாநாடுகள் நடத்தினார். நடுவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் என ஆக்கும் மாநாடுகள்.








பேராசிரியர் ஜேசுதாசன்
 ஹெப்சிபா ஜேசுதாசனின் -தமிழிலக்கிய வரலாறு
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.

அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.
இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.


 ‘Count Down From Solomon’


ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. 




1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை
ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் மோசடி, ஊழல்  பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[1]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[2] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[3]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார். 

முருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர். மோசடி 



 ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன?



 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...