Sunday, January 3, 2021

சி.எஸ்.ஐ. சர்ச் பேராயர் கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மணல் கொள்ளை எல்லாமே செய்கின்றனர்

 கிறிஸ்துவ அமைப்புகளின் செயல்பாடு சரியல்ல: தேசிய அளவில் விசாரணை ஆணையம் தேவை  https://m.dinamalar.com/detail.php?id=2682751: ஜன 03,2021 

சமூக ஆர்வலர், தேசிய அளவில் தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீராங்கனை, தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் செயற்குழு உறுப்பினர், நடிகை என்ற பன்முகம் கொண்டவர் எமி, 50. 

இவர், சி.எஸ்.ஐ., என்ற, கிறிஸ்துவ அமைப்பில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கூறியதாவது: நான், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மிடிக்கோட்டை அனுக்கிரகபுரத்தைச் சேர்ந்தவள். நான் சார்ந்துள்ள கிறிஸ்துவ மதத்தின் வழியாக சமூக சேவை செய்வதற்காக, திருமணமே செய்யாதவள். சமூக சேவைக்காக பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளேன்; அரசின் பல்வேறு பொறுப்புகளையும் பெற்று, சிறப்பாக முடித்துள்ளேன். ஆனாலும் எனக்கு, பேராயர்கள் மற்றும் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், பொய் வழக்குகள் என, பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவர்களுக்கு, சிறுபான்மையின சட்டங்களே பாதுகாப்பாகவும் உள்ளன. 
அதாவது, துாத்துக்குடி நாசரேத்தின் பேராயராக இருந்த ஒருவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். அரசின் உயர்மட்ட குழு விசாரணைக்குப் பின், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியவர். மேலும், தென்னிந்திய திருச்சபையில் வாக்களிக்கும் உரிமையையும் இழந்தவர். அவர் மனைவி, ஆசிரியை. 1996ல், நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் பணியாற்றியபோது, விபசாரம் செய்து, கையும் களவுமாக பிடிபட்டார். ஊர்மக்கள் அவரை, மரத்தில் கட்டி வைத்தனர். ஊர்மக்களின் கொந்தளிப்பில் இருந்து காக்க, அப்போதைய நெல்லை பேராயரிடம் மன்னிப்பு கேட்டு, கணவருடன் செல்லும்படி அறிவுறுத்தினார். ஆனால், அதை மறுத்து, வேறு ஒருவருடன் சென்றார். இதனால், ஒழுங்கு நடவடிக்கையாக நாசரேத் பேராயர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்

ஆனாலும், இதுவரை திருந்தாத அவர் மனைவி தான், தென்னிந்திய திருச்சபையின், பெண்கள் ஐக்கிய சங்க தலைவியாக பதவியில் உள்ளார். அதாவது, மேயர் பதவியைப் போல, மிக முக்கியமான இந்த பதவியில், ஒரு குற்றவாளி இருப்பதால், கிறிஸ்துவ பெண்கள் கேலிக்கு உள்ளாகின்றனர். அந்த பேராயரின் மூத்த மருமகள், இந்த குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார். அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளை செய்வதாகக் கூறப்பட்ட அந்த புகார், மருமகளை மிரட்டி, வாபஸ் பெறப்பட்டது. அவர் இன்னும் தனியாக போராடுகிறார்.

 
அந்த பேராயரின் இரண்டாவது மகன், ஒரு தலித் பெண்ணுடன் கூடி, இரண்டு குழந்தைகளைப் பெற்றார். ஆனாலும், மருத்துவர் ஒருவரையும், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வோம் என, தேவாலயத்தில் வசனம் கற்றுத் தரும் பேராயர், தன் மகனுக்கு, இரண்டாம் திருமணத்தையும், பைபிளை வைத்து, அதே தேவாலயத்தில் நடத்தி வைத்துள்ளார்.


இந்த பேராயரின் தம்பி, ஒரு மதபோதகர். அவர், நாசரேத் பிரகாசபுரத்தில், மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில், கொள்ளையடித்து பிடிபட்டார். பின், இடையர்காட்டில், சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பொதுமக்களால் பிடிபட்டார். ஏரல் காவல் நிலையத்தில் இருந்த வழக்கை, அவர், பணம் கொடுத்து சரி செய்தார்.


நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, ஒருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இதுமட்டுமல்ல, தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான கலை, அறிவியல் கல்லுாரிகள், நர்சிங் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் முறைகேடுகள் நடக்கின்றன.
அதாவது, நாசரேத் மர்கோசிஸ் கல்லுாரியில் உதவி பேராசிரியையாகவும், விடுதி காப்பாளராகவும் பணியாற்றியவர் பெண் ஒருவர், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ஆதரவற்றவர். பார்வையற்ற அவர், இரண்டு இளங்கலை, ஒரு முதுகலை மற்றும் முனைவர், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர், மிகக் குறைந்த ஊதியத்தில், 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். அவருக்கு, மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் நிரந்தர பதவி வழங்கும்படி, நான் பலமுறை முயன்றும் முடியவில்லை. அந்தப் பெண்ணை, பணியில் இருந்து விடுபடும்படி, பேராயரின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.ஆனால், அலுவலக உதவியாளராக சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா காலத்தில், போலி சான்றிதழ்கள் வழியாக பணி வழங்கி உள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்


அதற்காக, 10 லட்சம் ரூபாய் வங்கியின் வழியாக நன்கொடையும், 40 லட்சம் ரூபாய் மறைமுகமாகவும் பெற்றுள்ளனர். போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த நபர் மீது, காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.மதபோதகர்கள் போதனையில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற விதி இருந்தும், பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு தாளாளராகவும் உள்ளதால், ஆசிரியைகளை பாலியலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பல கோடி ரூபாய் லஞ்சம்


சிறுபான்மையின தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகக்குறைந்த நிலையிலும், ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி, பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். இதை, எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
இதுமட்டுமல்ல, துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேராயர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தி.மு.க.,வின் முக்கிய புள்ளி மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, பல கோடி ரூபாய் லஞ்சமாக வழங்குகின்றனர். இதை, ஊடகங்களுக்கு தெரிவித்தாலோ, தட்டிக்கேட்டாலோ, மணல் லாரிகளை ஏற்றி, கேட்டவரை கொலை செய்கின்றனர்.

கிறிஸ்துவ பேராயர்கள், பாதிரியார்கள் போன்றோர், தேவாலயத்தில் பைபிளை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துக்களை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதே விதி. அதற்கு மாறாக, ஒவ்வொரு நாளும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் பிரசாரம் செய்கின்றனர். ஒரு திட்டம் வரும் முன், அதன் சாதக, பாதகங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துரைப்பதில்லை. அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், அதற்கு எதிராக கிறிஸ்துவ மக்களை திசை திருப்பி, பல்வேறு தரப்பிலிருந்தும் லஞ்சம் பெறுகின்றனர்.

கோவில்களில் கருவறை போல, கிறிஸ்துவ பேராலயங்களில், 'ஆல்டர்' என்னும் திருச்சபை பகுதி உள்ளது. அதில், மாற்று மதத்தினர் செல்லக்கூடாது. ஆனாலும், கொம்மிடிக்கோட்டை அனுக்கிரகபுரம், துாய அந்த்ரேயா ஆலயத்தில், ஹிந்துவான, திருச்செந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., நவ., 30ல், ஆல்டரில் நின்று, பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டார். ஒரு பாதிரியராக இருக்க, ஒரு இளங்கலை பட்டமும், பி.டி., என்ற பட்டமும் முடித்திருக்க வேண்டும். ஆனால், பேராயராக இருந்த ஒருவர், பட்டப்படிப்பு கூட முடிக்காத, 38 பேரை பேராயராக்கியுள்ளார்.

அதேபோல, தேவாலயத்தின் பிரதிஷ்டை நாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஆண்டுக்கு இரு முறையாவது, இந்த நாளை கொண்டாடி, நாட்டில் உள்ள, கிறிஸ்துவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வசூலிக்கின்றனர். அதை, எந்த நல்ல காரியத்துக்கும் பயன்படுத்துவதில்லை. அதற்கு, எந்த வரியையும் செலுத்துவதில்லை. பழங்காலத்தில், நற்செயல்களை செய்ய கட்டப்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகளில் ஆட்களை நியமிப்பதாகக் கூறி, பல லட்சம் ரூபாயை நன்கொடையாக பெறுகின்றனர். ஆனால், பழமையான நாசரேத் சாயர்புரம் லுாகா மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தும் பாழடைந்துள்ளன.

தேவாலயத்தில், 'ஒருவனுக்கு ஒருத்தியாக இருப்பேன்' என, வசனம் சொல்லித்தரும் பாதிரியார்களில் பலருக்கு, பல தாரங்கள் உள்ளது தான் உண்மை. அதுமட்டுமல்ல, 1830ல், ரேனியஸ் கட்டிய தேவாலயம் உட்பட பல தேவாலயங்களையும், அவற்றுக்கு சொந்தமான இடங்களையும் பேராயர்கள் பட்டா போட்டுள்ளனர். அதேபோல், தேவாலயத்துக்குச் சொந்தான கடைகளுக்கு, சில நுாறு ரூபாய் வாடகை கட்டி விட்டு, மேல் வாடகையாக பல லட்சம் ரூபாய் பெறுகின்றனர்.
கிறிஸ்துவ அமைப்புகளின் தேர்தல்களுக்காக, உறுப்பினர் கட்டணம், 100 ரூபாய் இருந்த நிலையில், இந்தாண்டு, 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பதவி பெறுவோருக்கு எதிராக வாக்களிப்பவரோ அல்லது கேள்வி கேட்பவரோ இருந்தால், அவருக்கான வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. என்னதான் சமத்துவம் பேசினாலும், தென்னிந்திய திருச்சபையின் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட உயரிய பொறுப்புகளுக்கு போட்டியிட, பெண்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல, பணம் பெற்றுக்கொண்டு நியமன உறுப்பினர்களாக பிராமணர்களையும், போலீசுடன் தொடர்புடைய குண்டர்களையும் தான் நியமிக்கின்றனர். இவற்றைப் பற்றி, டயாசிசில் முறையிடலாம் என்றால், அதுவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் நடப்பதில்லை. இவற்றை நான் தட்டிக் கேட்டதற்காக, என் தாய் இறந்தபோது, நற்கருணை கூட பேராயர்கள் வழங்கவில்லை.

வாக்கு வங்கி மாறும் 

இதுபோல், ஞானஸ்தானம், படிப்பு, திருமணம், இறப்பு என, எல்லாவற்றிலும், சபையில் இருந்து விலக்குவதால் சாமானியர்கள், கிறிஸ்துவ மத போதகர்களைப் பற்றி வெளியில் சொல்வதில்லை.துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சூடு தணிவதற்குள், ஸ்டெர்லைட் நிர்வாகத்தால், ஸ்டேட் பேங்க் காலனி, பிஷப் பங்களாவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையை, பல கோடி ரூபாய் விளம்பரம் செய்து திறந்தனர். இதுபோன்ற முறைகேடுகளில் இருந்து, உண்மையான கிறிஸ்துவர்கள் விடுபட நினைக்கின்றனர். அவர்களைக் காக்க, சிறுபான்மையின சட்டங்களை கடுமையாக்க வேண்டும். நன்கொடை தொகைக்கு கணக்கு கேட்கும் வகையிலும், வருவாய்க்கான முழு வரியை செலுத்தவும், புதிய சட்டம் இயற்றும் அரசுக்கு, உண்மையான கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கி கண்டிப்பாக மாறும்.இவ்வாறு, எமி கூறினார்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா