Wednesday, January 27, 2021

திருக்குறளிற்கு பொருள் காணும் முறை

 திருக்குறளிற்கு பொருள் காணும் முறை

1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.
2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.
3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.
4.வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும்
5.கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே
6.திருக்குறள் சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று.
7.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும்.
8.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபற்றை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை  1200 வருடம் முன்பான வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது.

நாம் எளிமையாக முதல் அதிகாரத்தில் உள்ள "முதல்" சொல்லை எப்படி எல்லாம் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் எனப் பார்ப்போம்

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - குறள் 1  கடவுள் வாழ்த்து
நாம் முதல் குறளில் வரும் முதல என்பதை தொடக்கம், இந்த உலகம் இறைவனிடம் இருந்து தொடங்கியது, பிரம்மம் எனும் இறைமை இவ்வுலகைப் படைத்தார்
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை வியாபாரத்தில் போடும் மூலதனம் என பயன்படுத்தி உள்ளார்.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 449  பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் - குறள் 463 தெரிந்துசெயல்வகை

வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை. நோய் வரும் காரணம் என்ன எனும் பொருளில் பயன்படுத்தி உள்ளார்.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 948 மருந்து

வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-கொடியில் அடியிலே என செடியின்  தொடக்கம் எனும் பொருளில் 
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 1304 புலவி

வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-முதலான எண்ணப்பட்ட மூன்றும் எனும் பொருளில்
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 - மருந்து

திருக்குறள் இயற்றி ஒரு நூறு ஆண்டிற்குள் எழுந்த உரை தமிழ் சமணர் மணக்குடவர் உரை, அதை தொடந்து மேலும் பல உரைகள். ஆனால் 19ம் நூற்றாண்டிற்குபின் காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமையாக தமிழ் மெய்யியலை ஏற்காத கயமை புலவர் உரைகள் எல்லாம் மறையக் காரணம் வள்ளுவம் சொல்வதை சிறுமைப் படுத்தலே
   
திருக்குறள் முழுமையான ஆஸ்திக நூல்
வள்ளுவர் இந்த உலகமே இவனால் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை அகரமுதல என்று அதிலும் அறிவுபூர்வமாக விளக்குவார்.
 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மனிதனின் அறிவை மேம்படுத்துவது கல்வி. கருவியின் மூலம் இறைவனை காட்டும் வழி. மனிதன் இந்த உலகில் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இறந்து ஏனோ வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி கடக்க தன்னிகர் இல்லாத படைத்த கடவுளை பற்றி கொள்ள வேண்டும் என்கிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
திருவள்ளுவர் அறிவை சாதாரணமான அறிவு, ஐயறிவு, தெளிவு பெற்ற மெய்யறிவு மிகத் தெளிவாக உரைக்கிறார். மெய்யறிவு கண்டோர் மீண்டும் இப்பிறவியில் இப்பூமியில் பிறக்கும் நிலையை தவிர்க்கவே முயல்வர் என்கிறார்.
 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)
இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.    குறள் 358:மெய்யுணர்தல்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.      குறள் 38:அறன்வலியுறுத்தல்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 36:அறன்வலியுறுத்தல் 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.           குறள் 356: மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   குறள் 351: மெய்யுணர்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.  குறள் 361:  அவாவறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.  குறள் 362: அவாவறுத்தல்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.          குறள் 370:அவாவறுத்தல்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.     குறள் 331:நிலையாமை
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.       குறள் 338:நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.      குறள் 339:நிலையாமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.      குறள் 140:  ஒழுக்கமுடைமை
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.     குறள் 850:     புல்லறிவாண்மை
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   குறள் 31: அறன்வலியுறுத்தல் 
மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
கயமையின் உச்சம்.
முழுமையான ஆஸ்திகராய் வைதீக மெய்யியல் மரபைப் போற்றும் வள்ளுவத்தை நாத்திகம் என்றோ, ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே என யாரும் பொருள் செய்கிறேன் என்பது கயமையின் உச்சம்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா