Saturday, January 30, 2021

கிறிஸ்துவ நச்சு பொய்கள் கிழிகிறது

கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் போக முடியுமா?
போதுமடா சாமி, இந்த முட்டாள்களுக்கு பதில் அளித்து, பதில் அளித்தே சலித்துவிட்டது!
ஆனால் புற்றிலிருந்து ஒவ்வொரு பாம்பும், ஒவ்வொரு சமயம் புறப்படும் போது - நம்மை சீறித் தீண்ட வரும் போது - ஒவ்வொரு முறையும் தடியை சுழற்றத்தான் வேண்டி உள்ளது!
Red Prix  உட்பட அனைத்து முட்டாள்களே கேளுங்கள்!
1) டி.வி.எஸ் ஐயங்கார் வம்சமோ, சிம்சன் சிவசைலம் ஐயர் வம்சமோ கூட ஒரு கோயில் கட்டலாம்.
ஆனால் அவர்களும் கோயில் கருவறைக்குள் நுழைந்து விட முடியாது. ஆகம விதிப்படி பூஜா விதிகளைப் பயின்ற குருக்கள்தான் அல்லது தீட்சிதர்கள்தான் கருவறையில் பூஜை செய்ய முடியும்.
2) அதே சிம்சன் சிவசைலமும், டிவிஎஸ் ஐயங்காரும் உக்கிர தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், எல்லைப் பிடாரி அம்மன், அல்லது முனீஸ்வரன் போன்ற தெய்வங்களுக்கு கோயில் கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்!
அதிலும் அவர்கள் கருவறையில் நுழைய முடியாது - காசு போட்டது முழுக்க அவர்களாகவே இருந்தாலும்!
அங்கே கடா மீசை வைத்த பூசாரி இருப்பார் - அவர்தான் நுழைய முடியும் - சிம்சன் பார்ப்பனரோ, டிவிஎஸ் பார்ப்பனரோ அல்ல!
3) உடனே விநாயகர், பரமேஸ்வரன், மீனாட்சி, காமாட்சி, வரதராஜப் பெருமாள், மகாலட்சுமி... இதெல்லாம் 'பார்ப்பன' சாமி!
முனீஸ்வரன், அங்காளம்மன், பெரியாண்டவர், சுடலை மாடன், மாரியாத்தா, காளியாத்தா... இதெல்லாம் 'சூத்திர' சாமி என்று உருட்டாதீர்கள்.
எத்தனையோ 'பார்ப்பனக்' குடும்பங்களுக்கு...
மாரியம்மன், காளியம்மன், சுடலை மாடன், அங்காளம்மன், முனீஸ்வரன், மாடசாமி, செண்டாடும் ஐயனார்,முத்துக் கருப்பசாமி... இப்படி ஏராளமான சிறு தெய்வங்கள் 'பார்ப்பனர்களுக்கு'  குல தெய்வங்களாகவே உண்டு!
பல 'பார்ப்பனக்' குடும்பங்களுக்கு குலதெய்வம் வீரபத்திரன்.
பல 'பார்ப்பனக்' குடும்பங்களுக்கு ஐயனாரப்பன் குல தெய்வம்!
நாட்டார் தெய்வமே சாஸ்தா எனப்படுகிறது - நாட்டார் தெய்வங்களையே குல தெய்வமாகக் கொண்டாடும் வழக்கம் பிராமணரிடமும் உள்ளது. (ஆதாரம்: "திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும்"- மலர்மன்னன் - கிழக்கு பதிப்பகம்- பக்கம் 72)
அங்கெல்லாம் சென்று கும்பிடும் 'பார்ப்பனர்கள்' பயபக்தியோடு கருவறைக்கு 'வெளியே' தான் நிற்பார்கள் -
கருவறைக்குள் 'பார்ப்பனரல்லாத' பூசாரி இருப்பார்!
அந்தப் 'பார்ப்னரல்லாத' பூசாரி தரும் திருநீறு அல்லது குங்குமத்தைத்தான் இந்தப் 'பார்ப்பன' பக்தர்கள் பக்தியோடு வாங்கி இட்டுக் கொள்கிறார்கள்!
4) 'நான் கிறிஸ்தவன் ஆனால் பாதிரியார் ஆகலாம், முஸ்லீம் ஆனால் மேதினார் ஆகலாம் - ஆனால் இந்துவாக இருந்தால் சங்கராச்சாரியார் ஆக முடியுமா?'-....
முட்டாள்களே, இப்படி வீராவேசமாகப் பேசிவிட்டு மதம் மாறிய பிறகு 'தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு'- என்று கேட்டுப் போராடும் நிலை தானேடா இன்றும் உள்ளது?
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனை பாதிரிகள் ஆர்ச் பிஷப்பாகவோ அல்லது மறை மாவட்டப் பேராயராகவோ வர முடிந்தது?
5) அப்படியே எல்லாப் 'பார்ப்பனர்களும்' சங்கராச்சாரி ஆகி விட முடியுமா முட்டாள்களே?
எப்பேர்ப்பட்ட செல்வாக்கு மிக்க கோடீஸ்வரப் 'பார்ப்பானாக' இருந்தாலும் தனது செல்வாக்கால் சங்கராச்சாரி ஆக முடியாது முட்டாள்களே!
6) ஸ்ரீமடத்தால் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாலகர்கள்...
அதிலும் அவர்களில் ஒவ்வொருவருடைய ஜாதகமும் துல்லியமாக ஆராயப்பட்டு...
முனிவனாகும் பேறு - தவ வாழ்க்கைக்கான விதி - எந்த சிறுவனுக்கு உள்ளது என்று கணிக்கப்படுகிறதோ...
சலித்து சலித்து எடுத்து அந்த  ஒரு பாலகன்தான் அடுத்த பீடாதிபதியாக அடையாளப் படுத்தப்படுவான்!
7) அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் துறவி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மிகக் கடுமையானவை!
அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்!
அந்த வயதுக்கே உரிய குழந்தைகளின் எந்த ஆசையும் அந்தக் குழந்தை அனுபவிக்காது - தின்பண்டம், உடை எதிலும்!
பெற்றோர்களை, உடன்பிறந்தாரை விட்டு நிரந்தரமாகப் பிரிய வேண்டும்!
8) நான்கு வேதங்கள், உபநிஷதம், வான சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், சார்வாகம் எனப்படும் நாஸ்திக சாஸ்திரம், பௌத்த சமணக் கோட்பாடுகள், த்வைதம், அத்வைத சித்தாந்தங்கள்...
ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் அவற்றின் மூலமான சமஸ்கிருத ஸ்லோக வடிவில்...
ஆதிசங்கரர் போன்ற ஞானிகளின் படைப்புகள்...
இப்படி சுமார் 15 வருடங்கள் கடினமான சமஸ்கிருதப் படிப்பு!
9) அது மட்டுமல்ல தமிழ் பக்தி இலக்கியங்களும் - தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திவ்யப் பிரபந்தம்...என்றும்...
கம்பராமாயணம், வில்லிபாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார்...
இப்படி ஏராளமான தமிழ் இலக்கியங்களும் அவர்கள் பயில வேண்டும்!
மேலும் ஆங்கிலம் மற்றும் இதர சில இந்திய மொழிகள்!
10) அடி முட்டாள்களே! காஞ்சி மடத்தில் தமிழுக்கு என்று ஒரு ஆஸ்தான புலவர் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?
அந்த சங்கர மடத்து ஆஸ்தானத் தமிழ்ப் புலவர் பெயர் பூ.மா.ஜெயசெந்தில்நாதன் என்பது முட்டாள்களே உங்களுக்குத் தெரியுமா?
அந்த பூ.மா.ஜெயசெந்தில்நாதன் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் என்பது தெரியுமா?
அவர் காஞ்சிபுரத்து முதலியார் என்பது தெரியுமா?
அந்த முதலியார்தான் - காஞ்சி மகா பெரியவருக்கே தமிழ் இலக்கியங்களில் சில ஐயங்கள் - உன்னை மாதிரி முட்டாளுக்கு வரும் மக்குத்தனமான கேள்வி அல்ல - நுட்பமாகப் பயிலும்போது தோன்றும் சில ஐயங்கள்...
அப்படி மகா பெரியவருக்கே சில ஐயங்கள் வரும்போது இந்த முதலியார் ஆஸ்தான தமிழ்ப் புலவர்தான் அவற்றுக்கு விளக்கமளிப்பார் என்பது Red prix வகையறா முட்டாள்களே  உங்களுக்குத் தெரியுமா?
11) ள,ல,ன,ண வேறுபாடே தெரியாமல், 'ழ' வை சாகடித்து, 'ள' ஆக்கி அதையும் சாகடித்து 'வருகிறார்கல்' - 'போகிறார்கல்'- என்று பேசும் 'நான் தமில் அண்டா' பேர்வழிகளை விட சங்கராச்சாரியார் நன்கு தமிழ் பயின்ற ஞானியடா முட்டாளே!
12) எனவே சங்கராச்சாரியார் ஆவது என்பது...
படிக்கட்டு கிராப், ஒற்றைக் காதில் வளையம், அழுக்கு ஜீன்ஸ், அதிரும் மோட்டார் சைக்கிள் என்று எவளாவது நாடகக் காதல் வலையில் விழுவாளா என்று சுற்றி வந்து ஊர் மேய்ந்தபடி காலத்தை சுகமாக ஓட்டிவிட்டு...
பிறகு எடப்பாடியார் தயவில் அரியர்ஸ்  "ஆல் பாஸ் " ஆவது போல அல்ல தம்பி!

 
 


No comments:

Post a Comment

போதை மருந்து -ஜாபர் சாதிக் - அமீர் சுல்தான்

எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.    ஆடு அமீர் : டாக...