Monday, January 25, 2021

திருக்குறள் கூறும் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர் உரைப்படியே

 திருக்குறள் கூறும் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர் உரைப்படியே

திருக்குறள் பண்டைத் தமிழின் யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்றபின்னர், பல புதிய இலக்கண மாற்றம் ஏற்பட்டபின் என பொஆ. 9ம்நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்டு இருக்க வேண்டும் என பல்வேறு அறிஞர்கள் குறிப்புகள் காட்டுகின்றன.

தருமர்மணக்குடவர்தாமத்தர்நச்சர்
பரிமேலழகர்பருதிதிருமலையர்,
மல்லர்பரிப்பெருமாள்காளிங்கர்வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர்                    கூறுவதன் மூலம் பழைய உரையாசிரியர்களைப் பற்றி நமக்கு தெரியவருகிறது. திருக்குறள் உரையாசிரியர்களில் கிடைத்துள்ள உரைகளில் மணக்குடவர்  காலத்தால் முற்பட்டவர்  

மணக்குடவர் சமண சமயத்தவர்

மணக்குடவர் உரையில் அவரது சமயத்தை அறியும் வகையில் சமயக் கருத்துக்கள் பல இடங்களில் உள்ளன.
‘ஆதிபகவன்’ (1) என்பதற்கு ஆதியாகிய பகவன் என்றும், ‘தன்னுயிர் தானறப் பெற்றானை’ என்ற குறளின் (268) விளக்கவுரையில், “உயிர் என்றது சலிப்பற்ற அறிவை; தான் என்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்காரம் அறுதல்” என்றும், ‘மலர் மீசை ஏகினான்’ என்பதற்கு (3) மலரின் மேல் நடந்தான் என்றும், ‘தாமரைக் கண்ணான் உலகு’ (1103) என்பதற்கு இந்திரனது சுவர்க்கம் என்றும் கூறுகின்றார்.
வகுத்தான் வகுத்த வகை’ (377) என்பதற்கு விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகை என்று பொருள் உரைக்கின்றார்.
இருள் நீங்கி இன்பம் பயக்கும்’ (352) என்ற குறளின் கீழ், “இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தி இன்பம் உண்டாமே என்றது” என்று கூறுகின்றார்.
‘எதிரதாக் காக்கும்’ (429) என்ற குறளின் உரையில் “இது, முன்னை வினையால் வரும் துன்பமும், முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராது என்றது” என்றும், ‘ஒருமைக்கண்’ (398) என்ற குறளின், “இது, வாசனை (வாசனாமலம்) தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்கும் என்றது” என்றும் உரைக்கின்றார். 

இக் கருத்துக்கள் யாவும், மணக்குடவர், சமண சமயத்தவர் என்பதை விளக்கும். 

திருவள்ளுவர் போற்றும் முந்து நூல்கள்(லிங்க்) 

திருவள்ளுவர் முந்து நூல்களை 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுட்டிக் காட்டி இருப்பார், வள்ளுவர் மெய்யியல் ஞானமரபின் தொடர்ச்சி வழியினர் என நிருபிப்பது., இதை எளிதாக சமணர் மணக்குடவர் தெளிவாக கூறியேஉள்ளார் 
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.     குறள் 725: அவையஞ்சாமை.
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
                   
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  குறள் 134: ஒழுக்கமுடைமை.
மணக்குடவர் உரை:பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.     

சமணர் மணக்குடவர் வள்ளுவர்  தமிழர் மரபில் வர்ண தர்மத்தை கடைபிடிக்க வற்புறுத்தி உள்ளதை தெளிவாக உரை செய்துள்ளார்

                                                       

திருக்குறள் முப்பால் என்ப்பட்டாலும் - வள்ளுவம் நான்கு புருஷார்த்தங்களை வலியுறுத்துவதை தெளிவாக  காட்டி உள்ளார்தன் நூலின் ஆணிவேர் என பாயிரத்தின் அறன் வலியுறுத்தல் முதல் குறளில் கூறி உள்ளது

திருவள்ளுவர்  நூலின் ஆணிவேர் என பாயிரத்தின் அறன் வலியுறுத்தல் முதல் குறளில் கூறி உள்ளது.                                                                                                                     
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்.
மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
                                திருவள்ளுவர் இல்வாழ்வன் கடமையில் முன்னோர் வணக்கம் (தென்புலத்தார்) என்பதை  மிகத் தெளிவாக உரை செய்துள்ளார். மேலும் திருவள்ளுவர் ஹிந்து புராண தெய்வங்களை சுட்டிக் காட்டியதை உறுதி செய்யும் சிலகுறட்பா உரைகள்
                            

No comments:

Post a Comment