பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த பாதிரியார்... நேரில் பார்த்த பெண் மருத்துவமனையில் அனுமதி!
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்துவிட்ட சமையல்கார பெண்ணை கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியபுரம் எனும் ஊரில் ஹெர் மைன்ஸ் (( Hermines Home for the Destitute )) எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் ((Joseph Isidore )) என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துவந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 25 - ம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்ததாகவும் அதை எதிர்பாராத விதமாக ராஜம்மாள் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
https://www.polimernews.com/amp/news-article.php?id=136104&cid=1&fbclid=IwAR16c-IBhRNm7-OrhcbvoYH-2qOdRdOOt9kAYViNejc0cyDxG07m24CbRag


இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாளைத் தாக்கியதையடுத்து, ராஜம்மாள் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவ பெருமாள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment