Monday, January 11, 2021

பைபிள் போற்றும் பிறப்பால் இனம் - தீண்டாமை - இனவெறி - ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைதானத்தில்

 

சிட்னி டெஸ்ட்டில் இந்திய வீரர் முகமது சிராஜ்ஜுக்கு எதிராக ஆஸி பார்வையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இன்று மீண்டும் இனவெறி துஷ்பிரயோகம் செய்ததால் 6 பேர் சிட்னி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சனிக்கிழமை 3வது நாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி பார்வையாளர்கள் இனவெறி துஷ்பிரயோகம் செய்ததாக புகார் கூறினார். இது குறித்து சிராஜ்ஜும் இந்திய அணி கேப்டன் ரஹானேவும் நடுவரிம் புகார் கூறியதால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், அந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஏசுவின் சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
 
இயேசு- ஒரு கிரேக்க சீரோபேனிக்கேயா பெண்ணின் குழந்தைக்கு உதவ மறுக்கும்போது- யூதர் அல்லாதவரை நாய் என்றதைக் கண்டோம்.– இங்கே 
மத்தேயு15:.24 இயேசு , ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார்.
26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
  மேசையில் எஜமான் சாப்பிட சிந்தும் எச்சில் பொருக்கல் என ஏற்பதாக சொன்னதால் ஏசு உதவினார்.





No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...