தலித் சமுதாயத்திற்கு உதவுவதாக சொல்லி வெளிநாடுகளில் இருந்து கோடி கோடியாக பணத்தை வாங்கும் மிஷனரி கிறிஸ்டோபர் விஜயன் மீது பிரமிளா தேவதாஸ் என்பவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அது சம்பந்தமான விரிவான கட்டுரை.

*தென்னிந்திய திருச்சபை, கன்னியாகுமரி பேராயத்தில், போதகரான கிறிஸ்டோபர் விஜயன் என்பவர், இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்வேறு மெதடிஸ்ட் சபைகளிலிருந்து, பல கோடிக்கணக்கான ரூபாய் பணத்தினை, நடைக்காவு பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர்களான தலித் சமுதாய மக்களின் கல்வி சேவை மற்றும் ஊழியத்திற்காக என்றும், நம்பாளி சி.எஸ்.ஐ. சபையின் கீழ் இயங்கி வந்த ” சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளியினை” கட்டி எழுப்பி மேம்படுத்துவதற்காக என உண்மைக்கு மாறான தகவல்களை மிகைப்படுத்தி சொல்லி, 1994 -ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பள்ளிக்கூட பண வரவு செலவு கணக்குளை சபை கமிட்டி மற்றும் பேராயத்திலும் கணக்கு ஒப்புவிக்காமல், பணமோசடி, ஊழல் செய்துள்ளார்.

**கிறிஸ்டோபர் விஜயன், 1994-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, வருடத்திற்கு பலமுறை இங்கிலாந்து நாட்டிற்கு சென்று, பல்வேறு மெதடிஸ்ட் சபைகளான, பேம்பர் பிரிட்ஜ் சபை, டாண்டன் டீன் சபை, சவுத் சேட்ஜிமூர் சபை, டிரினிட்டி சபை, க்ரேக்ஸ்ன் லேன் சபை ஆகிய சபைகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணங்களை வசூலித்துள்ளார்.**1994-ஆம் ஆண்டு சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளி ஸ்தாபிக்கப்பட்டு, அதனது பத்தாமாண்டு விழாவும், பள்ளிக்கூட கட்டிட திறப்பு விழாவும், இங்கிலாந்து நாட்டு கீன்ஸாம் மெதடிஸ்ட் சபையின் பொறுப்பாளர்களான திரு.மைக்கேல் லோ மற்றும் திருமதி. கரோல் லோ ஆகிய இருவராலும் 04.03.2004 அன்று திறக்கப்பட்டு, அவர்கள் பெயர்கள் கல்பலகையில் பொரிக்கக்கப்பட்டுமுள்ளன.
**இந்த சட்ட விரோத செயல்களை, நம்பாளி சி.எஸ்.ஐ. சபை மக்கள் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகிகள் அன்றைய பேராயர் தேவகடாட்சம் என்பவரிடம் புகாரளித்தனர். அதன்பின்னர், உடனடியாக நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தை விட்டு பிரிந்து சென்று, அதற்கு போட்டியாக வேறொரு பள்ளிக்கூடத்தை தானும் தனது மனைவி செலினுமாக, நடைக்காவு கல்வி அறக்கட்டளை (NET) பள்ளிக்கூடம் அதாவது NET Nursery & Primary School என்ற பெயரில் 2005-ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அதனால் நமது நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை குறைந்து பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

**நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளிக்காக, கிறிஸ்டோபர் விஜயன் இங்கிலாந்து நாட்டிலிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில், தனது சொந்த பெயரில் இரண்டரை ஏக்கருக்கும் மேற்பட்ட மூன்று சொத்துக்களை வாங்கி, நடைக்காவு தெக்கே தோப்பு பகுதியில் NET Nursery & Primary School பள்ளிக்கூடத்தை பெரிய அளவில் கட்டிடங்களை கட்டி நமது கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்திற்கும், நம்பாளி சபை, மற்றும் நம்பாளி சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு போட்டியாக எதிராக செயல்பட்டு வருகின்றார்கள்.
**இங்கிலாந்து நாட்டில், பேம்பர் பிரிட்ஜ் மெதடிஸ்ட் சபையின் கீழ் இயங்கும் “கேர்டன் சர்ச் ஸ்கூல்” (Cuerden Church School) தற்பொழுது, கிறிஸ்டோபர் விஜயனால் நடத்தப்படும் NET Nursery & Primary School -லினை, “NET School India” எனும் ஒரு சமூக நல பணியாக, குறிப்பாக நடைக்காவு பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர்களான தலித் சமுதாய மக்களின் கல்வி சேவை மற்றும் ஊழியத்திற்காக எனும் நோக்கத்தில், இன்றுவரை மாதந்தோறும் பல கோடிக்கணக்கான ரூபாய் பணத்தினை, மாணவர்களின் கல்விக்காகவும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்களின் மாத ஊதியத்திற்காகவும், பல மெதடிஸ்ட் சபைகளிலிருந்து பணம் சேகரித்து அனுப்புகின்றனர். கிறிஸ்டோபர் விஜயன் 1994-ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை ஆண்டு தோறும் பலமுறை இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதும், மெதடிஸ்ட் சபைகளை சந்தித்து பண மோசடி செய்வதும் தொடர்கதையாக உள்ளது. 1994-ஆம் ஆண்டு முதல் கிறிஸ்டோபர் விஜயன் பயன்படுத்திய பாஸ்போர்ட்டினை சரிபார்த்தால் இங்கிலாந்து பயண விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
**மேற்ச்சொல்லப்பட்ட இங்கிலாந்து நாட்டு மெதடிஸ்ட் சபைகளின் இணைக்கப்பட்டுள்ள மாதாந்திர பத்திரிக்கைகளில் கிறிஸ்டோபர் விஜயன் அந்த சபைகளிலிருந்து தொடர்ந்து பண உதவி பெற்று வரும் விபரங்கள், வெளிநாட்டு பயண விபரங்கள் எல்லா மாதமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
**கிறிஸ்டோபர் விஜயன், 1994 -ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், நம்பாளி சி.எஸ்.ஐ. சபையின் பள்ளிக்கூட பண வரவு செலவு கணக்குளை மற்றும் இங்கிலாந்து நாட்டு மெதடிஸ்ட் சபைகளிலிருந்து பெற்றுக்கொண்ட நன்கொடை பண கணக்கு விபரங்களை, சபை கமிட்டி மற்றும் பேராயத்திலும் கணக்கு ஒப்புவிக்காமல், பணமோசடி, ஊழல் செய்துள்ளார்.
**எனவே, இப்புகார் மனு மற்றும் இணைக்கப்பட்டுள்ள ஆதாராப்பூர்வமான ஆவணங்களின் அடிப்படையில், பேராய நிறுவனங்களுக்கான விசாரணை தணிக்கை குழு கன்வீனர் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டு, கிறிஸ்டோபர் விஜயன் மோசடி செய்துள்ள பணத்தையும், சி.எஸ்.ஐ. சபையின் பள்ளிக்கூடத்திற்காக இங்கிலாந்து மெதடிஸ்ட் சபைகளிலிருந்து பெறப்பட்ட பணத்தின் மூலமாக வாங்கப்பட்டுள்ள இரண்டரை ஏக்கருக்கும் மேற்பட்ட மூன்று நிலங்கள் மற்றும் அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், நமது சி.எஸ்.ஐ.டீ.ஏ. (CSITA) -யின் பெயருக்கு சொத்து உரிமம் மாற்று செய்திடவும், மீறும் பட்சத்தில் சி.எஸ்.ஐ. மினிஸ்ட்டிரியல் ரோலிலிருந்தும், கன்னியாகுமரி பேராயத்திலிருந்தும், நேஷனல் மிஷனறி சொசைட்டி ஆப் இந்தியா ஸ்தாபனத்திற்கு பேராயத்தின் பரிந்துரையின் பேரில் பொது செயலாளராக ஊழிய பொறுப்பு வகிப்பதை தடை செய்யும் விதத்தில், அப்பரிந்துரையை ரத்து செய்து அம்மிஷனறி ஸ்தாபனத்திற்கு அறிவிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புகாரளிக்கப்பட்டுள்ளது.*
No comments:
Post a Comment