Friday, September 23, 2022

நிலதானம்= 2ஜி.ஆண்டிமுத்து ராச்சா பைத்தியக்கார உளறல்

 சதுர்வேதி மங்கலம்=  2ஜி.ஆண்டிமுத்து ராச்சா பைத்தியக்கார உளறல்

இராஜராஜச் சோழனும், இராஜேந்திரச் சோழனும் பள்ளர், பறையர்களிடமிருந்து நிலத்தை பிடுங்கி பார்ப்பனர்களுக்கு கொடுத்தார்களாம். இதற்கு ஆதாரமாக தமிழ் தாத்தா .வே. சாமிநாதையர் எழுதிய குறிப்புகளை முன்மொழிகிறார்கள். ஆனால் சாமிநாத ஐயர் குறிப்பிடும் காலத்தில் சோழர்களின் ஆட்சியே இல்லை.
17 ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசர்கள் வழங்கிய நில தானத்தைத்தான் உ.வே சா. குறிப்பிடுகிறார். (உ.வே.சா. என் சரித்திரம். முதல் அத்தியாயம்.எங்கள் ஊர்.)

விஜயநகர சமஸ்தானம் வழங்கிய ஒரு தானத்தை சோழர் கணக்கில் அதுவும் இராஜராஜர் கணக்கில் எழுதுவது நியாயமா சார்வாள்..? நிலதானம் என்றாலே இராஜராஜர்தான் உங்கள் நினைவுக்கு வருவாரா 2ஜி.ஆண்டிமுத்து ராச்சா சார்வாள்.?
மாணவர்கள் வேதம் படிக்க ஒரு நிலத்தை வாங்கி விவசாய நிலமாக மாற்றி தானம் செய்துள்ளனர் பறையர் சமூகத்தவர்கள். ஆம் மக்களே பறையர்களிடமிருந்து நிலத்தை பிடுங்கி பார்ப்பனர்களுக்கு குடுத்ததுக்கு ஆதாரம் இருக்கோ இல்லையோ, மாணவர்கள் வேதம் படிக்க பறையர்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்த வரலாற்றுக்கு தெளிவான ஆதாரம் உண்டு.!
இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் சபையின் அறிவிப்பின் அடிப்படையில் புற்களாலும், புற்றுகளாலும் நிறைந்து காணப்பட்ட நிலம் ஒன்று விற்பனைக்கு வருகிறது. இதைக்கேட்ட செல்வந்தன் ஒருவன் அந்த நிலத்தை வாங்குகிறான். ஊர் சபையிடமிருந்து வாங்கிய அந்த நிலத்தை சீர்செய்து விவசாய நிலமாக மாற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம். அதை மனதில்கொண்டு வேலையாட்களைக் கொண்டு பணியை ஆரம்பிக்கிறான்.!
விவசாய நிலமாக மாற்ற வேண்டும் என்ற காரணத்தால் முதலில் குளம் வெட்டி அந்த குளத்தில் தேங்கும் நீரைக்கொண்டு விவசாயம் செய்து பாழடந்தை அந்த பூமியை விளைநிலமாக மாற்றி பாசன வசதிக்காக ஒரு ஆள் நியமித்து வேலையும் செய்து அதை விளைநிலமாக மாற்றுகிறான். அந்த நிலத்திற்கு "பறையன் வசக்கல்" என்று பெயரிடுகிறான். அதோடு கோவில் ஒன்றிற்கு விளக்கேற்ற நெய்யின் செலவுக்கு ஒரு பசுவும் கன்றும் தானமாக அளித்ததோடு, அந்த நிலத்தை மாணவர்கள் வேதம் கற்பதற்காக தானமாகவும் அளித்துள்ளான். இத்தகவலை அந்த செல்வந்தனே கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளான்.!
இந்த மகத்தான பணிகளைச் செய்த செல்வந்தன் யாரென அறிவீர்களா??? அவன்தான் பறையர் சமூகத்தை சேர்ந்த பூவன் பறையன். இதற்கு ஆதாரம் என்னவென கேட்பார்கள் அதை மேற்கொண்டு பார்க்கலாம்.
பொ.ஆ 920 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மூன்றாம் ராஜசிம்ம பாண்டியனின் கல்வெட்டுகள் தான் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவன் ஆட்சி செய்த காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டுதான் நான் மேற்கூறிய தகவல்களைத் தருகிறது…!
கல்வெட்டு வாசகம் : (AR NO. 86 of 1907)
முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம்
(அம்பாசமுத்திரம் அந்தணர் சபை) இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், மாணவர்கள் வேதம் கற்க மூலதனமாக அந்த நிலத்தை வழங்கிய செய்தியைத் தருகிறது. சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான். பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.!
இப்படியாக மாணவர்கள் வேதம் படிக்க இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பே தனது சொந்த நிலத்தை தானமாக கொடுத்தவர்கள்தான் பறையர் சமூகத்து மக்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களிடமிருந்து நிலத்தை பிடுங்கி இராஜராஜ சோழனோ, இராஜேந்திரச் சோழனோ கொடுத்ததற்கு யாதொரு சான்றுகளும் இல்லை.!
(கல்வெட்டுத் தகவல் : முனைவர் சங்கர நாராயணன்.)

No comments:

Post a Comment