குரான் படி பூமி தட்டையானது. அது நன்றாக விரிந்து இruப்பதற்காக (பேப்பர் வெயிட் போல) மலைகளை வைத்தி இருக்கிறார்.
வானம் என்பது திடமான கூரை. அதை சிறு விரிசல் கூட இல்லமல் செய்ததும் , அதை தூண்கள் இல்லாமல் ஆகாயத்தில் நிறுத்தி இருப்பதும் அல்லாவின் சக்திக்கு உதாரணம். இதுல காஃபிர்களின் மேல் வானத்தின் ஒரு துண்டு உடைந்து விழுந்தாலும் அவர்கள் அல்லாவின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்னு ஒரு வசனம். இதுதான் குரானின் வானவியல் அறிவியல்.
இதுக்கு மேல் ஒருபடி போய் அல்லா முதலில் பூமியை படைத்தார் அப்புறம் வானத்தைப் படைத்தார்னு ஒருவசனம். வானம் என்ப்து வெட்டவெளி அதில் தான் பூமி உட்பட்ட கிரகங்க்கள் இருக்குன்னு அல்லாவுக்கு தெரியாது.
நான் சொன்ன விஷய்ங்க்களுக்கு குரான் ஆதாரங்கள்
------------------------------------------------------------------------------
31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்;
------------------------------------
குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”
-------------------------------------------------------
குரான் 34:9. வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
-------------
குரான் 40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்;
------------
குரான் 50:6. அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
-------------------------
குரான் 52:44. வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
குரானில் 72:8. “நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

No comments:
Post a Comment