Tuesday, July 17, 2012

கர்த்தர் மனித குல எதிரி-ஆதிபாவக் கதை!

ஆதியாகமம்1:1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, 2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.3 அப்பொழுது கடவுள் ″ஒளி தோன்றுக″ என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்
27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
    
ஆதியாகமம் 2: 7 அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். 8 ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். 9 ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.15. ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.16 ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.17 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார்.



21 ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 22 ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். 23 அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.

25 மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.
    
ஆதியாகமம் 3:1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது. 2 பெண் பாம்பிடம், ″தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். 3 ஆனால் 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்,″ என்றாள். 4 பாம்பு பெண்ணிடம், ″நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 5 ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்″ என்றது. 6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். 7 அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
8 மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். 
9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ″நீ எங்கே இருக்கின்றாய்?″ என்று கேட்டார். 10 ″உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்″ என்றான் மனிதன்.
11 ″நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?″ என்று கேட்டார். 12 அப்பொழுது அவன், ″என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்″ என்றான். 13 ஆண்டவராகிய கடவுள், ″நீ ஏன் இவ்வாறு செய்தாய்?″ என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ″பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்″ என்றாள்.

கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும்
14 ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ″நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். 15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்″ என்றார். 16 அவர் பெண்ணிடம் ″உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்″ என்றார். 17 அவர் மனிதனிடம், ″உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். 18 முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய். 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்″ என்றார்.

21 ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார். 22 பின்பு ஆண்டவராகிய கடவுள், ″மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது″ என்றார்.  23 எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.




ஆண்டவனாகிய கர்த்தர் மனிதன் - நன்மை, தீமை அறியும் அறிவு இல்லாமல் மிருகம் போலே தான் படித்தார். 
பாவம் கர்த்தர்.

பாம்பு மனிதனுக்கு நன்மை, தீமை அறிய்ம் அறிவு தந்தது. கடவுள் பயந்து, உடை ந்து ஏதேன் தோட்டத்திலுருந்து விரட்டினார்.
http://www.mediafire.com/?712o3180n6yo877

இக்கதைப்படி மனிதன் அறிவு பெற உதவியது சாத்தான் தான் உண்மையில் கடவுள்.


கர்த்தர் இக்கதைப்படி மனைதகுல எதிரி விரோதி.

8 comments:

  1. மனிதன் அறிவு பெற்றதால் துரத்தினார்.

    இத்க் தான் யூத மதம் சொல்லும் - எனில் இது கடவுள் விரோதக் காட்டுமிராண்டி புத்தகமே. அல்லது கர்த்தர் சாத்தானே

    ReplyDelete
  2. கிறிஸ்துவ பள்ளியில் தினமும் கர்த்தரே என ப்ரேயரில் பாடுவேன். ஆசிரியர்கள் இந்து மதத்தைக் கேலி பேசுவார்கள்.

    ஆனால் பைபிள் இவ்வளவு கேவலமாக உள்ளதா?

    ReplyDelete
  3. ஆதி பாவம் கதை- அடு இயேசுவால் விலகியது எனக் கேள்விபட்டுள்ளேன்.

    அதை விளக்குங்கள்.

    ஆனால் ஆதி பாவக் கதை உண்மை எனில் கர்த்தர் மனித குல விரோதி தான்.

    ReplyDelete
  4. அனைவர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    இந்த பூமியில் மனிதன் மரணமடையக் காரணம் ஆதாம் ஏவாள் செய்த பாவம் தான். அது ஏசுவின் சிலுவை மரணம் மூலம் போனதாம்.

    மரணத்திற்கான காரணத்தை- சாபம் நீக்கியதாம் ஏசுவின் மரணம். ஆனால் பேதுரு பவுல் முதல் இன்றும் அனைவரும் பூமியில் இறக்கிறார்கள்.

    ஆதிபாவம் கதை பவுலின் பரிசுத்த உளறல்.

    ReplyDelete
  5. ஆர்ய ஆனந்த்August 5, 2012 at 6:53 AM

    மதக்கோட்பாடுகள் பகுத்தறிவிற்கு
    தர்க்க அறிவிற்கும் புறம்பாகவே உள்ளன. அதனால்தான் மதங்கள் அனைத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள், தர்க்கரீதியாக சிந்திக்காதீர்கள் என்று கூறுகின்றன. பகுத்தறிவுடன் சிந்திக்கிற எந்த மனிதனும் மதங்களை புறந்தள்ளுவான்.

    ReplyDelete
  6. ஆர்ய ஆனந்த்August 5, 2012 at 7:08 AM

    பழைய ஏற்பாட்டின் யாவே(Yaweh) தர்க்க அறிவுக்கு புறம்பான, நியாயமற்ற, துன்புறுத்தி இன்பம் காணும் கொடூர தீய சக்தியாகவே தோன்றுகிறார்.

    யூதர்களின் இந்த கற்பனை யாவேவை முன்மாதிரியாக வைத்துதான் குர்ஆனில் அல்லாஹ்வை முஹம்மது
    தன் கற்பனையில் உருவாக்கினார்.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் ஊக்க்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  8. முட்டாள் கிறிஸ்தவர்கள் இன்னும் இந்த ஆதாம் ஏவாள் கட்டுக்கதையை நம்புவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...