Monday, October 21, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து-பொருளும் விளக்கமும் சிதைத்த திமுக அராஜகமும்

  தமிழ்த்தாய் வாழ்த்து உடன் பொருளும் விளக்கமும்)



பள்ளி சென்ற காலத்தில் இருந்து நாம் பல முறை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து.பதம் உணர்ந்து, பொருள் உணர்ந்து இனி அதைப்பாடுவோம்.
பாடல்:
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே !
- மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
பத உரை:
ஆரும்- ஒலிக்கும்
மடந்தை- பெண்
எழில்- அழகு
பிறைனுதல்- பிறை போன்ற நெற்றி
தரித்த- அணிந்த
நறும்- வாசனை
அணங்கு- பெண்.
பாடலைப் பிரித்துப் பொருள்கொள்ளும் முறை:
நீர் ஆரும் கடல் உடுத்த நிலம் மடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனம் என திகழ்பரதக் கண்டம் அதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
விளக்கம்:
ஒலி எழுப்பும் கடலை ஆடையாக உடுத்துகின்ற நிலமாகிய பெண்ணின் அழகு ஒளிருகின்ற சிறப்பு பொருந்திய முகமாக திகழ்வது பரதக்கண்டம். அதில் தெற்கு நாடுகள் பிறை போன்ற நெற்றியாகும். அவற்றில் சிறந்த திராவிட நாடு அந்த பிறை போலும் நெற்றியில் நல்ல மணம் பொருந்திய திலகமாக திகழ்கிறது. அந்த திலகத்தின் வாசனை போல அனைத்து உலகமும் இன்புற்றிருக்க எல்லாத்திசைகளிலும் புகழ் மணக்க இருக்கின்ற (புகழ் பெற்ற) தமிழ் ஆகிய பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் திறத்தைக் கண்டு எங்கள் செயலை மறந்து வாழ்த்துகிறோம்.
பி.கு: இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. கடலுடுத்த நிலம், திகழ் பரதம் ஆகியவை வினைத்தொகைகள். அஃதாவது அந்த வினைச்சொற்கள் முக்காலத்திற்கும் பொருந்தி வரும்.(திகழ்ந்த பரதம், திகழ்கின்ற பரதம், திகழும் பரதம் எனக் கொள்ள வேண்டும்). இப்படி நிலத்தைப் பற்றியும், பாரதத்தைப்பற்றியும் முக்காலத்திற்கும் பொருந்த சொல்லி, தமிழப்பற்றி சொல்லும் போது 'இருந்த' என இறந்த காலத்தில் கவிஞர் குறிப்பிட்டது உள்ளூர வருத்தாமகவே உள்ளது. (சுபாஷினி)

மனோண்மணீயம் நூலில் உள்ள முழுப்பாடல்:
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லைஅறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
 நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

English Translation from Wikipedia:
The Authentic English translation of the above song is as follows: "Bharat is like the face beauteous of Earth clad in wavy seas; Deccan is her brow crescent-like on which the fragrant 'Tilak' is the blessed Dravidian land. Like the fragrance of that 'Tilak' plunging the world in joy supreme reigns Goddess Tamil with renown spread far and wide. Praise unto You, Goddess Tamil, whose majestic youthfulness, inspires awe and ecstasy.Sriniketan

தமிழிசைக் குறிப்பு :- இப்பாடல் முல்லைப்பாணி எனும் பண்ணில் அமைந்துள்ளது. மூன்றன் நடை தாளத்தில் அமைந்துள்ளது. முல்லைப்பாணி, முல்லத்தீம்பாணி, முல்லையந்தீங்குழல் (முல்லை அம் தீம் குழல்), சிறுமுல்லை, சாதாரி, தாரப்பண், காந்தாரப் பண், ஆசான், ஆசான் திறம் என பல்வேறு பெயர்கள் கொண்டுள்ளது. தமிழிசையின் முதல் பெரும்பண் செம்பாலை எனும் முல்லைப்பண் (அரிகாம்போதி / MixoLydian). இந்த முல்லைப்பண்ணின் திறப்பண் தான் சிறுமுல்லை (மோகனம் / Major Pentatonic). எனவே இது தமிழிசையின் முதல் சிறுபண். முல்லைப்பண், சிறுமுல்லை இரண்டு பண்களையும் தமிழர்கள் மிக உயர்வான இடத்தில் வைத்துக் கொண்டாடினர் எனும் உண்மையை நாம் தமிழ் இலக்கியங்களில் காணலாம்[6]. உலகெங்கிலும் பல நாகரிகங்களிலும், இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பிருந்து இன்றுவரை இந்த சிறுமுல்லைப்பண் மிகவும் புகழ்பெற்று பயன்பாட்டில் உள்ளது[7][8]. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்பண்ணைத் தெரிவு செய்தது பாராட்டுக்குரிய செயல். தமிழிசைப் பண்கள் குறித்து இந்தப் பக்கத்தில் பழந்தமிழ் இசை#பழந்தமிழிசையில் பண்கள் காணலாம்.



தமிழ்த் தாய் வாழ்த்தும் திராவிட துரோகமும்.


தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த வளர்ச்சியையும், நல்ல முயற்சிகளையும் இரண்டாயிரம் ஆண்டு காலமாய் என்றென்றைக்கும் எதிர்த்தே வந்திருக்கிறது ஆரியம்.

இந்த ஆரிய பகையாளிக்கு உற்ற துணையாய் இருந்து, தமிழை அழிக்க, எல்லாவித அட்டூழியங்களையும் துணிந்து செயல்படுத்திய துரோகத்தை எல்லா காலமும் செய்து வந்தது திராவிடம்.

தமிழருக்கு எதிராக ஆரியமும் திராவிடமும் செய்த பல்வேறு வரலாற்றுக் கொடுமைகளில் ஒன்று தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் செய்த துரோக குளறுபடிகள்.

1. திராவிடத்தால் நீக்கப்பட்ட வரிகள்

நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் பாடலின் நீக்கப்படாத முழுமையான வரிகளுடன் உள்ள பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பாடலில் திராவிடத்தால் நீக்கப்பட்ட வரிகள் மஞ்சள் நிற பின்புலத்தில்.


2. நீக்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதியே. 

ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா என்ற வரிகளை ஆரிய ராஜாஜி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நீக்கியவர் திராவிட கருணாநிதியே.

ஆரிய சமஸ்கிருதம் அழிந்தது போல இல்லாமல் என்றென்றும் இளமையாய் வளரும் மொழி தமிழ் என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆரியமும் திராவிடமும் செய்த கூட்டுசதியில் இழந்து போன மகத்தான வரிகள் அவை.



3. சிறிய வரலாற்றுப் பின்னணி.

1) 1969 ல் அண்ணா தலைமையில் தி.மு.க. அரசு அமைந்ததும் தமிழக அரசின் அதிகாரபூர்வ பாடலை உருவாக்க நினைத்தவர் அறிஞர் அண்ணா.

2) ஆனால் அண்ணா அகால மரணமடைந்ததால், பின்வாசல் வழியாக வந்த கருணாநிதி 1970 ல் அதிகாரபூர்வ பாடலாக அறிவித்தார்.


3) தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் 21 வகையான பாடல்களை கொடுக்க, அன்றைய முதல்வர் கருணாநிதி முதல் பாடலான இன்று நமக்கு நன்கு அறிமுகமான அந்த பாடலை தேர்வு செய்ய, பின்பு டி.எம் சௌந்தர்ராஜன், பி. சுசீலா அவர்கள் குரலில் அந்தப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

4) தமிழகத்தின் அனைத்து பள்ளி மற்றும் அரசு பொது நிகழ்ச்சிகளில் தொடக்கப்பாடலாக பாடப்படவேண்டும் என்று 1970 ல் அரசாணை வெளியிடப்பட்டது.


4. தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கிய 
பெ. சுந்தரம்பிள்ளை பற்றிய சிறு குறிப்பு:

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்தார் (ஏப்ரல் 41855 - ஏப்ரல் 261897).  இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. காண்க: 

5. தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு புரட்சிப்பாடல்:

1. 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1891 ல் உருவான தமிழின் புகழை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரட்சிப்பாடல்.

2. அன்றைய காலகட்டத்தில் விநாயக துதி, சரஸ்வதி துதி எனத் துவங்கிய செய்யுள் பாடல்களுக்கு மத்தியில் பொதுவான தெய்வம் என்று தொடங்கிய புரட்சிப்பாடல்.

3. பொதுவான தெய்வத்திற்கு 4 அடிகள், தமிழ்த்தாய்க்கு 12 அடிகள் என்று தொடங்கிய புரட்சி நூல் மனோன்மணீயம்.


4. கடவுள் வணக்கத்தின் முதல்வரிகளே அதிரடியான தலைகீழ் மாற்றம் நோக்கிய புரட்சி வரிகள்.

வேத சிகையும் = உபநிஷங்கள் 
விரி கலை = வேதங்கள்;  
மெய்யன்பர் போதமும் = சிவஞான போதம்  

இவற்றால் இறைவனை அடைய முடியாது என்று ஆரிய, பிராமணீயத்திற்கு மரண அடி கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
 


5. தமிழ் மொழியின் தனித்தன்மையே உலகின் மேன்மை

நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை = பூமித்தாய் 
சீராரும் வதனம் = இந்தியா என்னும் முகத்தில் 
பிறை நுதல் = தென்னிந்தியாவான தக்காண பீடபூமி என்னும் நெற்றிப்பொட்டாக


உலகமெல்லாம் இன்புறும் வகையிலான புகழைக்கொண்டுள்ள தமிழ் மொழியே

தமிழை நீச பாஷை என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழை தெய்வமாக போற்றிய பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல். (தமிழ்த் தெய்வ வணக்கம்)

6. காஞ்சி சங்கராச்சாரியாரும் தமிழ்த்தாய் வாழ்த்தும்.

செய்தி: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி "மட" "சின்ன"வா விஜயேந்திரர்
 


 
மனிதகுல விரோத 'நான்கு வர்ண மனுதர்ம சநாதன மனுதர்ம' த்தைக் கடைப்பிடித்து, 
தமிழில் பேசினால் தீட்டு என்று குளித்து, துவேஷம் கடைப்பிடிக்கும் காஞ்சி சங்கர மட சின்னவர் விஜேந்திர சாமியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் தனக்குத்தானே அவமரியாதை செய்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை.
 7.  "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்ற இனிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைக் கேட்க, காண: கானொளி.
 
காரைக்குடியில் உள்ள தமிழ்த்தாய் ஆலயம்.
 

உதவிய தகவல்களுக்கு நன்றி. காண்க: 
 திராவிட"  என்பது  இனம்,இடம் ,மொழி  இதில்  எதை குறிக்கிறது? இது விவா
தப்பொருளாக இருந்து வருகிறது.இது பற்றி அதிகமான நூல்கள் வந்துள்ளன.ஆரிய,
திராவிட என்பது இனத்தைக்குறிப்பதாக தொடக்கத்தில் மாக்ஸ் முல்லர் கூறி வந்தார் .ஆனால் பின்னர் அவர்  தனது கருத்தை மாற்றிக்கொண்டு  இந்தச்சொற்கள்
 மொழியைக் குறி
ப்பவை என்று 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்  தெளிவு‌ படுத்தினார்.
"Max Muller stated that language and race  were distinct  categories but by then the equation  had become an axiom and he  himself frequently confused the two"(quoted-The Aryan Debate-page 109-(2005)
 கால்டு வெல் தனது  திராவிட மொழிகளின்  ஒப்பிலக்கணம்(Comparative Grammar of the Dravidian-1856)  நூலில் திராவிட என்பது மொழிகளைக் குறிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 G.S.Oppert தனதுDravidians (1888)நூலில்  மொழிகளை  குறிப்பதாக கூறியுள்ளார்.பேராசிரியர்
 A.L.Basham தனது Studies in Indian History and Culture(1964) நூலில்  (page- 21) மொழியைக் குறிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்.அண்ணாமலைப்பல்கலைக்கழக ப்பேராசிரியர்
 மாகாவித்வான் ரா.இராகவையங்கார் திராவிட என்பது தமிழ்  மொழியைக் குறிக்கும் சொல் என்கிறார்(தமிழ் வரலாறு-பக்கம் 13-20)(2017-ஆம் ஆண்டு பதிப்பு).
பெரியார் அவர்கள் " திராவிடர்"என்பது இனத்தைக்குறிப்பது  ஆகும் என்கிறார். அண்ணாதுரைஅவர்கள்  திராவிடநாடு என்று இடத்தைக் குறிப்பதாக கொண்டு தனது கட்சிக்குபப் பெயர் வைத்துள்ளார்.இந்திய தேசியகீதத்திலும் தமிழ் நாடு தேசிய கீதத்திலும் திராவிட என்பது இடத்தைக் குறிப்பதாகவே கொள்ளப்பட்டுள்ளது.  மேற்கண்ட இனம்,இடம் என்ற கருத்துக்களை உலகம் எங்கும் உள்ள அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
 திராவிட(Dravidian) என்பது தென்னிந்திய மொழிகளைக் குறிக்கவே அறிஞர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
    ----- அத்திவெட்டி வேலாயுதம் சிதம்பரம் வழக்கறிஞர்


 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...