Saturday, August 15, 2015

தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம், தலித் கிறிஸ்தவர் மோசடிகள் -1

 தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம்,  தலித் கிறிஸ்தவர்: பிரச்சினை, உண்மை, பொய்  மற்றும் மாயைகள் (1) 
வேதம் வேதபிரகாஷ்
தலித் விடுதலை இறையியல் - ஆயுத போராட்டம்- இந்தியன் வங்கி
தலித் விடுதலை இறையியல் – ஆயுத போராட்டம்- இந்தியன் வங்கி
மதமாற்றம்விடுதலை இறையியல்தொடரும் தலித்பிரச்சினை (1986): தலித் கிறிஸ்துவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க வேண்டும், அதாவது, செட்யூல்ட் கேஸ்ட் என்கின்ற எஸ்.சி இந்துக்கள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பிறகும், அதே நிலை தொடர வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள். சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயத்தை மறைத்து இவர்கள் இவ்வாறு கலாட்டா செய்து வருகிறார்கள். உண்மையில் கிறிஸ்துவ மதம், மிகச்சிறந்தது என்றும், அதில் சேர்ந்து விட்டால், எல்லா பாவங்களும் போய்விடும், சந்தோஷம் பெருகும், செல்வம் வந்து சேரும் தமிழகத்திற்கும், இந்த தலித் கிருத்துவப் பிரச்சினைக்கும் அதிகமான தொடர்பு உள்ளது என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
தலித் விடுதலை இறையியல் - ஆயுத போராட்டம்
தலித் விடுதலை இறையியல் – ஆயுத போராட்டம்
இந்தியாவில் வாடிகனின் விடுதலை இறையியல் அறிமுகம்(1986): 1986ல் வாடிகன் விடுதலை இறையியல் மூலம் ஆயுத புரட்சி மற்றும் வன்முறைகளுக்கு ஒப்பளித்தது. அறுபது பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் மார்க்ஸிய முறைகளை முழுவதுமாக எதிர்த்தாலும், அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதங்களை உபயோகப்படுத்துவதை ஆதரித்தது[1]. வன்முறை, வன்முறைக்கு எதிரான வன்முறை, பதில்-வன்முறை என்றெல்லாம் சித்தாந்தத்தை வைத்தது[2]. பைபிளிலிருந்து பல வசனங்கள் இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்பட்டன. பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வரவில்லை, கத்தியை ஏந்தி வந்தேன், கத்தியில்லாதவன், வஸ்திரத்தை விற்று கத்தியை வாங்கிக் கொள்ளுங்கள், போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி ஆயுதங்களை ஏந்துங்கள் என்று வன்முறையினைத் தூண்டி விட்டனர். ஏசு எப்படி கயிறை சாட்டையாக்கி, காசுள்ளவர்கள், வட்டிக்கு விடுபவர்கள் முதலியோரைத் துரத்தி அடித்தாரோ, அதே போல, நாமும், ஆயுதங்களை கையில் ஏந்தி முதலாளிகளை, சுரண்டல்காரர்களை  விரட்டியடிக்கலாம் என்று மார்க்ஸீய-கிருத்துவத்தை போதிக்க ஆரம்பித்தனர். இது போலவே, தலித்துகள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும், உயர்ஜாதியினரை விரட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மறைமுகமாக போதிக்க ஆரம்பித்தனர்.
தலித் விடுதலை இறையியல் -இந்தியன் வங்கி-மாமங்கலம்
தலித் விடுதலை இறையியல் -இந்தியன் வங்கி-மாமங்கலம்
புதிய விடுதலை இறையியல்: கொலைகொள்ளைபாதிரிகள்கடைபிடிக்கும் புதிய சித்தாந்தம் (1986): வாடிகன் ஆதரவு 1986ல் கிடைத்தாலும், முன்னமே, கிருத்துவர்கள் அதனை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். உடனே சொல்லி வைத்தாற்போன்று, மாமங்கலம் இந்தியன் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட இரு கத்தோலிக்கப் பாதிரிகள் கைது செய்யப்பட்டனர்[3]. முதல் செய்தி வந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு, ஏப்ரல்.7, 1986 அன்று, இரண்டாவது செய்தி வந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு, ஏப்ரல்.10, 1986. ஆகவே மூன்றே நாட்களில் இப்பாதிரிகள் வாடிகனின் விடுதலை இறையியல் சித்தாந்தத்தை ஊக்குதலுடன் செயல்படுத்தியிருக்க முடியாது. எனவே, அதற்கு முன்பே அத்தகைய வன்முறை இறையியலை தமிழகத்தில் ஆரம்பித்து விட்டனர் என்று தெரிகிறது[4]. விடுதலை இறையியலில் விற்பன்னரான, பஸ்தியான் வைலிங்கா என்பவர் மதுரை செமினரியில் 1975லிருந்து போதித்து வருகிறார்[5]. மார்க்ஸியம்-கிருத்துவம் ஒப்பீட்டில் இவர் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். ஜான் சி.பி. வெப்ஸ்டர் என்கின்ற பாதிரி 1960-1981 ஆண்டுகளில் பெங்களூரு உட்பட பல இடங்களில், இந்தியாவில் இருந்து வேலை செய்து வருகிறார். இவர் எழுதிய விடுதலை இறையியல் புத்தகத்தை தலித் சவிடுதலை கல்வி டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.
Christian caste system - Dalit Jesus christ
Christian caste system – Dalit Jesus christ
வன்முறை இறையியல் இந்தியர்களைப் பிளக்கிறது: முதலில் சுதந்திரம் தரும் இறையியல் / விடுதலை இறையியல் (Liberation Theology) என்றெல்லாம் ஆரம்பித்து, மதமாற்றத்தை ஆரம்பித்தனர். கிறிஸ்து எப்படி ஆயுதத்தை எடுத்து போராடு என்றாரோ, அதேபோல, கிருத்துவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தலாம் என்று சோதனையை ஆரம்பித்தனர். ஆனால், பாதிரிமார்கள் வங்கிக் கொள்ளையில் மாட்டிக் கொண்டு சிறைக்குச் சென்றனர். பைபிள் உண்மையா பொய்யா என்றெல்லாம் விவாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தியாவின் அமைதியைக் குலைக்க, இத்தகைய சித்தாந்தங்களை பரப்புவது, மக்களிடையே பிளவுகளை உண்டாக்குவது முதலிய வேலைகளில் ஏன் வாடிகன் மற்ரும் அதன் பிரதிநிதிகள் இங்கு வேலை செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. லத்தீன் அமெரிக்க முறையை இங்கு கடைபிடித்து, சேயல்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்தவுடனே, அது தோல்வியடைந்து இவ்விதமாக முடிந்தது.
சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன சூசை 1985
சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன சூசை 1985
சூசை வழக்கின் பின்னணி: சமூக நடவடிக்கைக்கான சங்கம் (Society for Social Action), 1983ல் உச்சநீதி மன்றத்தில் ஒரு ரிட் பெடிசனை 9596 / 1983 போட்டது. இதற்கு வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மார்கரெட் ஆல்வா என்ற காங்கிரசின் எம்.பி (டிசம்பர் 1984ல் இவர் ராஜிவ் காந்தி அமைச்சரவையில் மந்திரியும் ஆனார்). செப்டம்பர் 30, 1085 அன்று உச்சநீதி மன்றம் தள்லுபடி செய்து தீர்ப்பளித்தது. 1985ல் அமெரிக்க பெரிஸ்பிடெரியன் சர்ச் (Prebsterian Church) உதவியுடன் தலித்விடுதலை கல்வி டிரஸ்ட் (Dalit Liberation Education Trust) உருவாக்கப்பட்டது. அதன் மேனேஜிங் டிரஸ்ட் ஹென்றி தியாகராஜ் என்பவர். ஏபரல் 28, 1987 அன்று, அசாரியா பாதிரியாகி 25 வருடம் ஆன நினைவாக, “சூசை சமூகத்திற்கான அசாரியாவின் உதவித்தொகை” (Azariah Fund for Soosai Community) நிறுவப்பட்டது. 1989ல் சூசைக்கு ஒரு பங்கு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. ஆக இங்கு சூசையின் பெயரால், பொரென்டெஸ்டென்ட் சர்ச் ஆரம்பித்து வைத்த பிரச்சினையை, கத்தோலிக்க சர்ச் தனக்கு சாதகமாக உபயோகித்து வருகிறது.
சூசை தன் குடும்பத்துடன்
சூசை தன் குடும்பத்துடன்
1982 முதல் 1985 வரை சூசை வழக்கு: மே.1982ல் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டு, ஜூலை 27, 1982 அன்று ‘பங்க்’ எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கப்பட்டது. சூசை என்ற கிருத்துவரும், தான் முன்னர் எஸ்.சி இந்துவாக இருந்ததாக விண்ணப்பித்தார், ஆனால், கொடுக்கப்படவில்லை. விசாரித்தபோது, அரசு ஆணையின் படி [G.O.Ms. No. 580 Social Welfare Department dated February 13, 1982.] அச்சலுகை எஸ்.சிக்கள்க்கு மட்டும் தான் என்று தெரியவந்தது. தவிர இன்னொரு சுற்றறிக்கையின் படி [Circular Letter No. 21711/ADWII/80-26 dated August 16/25, 1983], எஸ்.சி கிருத்துவர் இந்துவாக மாறினால், அரசில் இடவொதிக்கீடு செய்யப்பட்ட வேலை கொடுக்கப்படும். ஆனால், அவ்வாறு எஸ்.சி இந்து என்று வேலை பெற்ற பிறகு. மறுபடியும், கிருத்துவராக மதம் மாறினால், அவரது வேலை ரத்து செய்யப்படும் என்றிருக்கிறது[6]. இதனால், சூசை வழக்கு தொடுத்தார். சென்னை உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்ததால், உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்க என்று விளக்கியது[7]. இதை எதிர்த்து, மறுபரிசீலினை மனு போன்றவை அதையும் கிருத்துவர்கள் போடவில்லை. அத்தீர்ப்பு, அவர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டதால், மேல் முறையீடு அல்லது மறுபரிசீலினை மனு போட்டால், மேலும் பாதகம் ஏற்படும் என்று அமைதியாகி விட்டன.
© வேதபிரகாஷ்
15-08-2015
[1] இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு, ஏப்ரல்.7, 1986.
[3] இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு, ஏப்ரல்.10, 1986.
[4] Influenced by ‘liberation theology,’ several Indian theologians too began stressing the need for contextualising theology and worship in India. They placed Dalit (the most oppressed group of people) as the focal point of their theological praxis. The emphasis here is on an anti-caste ‘social gospel,’ solidarity with the poor, and participation in their struggles for liberation (see Antony Raj 1992, Mark 1994 and Joe Britto 1997).
Congregation for the Doctrine of Faith, Instruction on Certain Aspects on Theology of Liberation, Bangalore: Theological Publications. 1984.
Congregation for the Doctrine of Faith, Instruction on Christian Freedom and Liberation, Bangalore: Theological Publications, 1986.
[5]  Chrustopher Rowland (Ed.), The Cambridge Companion to Liberation Theology, Cambridge, London, 1999, p. Xi, see his article, Liberation Theology in Asia, pp.39-62.
[6] In the connected writ petition No. 1017 of 1984 the submissions have proceeded substantially on the same grounds, and relief has been sought additionally against a Circular Letter No. 21711/ADWII/80-26 dated August 16/25, 1983 issued by the Government of Tamil Nadu to the Tamil Nadu Public Service Commission stating that “Scheduled Caste Christians who revert to Hinduism and on that basis obtain appointments to reserved seats in Government services, and having done s0 change their religion once again after their entry into Government service are liable to have their selection cancelled. http://indiankanoon.org/doc/1724190/
[7] It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin Hinduism – continue in their oppressive severity in the new environment of a different religions community.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...