Tuesday, August 25, 2015

உடையும் இந்தியா - Breaking India - ராஜீவ் மல்கோத்திரா & அரவிந்தன் நீலகண்டனும்.

 ஒரு கிறிஸ்துவ ஏட்டின் விமர்சனத்தில் சில பகுதிகள்
 Breaking india 3d engBreaking india 3d 
ஆசிரியர்: ஆர். பாலா
தொலைப்பேசி: + 64 9 272 8061
ஈ-மெயில்: biblelamp1995@gmail.com; blamp@ihug.co.nz
இணையதளம்: www.biblelamp.me
 ராஜீவ் மல்கோத்திரா, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களை கிறிஸ்தவத்தின் பெயரில் இந்த மனிதர்கள் செய்து வருவது கொதிப்படையச் செய்வதில் ஆச்சரியமில்லை. அந்தக் கொதிப்பின் விளைவாகவே இந்த நூலை அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிகின்றது.


World Council of Churches, அரசரடி இறையியல் கல்லூரி, லூதரன் குருக்குல் அமைப்பு போன்றவை கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை எப்போதோ நிராகரித்து லிபரலிசம், ஹியூமனிசம், புளூரலிசம் போன்ற கோட்பாடுகளை நம்ப ஆரம்பித்து அவற்றின் வழியில் போய்க் கொண்டிருப்பதால் அத்தகைய அமைப்புகளையும் மெய்க்கிறிஸ்தவ அமைப்புகளாகக் கருத முடியாது.

 கிறிஸ்தவம் என்ற பெயரில் இருக்கும் அத்தனை அமைப்புகளையும் இணைத்துக் கிறிஸ்தவமாகப் பார்த்துக் கருத்துத் தெரிவிப்பது என்னைப் போன்ற வேத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உடன்பாடில்லாதது மட்டுமல்ல; வருத்தத்தையும் தருகிறது. இந்துக்களான இவர்கள் இப்படி நினைப்பதற்கு கிறிஸ்தவ போலிவேடதாரிகள் இடமேற்படுத்தி விடுகிறார்கள்.

திராவிட தமிழ் சமயக் கோட்பாட்டிற்கு தெய்வநாயகத்துக்கு துணைபோகிற ஒரே விஷயம் அப்போஸ்தலன் தோமா மேற்கிந்திய கரையோரத்திற்கு வந்திருந்தார் என்ற வெறும் ஐதீகம் மட்டுமே. இந்த வரலாற்றால் நிரூபிக்கப்படாத, நம்பக்கூடிய எந்த ஆதாரமும் இல்லாத, வாய்வழிவந்த ‘கர்ணபரம்பரைக்’ கட்டுக்கதையை வைத்தே திராவிட தமிழ் சமயம், திராவிட கிறிஸ்தவம் என்பதெல்லாம் உருவாக்கப்பட்டது. இந்தக் கதையை ஆரம்பித்து வைத்தவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களே. இந்தியாவில் மேற்குக் கீழ்க்கரைப் பகுதியில் ஆரம்பித்த ‘சீரியக் கிறிஸ்தவம்’ கத்தோலிக்க மதக் கோட்பாட்டையும், சிலை வணக்கத்தையும் பின்பற்றிய ஒரு மதம். அவர்களை அடிப்படையாக வைத்தே தோமா கட்டுக்கதை ஆரம்பித்தது. இதுபற்றி எழுதும் வரலாற்றாசிரியரான ஸ்டீபன் நீல், ‘பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த இந்த தோமா கதை இருண்ட, குழப்பமான, அநேக விஷயங்களில் அறிவுக்குப் புறம்பானதுமான ஒன்று’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீபன் நீல் பிஷப் பிரவுனின் கருத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘ஜெக்கொபைட் சபையிடம் எந்த ஆதாரக்குறிப்பும் காணப்படாததால் ஒன்றுக்கொன்று முரணான தோமா கதைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதும் இலகுவானதல்ல’ என்று பிரவுன் குறிப்பிட்டிருக்கிறார்.

 தெய்வநாயகம், அவரது மகள் தேவகலாவும்இருவரும் தமிழகத்து பாரம்பரிய சி.எஸ்.ஐ திருச்சபையை ஆரம்பத்தில் சேர்ந்திருந்தவர்கள். அந்தத் திருச்சபை வேத நம்பிக்கைகளைத் துறந்துவிட்டு தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றுகிற அமைப்பாக என்றோ மாறிவிட்டது. தெய்வநாயகத்துக்கு கிறிஸ்தவத்தில் பெரிய ஈடுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சி.எஸ்.ஐயோடு தன்னை தொடர்புபடுத்தி அவர் எந்தக் கிறிஸ்தவ பணியிலும் ஈடுபட்டிருக்கவில்லை. அவர் கிறிஸ்தவ வேத விளக்கங்கொடுத்தோ, கிறிஸ்துவை மகிமைப்படுத்தியோ எதையும் எழுதவில்லை. இருந்தபோதும் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியிருப்பது போல் தெய்வநாயகமும் அவருடைய மகளும் சமூக, அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை வெறுத்து அதிலிருந்து திராவிட இனத்தைப் பிரித்து, திராவிட மக்கள் ஆரிய இந்துக் கலப்பில்லாத தமிழ் மதமொன்றை பின்பற்றித் தென்னிந்தியாவில் வாழ்ந்திருந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்....தெய்வநாயகமும், அவருடைய மகளுமே இதை அமெரிக்காவரை கொண்டுபோய் பிரபலப்படுத்தினார்கள். இந்த ‘திராவிட தமிழ் சமயக்’ கட்டுக்கதையில் கிறிஸ்தவத்தை நுழைத்ததுதான் தெய்வநாயகத்தின் பெருந்தவறு. தன்னுடைய திராவிடத் தமிழ் சமயப் பிரச்சாரத்தைத் தூக்கி நிறுத்த இவர் கிறிஸ்தவத்தைத் தூணாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் உண்மை.


கர்ணபரம்பரைக் கதைகளை & விக்கிரமாதித்தன் கதைகளைப்போல ஆராயாமல் அப்படியே நம்பிவிடுவது நம்மினத்தில் காலாகாலமாக இருந்துவரும் வழக்கமாதலால் தோமா கதையும் நிலைத்து நின்றுவிட்டது. இது தெய்வநாயகத்துக்கு உள்ளுக்குள் தெரியாமலிருந்திருக்காது. மேலை நாட்டவர்கள் எந்தளவுக்கு கீழைத்தேய மாயவலைகளுக்குள் சிந்தனையின்றி விழுந்துவிடுகிறார்கள் என்பதையே வேர்ல்ட் மெகசின் ஆசிரியர் மேர்வின் ஒலாஸ்கி தெய்வநாயகத்தின் கோட்பாட்டிற்கு ஆதரவளித்து அதை பத்திரிகையில் வெளியிட்டது சுட்டிக்காட்டுகிறது.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் இதைச் செய்ததில் ஆச்சரியமில்லை. கிறிஸ்துவின் எந்த அப்போஸ்தலனும் வேதத்தைத் திரித்து ஒரு நாட்டுக்கும், இனத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றவகையில் அந்தந்த பிரதேசத்திற்கேற்ற கிறிஸ்தவத்தை (தமிழ் சமயம்) உருவாக்க மாட்டான். இப்படிச் செய்தவராக தோமாவை சித்தரிப்பது அவரை இழிவுபடுத்தும் செயல்.

இதேபோல சாது செல்லப்பாவும் அவருடைய ‘அக்னி மினிஸ்டிரிஸும்’, ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற குழுவினரும் தமிழகத்தில் இயங்கி வருகிறார்கள். ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற பெயரே இது மெய்க்கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதது என்பதை அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. இவர்களுடைய போதனையும் நோக்கமும் தெய்வநாயகத்தைவிட வேறுபட்டவை. தெய்வநாயகம் சமூக, அரசியல் காரணங்களுக்காக திராவிட இனப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு அந்த இனத்தை மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அதை நிலைநாட்ட கிறிஸ்தவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த, இவர்கள் இந்து வேதங்களில் காணப்படும் ‘பிரஜாபதி’ இயேசுதான் என்று கூறி இயேசுவை இந்துக்கள் கிறிஸ்தவ வேதத்தை படிக்கவேண்டிய அவசியமில்லாமல் இந்துவேதங்களில் இருந்தும், பகவத்கீதையைப் படித்தும் கண்டுகொள்ளலாம் என்று விளக்கி தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவும் மெய்க்கிறிஸ்தவத்தை அடிப்படையிலேயே அவமதிக்கும் வேதவிரோதப் போக்கே. இந்திய வேதங்களில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்பது சத்திய வேதத்தை நிராகரிப்பதற்கு சமமானது. அவற்றின் மூலம் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்றால் சத்திய வேதமும் அவையும் சம அதிகாரமுள்ளவை என்றாகிவிடும். சுயலாப நோக்கங்களுக்காக தீவிர மதமாற்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சத்தியத்திலெல்லாம் அக்கறை இருக்காது.

இந்து சாமியார்களைப்போல உடைதரிப்பதும், பூணூல் அணிவது போன்றவையெல்லாம் ஏற்கனவே கத்தோலிக்கரான டீ நொபிளி செய்திருந்ததுதான். அம்மதமாற்ற முறைகளுக்கு மறுபடியும் உயிர்கொடுத்து கிறிஸ்தவ வேதத்தையும் அதன் அடிப்படைப் போதனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுவிட்டு இந்து வேதங்களிலும், சைவ சிந்தாந்த நூல்கள், திருக்குறள் போன்றவற்றில் இருந்தெல்லாம் தேடித்தேடி கிறிஸ்தவ விளக்கத்தை இவர்கள் கொடுத்து வருகிறார்கள் சாது செல்லப்பா போன்றவர்கள். அதையெல்லாம் தவறு என்று எதிர்வினை செய்ய அவற்றை எழுதிய நாயன்மார்களும், வள்ளுவரும் இன்று உயிரோடில்லை. இதெல்லாம் அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிரானவை என்ற கவலையே இவர்களுக்கு இல்லை. இந்துக்களுக்கு இவர்கள் காட்டிவரும் ‘இயேசு’ கிறிஸ்தவ வேதம் அறியாத, கிறிஸ்தவ வேதத்தில் பார்க்க முடியாத ஓர் இயேசு. இந்தப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும்கூட பிசாசின் சித்துவேலைகளில் ஒன்றுதான். கர்ஜிக்கும் சிங்கம் போல் உலவிவருகின்ற பிசாசு கிறிஸ்தவத்தை மாசுபடுத்தி, இயேசுவின் பெயருக்கு களங்கத்தை உண்டாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயங்க மாட்டான் என்பதை இவர்களுடைய செயல்கள் உணர்த்துகின்றன.

நூலாசிரியர்கள் அதிகமாகவே வேலை செய்து கிறிஸ்தவ நிறுவனங்களின் பட்டியல்களைச் சேகரித்து அவர்கள் செய்து வரும் பணிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பட்டியலில் இருப்பவை எல்லாமே இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்று சொல்ல முடியாது. அநேக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் செக்யூலர் லிபரல் நிறுவனங்களும், வேர்ல்ட் விஷன் போன்ற சமூக சேவை செய்யும் நிறுவனங்களும் அவர்களுடைய பட்டியலில் அடங்குகின்றன. அடிக்கடி ‘இவெஞ்சலிக்கள்’ என்ற பதத்தை நூலில் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு அதன் அர்த்தம் புரிந்ததோ தெரியவில்லை. இவெஞ்சலிக்கள் என்ற பதம் மெய்க்கிறிஸ்தவ வேத போதனைகளை விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்களை மட்டும் குறிக்கும் பதம். இன்றைக்கு அது கத்தோலிக்க மதத்தைத் தவிர்த்து கிறிஸ்தவமாக கண்ணுக்குத் தெரிகின்ற எல்லா அமைப்புகளுக்கும் உரித்தானதாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ நிறுவனங்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் நிச்சயம் உண்டு. இந்தியாவில் இயங்கும் அத்தகைய நிறுவனங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சுலபமாக பணத்தைச் சேர்த்துக்கொள்ளும் சுயலாபத்துக்காக நிறுவனங்களை ஆரம்பித்து மேல்நாட்டாரிடம் பணம் கேட்டு வருகிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். எந்தத் தகுதியும், ஆத்மீக பாரமும், வசதிகளும் இல்லாமல் அநாதைப்பிள்ளைகளுக்கு இல்லங்கள் நடத்தப் பணம் கேட்டு எனக்குக் கடிதம் அனுப்புகிறவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் அடியோடு மறுத்துவிட முடியாது. இப்படிப்பட்ட செயல்கள் இந்துமத அமைப்புகளில் நடக்காமலா இருக்கிறது? அன்றாடம் டி.வியிலும், பேப்பரிலும் அவை பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அரிசியில் கல்லிருந்துவிடுவதுபோல் கிறிஸ்தவப் போர்வை போர்த்துக்கொண்டிருக்கும் ஓநாய்கள் இருந்துவிடுவதை நாம் ஒருபோதும் இல்லாமலாக்கிவிட முடியாது. அதையெல்லாம் உடனுக்குடன் இல்லாமலாக்கிவிட நாமென்ன கடவுளா? இதற்காக கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்கள் எல்லோரையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து அவர்கள் எல்லோருமே இப்படித்தான் என்று நினைப்பது அறிவீனம். சோற்றில் கல்லிருக்கிறது என்பதற்காக முழுச் சோற்றையுமா தூக்கி எறிந்துவிடுகிறோம்; கல்லைத்தானே எறிந்துவிடுகிறோம்.

சுயநலத்துக்காக பெனிஹின் போன்ற மனிதர்களை வைத்து பெருங்கூட்டங்களை நடத்தி பணத்தை சுரண்டுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக நிச்சயம் இருக்க முடியாது. அந்தமாதிரியான செயல்களை கிறிஸ்தவ ஊழியமாக கிறிஸ்துவோ அவருடைய வேதமோ கருதவில்லை.

கோவில்களை உடைப்பதும், இந்துக்களின் மனம் நோகுமாறு நடந்துகொள்வதும், கன்னியாகுமாரியை ‘கன்னிமேரி’ என்று பெயர் மாற்றம் செய்ய முயல்வதும் கிறிஸ்தவ அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிரானது. அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறவர்களின் கிறிஸ்தவ விசுவாசம் கேள்விக்குரியது. உண்மையில் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. மெய்க்கிறிஸ்தவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

Breaking India கிறிஸ்தவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்.

உடையும் வீரமணி   உடையும் வீரமணி – பாகம் 2

கிறிஸ்தவ அடிமை ஈ.வே.ராமாசாமி நாயக்கர் திராவிட இயக்கத்தின் தலைமை பாதிரியார் - பேராயர் வீரமணி எழுதிய கோமாளித் தன்மான மறுப்பு.

Image result for உடையும் இந்தியா Image result for உடையும் இந்தியா



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...