Saturday, August 15, 2015

தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம், தலித் கிறிஸ்தவர் மோசடிகள் -2

தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம், தலித்  கிறிஸ்தவர்: பிரச்சினை, உண்மை, பொய் மற்றும் மாயைகள் (2) - வேதம் வேதபிரகாஷ்

தலித் போர்வையில் ஆராய்ச்சி -குருக்கள் கல்லூரி, வேப்பேரி
தலித் போர்வையில் ஆராய்ச்சி -குருக்கள் கல்லூரி, வேப்பேரி
1988ல் கிருத்துவர்களின் மறைப்பு நாடகங்கள்[1]: ஆகஸ்ட்.11 1988 சென்னை குருக்கள் இறையியல் கல்லூரியில், எம்.இ.பிரபாகரன் எழுதிய “தலித் இறையிலை நோக்கி” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்பாட்டம் செய்தனர்.
செப்டம்பர்.12 1988 அன்று சி.எஸ்.ஐ.சனாட் தலைமையில் ஒரு ஊர்வலம், சென்னை-மெரினாவில் கூட்டம் எல்லாம் நடத்தினர். எம். அஸாரியா, ஜி. கசிமிரி முதலியோர் பங்குகொண்டு பேசினர்.
தலித் போர்வையில் சர்ச்சுகள் ஆர்பாட்டம் 1988
தலித் போர்வையில் சர்ச்சுகள் ஆர்பாட்டம் 1988
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதற்கறளவுக்கு அதிகமான விளம்பரம்-முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததால். செப்டம்பர்.16லிருந்து 29 வரை, இந்தியன் எக்ஸ்பிரசில் ஏராளமான கடிதங்கள் வெளியாகின.
தலித் போர்வையில் சர்ச் ஆர்பாட்டம் - சர்ச் என்ன செய்தது
தலித் போர்வையில் சர்ச் ஆர்பாட்டம் – சர்ச் என்ன செய்தது
செப்டம்பர்.25, 1988 அன்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஒரு மாநாட்டை நடத்தினர். அதற்கு அப்பொழுதைய மேகாலயா கவர்னர் பி.ஏ. சாங்மா தலைமை தாங்கினார். பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் எம்.எம்.ஜேகப் பங்கு கொண்டார்.
செப்டம்பர்.30, 1988 அன்று அந்தோனி ராஜ், ரூ.8.5 லட்சங்கள் செலவில், தனது தலித் ஆராய்ச்சியை துவங்மியதாக அறிவித்தார்.
Fr Anthony Raj S. J, IDEAS Centre, Vazithippu, Madurai
Fr Anthony Raj S. J, IDEAS Centre, Vazithippu, Madurai
ஆதிதிராவிட கிறிஸ்தவர், ஹரிஜன் கிறிஸ்துவர், தலித் கிறிஸ்தவர்: தமிழக அரசு இந்துக்களுக்கான எஸ்.சி / எஸ்.டி சலுகைகளை, முதலில் கிருத்துவர்கள், பிறகு முஸ்லிம்களுக்கு அமூல் படித்தப் போகிறது என்று செய்தி வந்தது[2]. “ஆதி திராவிட கிருத்துவர்”, “ஆதி திராவிட முஸ்லிம்” என்றெல்லாம் பெயரை மாற்றி இந்துக்களுக்கான எஸ்.சி / எஸ்.டி சலுகைகளை அவர்களுக்குக் கொடுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மேலும் அவர்களுக்கு அந்நியநாடுகளொலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதால், அதைப் பிரித்துக் கொடுத்தாலே, அவர்களது நிலை உயர்ந்து விடும், எனவே அவர்கள் நிரம்பவே சலுகைகள் கொண்டவர்களில் அதிக சலுகைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டப்பட்டது[3]. உடனே, “ஆதி திராவிட” பிரயோக வேண்டாம், அவர்களை “ஹரிஜனங்கள்” என்றழையுங்கள் என்று கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எழுதினர்[4].
தலித் போர்வையில் ஆராய்ச்சி -ஹரிஜன் என்று அழையுங்கள்
தலித் போர்வையில் ஆராய்ச்சி -ஹரிஜன் என்று அழையுங்கள்
இதனை மறுத்து, மறுபடியும் அப்படியென்றல், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாத்தில் தீண்டாமை இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா, என்று கேட்டு கடிதங்கள் வெளியாகின[5].
தலித் போர்வையில் ஆராய்ச்சி 1988..-வசதியானவர்கள்
தலித் போர்வையில் ஆராய்ச்சி 1988..-வசதியானவர்கள்
அதாவது, அப்படியென்றால், அத்தகைய மதமாற்றம் மோசடி, அந்த கடவுளர்கள் ஏசு-அல்லா அவர்களை ஏமாற்றி விட்டார்கள், மற்றும் மதம் மாற்றியவர்களும் சமூக அந்தஸ்து உயரும் என்றெல்லாம் வாக்களித்து, மதமாற்றி ஏமாற்றிவிட்டனர் என்றாகிறது. பாவம், ஆதிதிராவிட கிறிஸ்தவர், ஹரிஜன் கிறிஸ்துவர், தலித் கிறிஸ்தவர், என்று பெயரை மாற்றிக் கொண்டால் கூட ஒப்புக்கொள்ளவில்லை என்றால், யாருடைய தவறு?
செப்டம்பர் 1988 - அந்தோனி ராஜ் ஆராய்ச்சி அறிவிப்பு
செப்டம்பர் 1988 – அந்தோனி ராஜ் ஆராய்ச்சி அறிவிப்பு
அந்தோனி ராஜின் தலித் ஆராய்ச்சியும்பிஷப்புகளின் எதிர்ப்பும்(1988-1992): அந்தோனி ராஜ் எஸ்.ஜே என்பவர் 1988ல், “மதுரை மண்டல ஏசுசபையின் 150 பணி ஆண்டுகளின் நிறைவும் ‘கிறிஸ்தவ தலித் மக்கள்’ ஆய்வின் தொடக்கமும்” என்று ஆராய்ச்சியை ஆரம்பித்தார். “தமிழ்நாட்டில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் ஜாதிபாகுபாடு – ஒரு சமூக-சரித்திர பகுப்பாய்வு” என்ற தலைப்பில் குறிப்பும், கேள்விகள் கொண்ட தொகுப்பும் அனுப்பி வைக்கப்பட்டன. சில இந்துக்கள் இவர ஆராய்ச்சியில் உள்ள முன்கூட்டியே தீர்மானித்து கேட்டுள்ள வினாக்கள், குறுப்பிட்ட முடிவுக்கான நோக்கில் அமைந்துள்ள போக்கு, இந்துமதத்தை இடதில் இழுத்து, இழுவு படுத்தும் நோக்கம் முதலியவற்றை எடுத்துக் காட்டி கடிதங்கள் அந்தோனி ராஜுக்கு எழுதினர்.
செப்டம்பர் 1988 - அந்தோனி ராஜ் ஆராய்ச்சி - பதில்
செப்டம்பர் 1988 – அந்தோனி ராஜ் ஆராய்ச்சி – பதில்
இருப்பினும், கிறிஸ்துவ சர்ச்சுகளுக்குள்ளேயே ஜாதி வேறுபாடு, பாகுபாடு, வித்தியாசம், தீண்டாமை முதலியன என்று ஆராய்ச்சியில் எடுத்துக் காட்டினார்[6]. இந்தியன் எக்ஸ்பிரசில் 1987-88ல் இவரைப்பற்றிய செய்திகள் எல்லாம் வெளிவந்தன. மதுரையில் உள்ள ஐடியாஸ் சென்டர், வழைத்தோப்பு என்ற நிறுவனம் மூலம், பிரச்சார அறிக்கைகள், குறும்புத்தகங்கள் முதலியன வெளியிடப்பட்டன. 1992ல் தனது ஆய்வை வெளியிட்டார். ஆனால், மற்ற டினாமினேஷன் சர்ச்சுகள் இவரது ஆராய்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை[7]. ஜெசுவைட் சொசைடி மூலமே அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், அந்நிய கிருத்துவ நிறுவனங்கள் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்[8]. 1990களில் தலித் கிறிஸ்துவ விடுதலை இயக்கங்கள் மற்றும் சர்ச்சின் தலித் கமிஷன்கள் இவைகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. பின்னவை, முன்னவற்றை அடக்கப் பார்த்தனர். அந்தோனி ராஜுக்கு ரோமிலிருந்தே அழுத்தம் கொடுக்கப்பட்டு, தமது வேலையை மாற்றிக்கொள்ள பணித்தது[9]. ஜெசுவைட்-தலித் நிறுவன உன்னதிக்கு தனது சக்தியை செலவழிக்குமாறும் அறிவுருத்தியது.
சூசை தன் குடும்பத்துடன்
சூசை தன் குடும்பத்துடன்
சூசை வழக்கு-தீர்ப்பு பற்றி தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995ன் செய்தியின் படி விவரங்கள்: தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை சாதியில் இணைக்கலாமா? கூடாதா என்னும் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைக்கப்பட்டது 1982-ம் வருடத்தில்! இந்த வழக்கு நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்தது என்பதால் தமிழர்களாகிய நாம் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். 1982-ம் வருடம் மே மாதம் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. அப்படி சர்வே செய்யப்பட்டபோது அதில் பதிவானவர்கள்  பலருள் சூசை என்பவரும் ஒருவர். இவர் பூர்வீகத்தில் இந்து மதத்தை சார்ந்தவர். ஆனால் பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர். 1982 ஜூலை மாதம் இவர்களுக்கெல்லாம் ‘பங்க்’ எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கினார்கள். இந்திய அரசின் பணத்தில் இந்த பெட்டி கடைகள் செய்யப்பட்டு மாநில அரசால் வழங்கப்பட்டது. சூசை தவிர பிற செருப்பு தைப்போர் அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டன. சூசைக்கு மட்டும் இல்லை. ஏன்? சூசை கிறிஸ்தவர் என்பதால் அட்டவணை சாதியினர் நல்வாழ்வுக்காக அமுல் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதி அல்லாத சூசைக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பது அரசின் நிலை.
Christian caste system as per Bible
Christian caste system as per Bible
கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா?: இதுகுறித்து சூசை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போய் 1985-ம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. சூசையின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கு காரணமாக உச்சநீதிமன்றம் கூறிய காரணம் என்ன? ” சாதி அமைப்பு என்பது இந்து சமய அமைப்பில் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சாதி அமைப்பு என்பது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ( ” …. IT CANNOT BE DISPUTED THAT THE CASTE SYSTEM IS A FEATURE OF THE HINDU SOCIAL STRUCTURE. IT IS A SOCIAL PHNOMENON PECULIAR TO HINDU SOCIETY “). இப்படி சொல்லியதோடு நில்லாமல் இன்னொரு கருத்தையும் கூறியது. அதாவது, “ இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ – இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து – கேட்ட கேள்வி. இதற்கு இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை. இது ஒரு பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்[10].
© வேதபிரகாஷ்
15-08-2015
[1] இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்திகள் மற்றும் அதில் வெளியான கடிதங்களின் மீது ஆதாரமாக எழுதப்பட்டதாகும்.
[2]  இந்தியன் எக்ஸ்பிரஸ். ஏப்ரல்.25, 1989.
[3] இந்தியன் எக்ஸ்பிரஸ். மே.8, 1989.
[4] இந்தியன் எக்ஸ்பிரஸ். மே.16 மற்றும் 19, 1989.
[5] இந்தியன் எக்ஸ்பிரஸ். மே.25, 1989.
[6] There is discrimination against dalits within the Christian Church itself in Tamil Nadu, says a study conduced by Fr Antony Raj SJ, a dalit Jesuit and sociologist.The study titled DIscrimination Against Dalit Christians in Tamil Nadu, was started by the jesuits in 1988. It was published on August 9, 1992, at the Institute of Development, Education, Action and Studies (IDEAS) Centre Madurai.Fr. Antony Raj is a former president of the Dalit Christian Liberation Movement of Tamil Nadu and Pondicherry. At present, he is the Research Director of Dalit Research project at the IDEAS Centre, Madurai.
[7]  Antony Raj came back to India in 1987  from Loyola University of Chicago and did a research on discrimination against Christian Dalits in Tamil Nadu. This research gave him an opportunity to know the socio-economic conditions of the Dalits and plan programmes for their liberation. This lead him to found the Christian Dalit Liberation Movement, one of the goals of which was to put a term to the practice of untouchability inside the Church itself. This engagement pushed several bishops to openly reject him and they exercised a certain pressure on the General of the Jesuit Society thus making Father Raj take his distance from militancy.
[9] Certainly, throughout the 1990s there was tension between the Dalit Christian Liberation Movemen – DCLM rights activists and the Church’s Dalit Commissions, and a weakening of the former. A new non-Dalit Jesuit Provincial was less sympathetic to DCLM militancy, and less able to resist pressure from the wider Church. The movement’s Jesuit leader Fr Anthony Raj was now under pressure from Rome (to transfer the movement to lay leadership), and decided to withdraw and divert his energies into Jesuit-Dalit institution building.
[10] தினகரன் தேதி- 02, டிசம்பர், திருச்சி பதிப்பு 1995.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...