Tuesday, November 17, 2020

கிறிஸ்துவ பாதிரிகள் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் - சுட்டிக் காட்டிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை திருத்தத் தூண்டிய நக்சல் அறிவு சீவிகள்

 

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்கினார் ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன்

https://www.dinakaran.com/News_detail.asp?Nid=519599
2019-08-20@ 15:32:46







சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை தீர்ப்பில் இருந்து ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் நீக்கினார். சென்னை கிறிஸ்துவ கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பு கூறியிருந்தார். வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துக்கள் தீர்ப்பில் உள்ளதாக விமர்சனம் எழந்ததால் தீர்ப்பை நீதிபதி திருத்தினார். தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்க கல்லூரி நிர்வாகம் முறையீடு செய்ததை ஏற்று தீர்ப்பு திருத்தப்பட்டு உள்ளது.

சென்னை, தாம்பரம், கிறிஸ்தவ கல்லூரியின், விலங்கியல் துறை மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.  7 பேராசிரியர்கள் இவர்களை சுற்றுலா அழைத்து சென்றனர். கல்வி சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரண்டு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறினர்.

விசாகா கமிட்டியின் விசாரணையைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பணிநீக்க நோட்டீஸ் அளித்தது. இதை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 32ஆவது பத்தி முழுவதுமாக நீக்கப்படுவதாக ஆணையிட்டார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டிருந்த வாசகமும் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

ஓகஸ்ட் 18, 2019

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

https://christianityindia.wordpress.com/2019/08/18/rajasingh-raveen-samuel-tennyson-sexual-harassment-christian-college/

MCC, Zoology dept-Raveen

ரவீன் ராஜாசிங் மற்றும் சாமுவேல் டென்னிஸன் – பாலியல் சதாய்ப்புகளில் ஈடுபட்ட துணை பேராசிரியர்கள்: சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த 2019 ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு “கல்வி சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டனர்[1]. அப்பொழுது இவர்கள் எல்லைகளை மீறியபோது கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் பல வகைகளில் செக்ஸ்-ரீதியில் தொட்டும்-பேசியும் சதாய்த்துள்ளனர். ஜனவரி 9, 2019 முதல் 14 வரை என்ற சுற்றுலாவில் 46 மாணவிகள் சென்றுள்ளனர், அதில் 34 பேரிடமிருந்து புகார் அளிக்கப் பட்டுள்ளன[2]. அந்த ரவீன் ராஜாசிங் ஒரு மாணவியின் அறையுள் நுழைந்து, அவள் படுக்கையில் படுத்தாரா/னாம்! இந்த லட்சணத்தில் இருக்கிறது படிப்பு/ புரொபசரு! இதனால், சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்[3].  கல்லுரியில் அமைக்கப் பட்ட புகார்-விசாரிப்பு கமிட்டி [Internal Complaints Committee (ICC)] மூலம்விசாரிக்கப் பட்டது[4]. சுற்றுலாவின் போது, அவர்கள் தகாத முறையில் பேசியது, நடந்து கொண்டது ஊர்ஜிதம் ஆனது[5]. டென்னிஸன், ரவீனின் சில்மிஷங்களை, அடாவடித்தனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேசி வந்தான்[6]. முன்னமே குறிப்பிட்டப் படி, ரவீன், ஒரு பெண்ணிம் அறைக்குள் நுழைந்து படுக்கையின் மீது படுத்துத் தூங்கினான்.

Samuel Tennyson

முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்த கல்லூரி: கல்லூரி முதல்வர், முதலில் புகார் கொடுத்த போது, இதெல்லாம், முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்து விட்டனராம். அதென்ன “முதன் முதலில்” என்ற சலுகை. ஒரு தடவை கற்பழித்தால் விட்டு விடுவார்களா? ஒருவேளை பரிசுத்த ஆவியோ, கர்த்தனோ, ஏசுநாதனோ[7] வந்து சரிசெய்து விடுமா? இதானால், பெற்றோர்கள் பயந்து விட்டார்கள் போலும்! பிறகு 30 பேர் கையெழுத்துப் போட்டு புகார் கொடுத்தப் பிறகு தான், கல்லூரி அதிகாரம் புகாரை அனுமதித்து, கமிட்டியை அமைத்தது[8].

MCC, Zoology dept-complaint letter

டென்னிஸனே அக்கமிட்டியில் இருந்தது வேடிக்கைதான். இதிலிருந்து, கல்லூரி விவகாரத்தை மறைக்கவே முயன்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களை தயாரிக்க மற்றும் விடைத்தாள்களை திருத்த ரவீனுக்கு தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.[9]. ஏனேனில், இதை மனதில் வைத்துக் கொண்டு, மாணவிகளை பாதிக்க முயலும் என்பதால். மே 24, 2019 அன்று இருவருமே குற்றவாளிகள் என்று கண்டுபிடித்தது ரவீன் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட்டான். டென்னிஸன் அதற்குள் நீதி மன்றத்திற்கு சென்று விட்டான். இருப்பினும், கல்லூரி வளகத்திற்குள் வரக்கூடாது என்று ஆணையிடப்பட்டது.

Raveen Rajasigh, Christian Collge, Madras

வழிபாட்டு வளாகத்தில் நடப்பது தெருக்களில் நடந்தால்குற்றங்கள் அதிகமாகும்: வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது[10]. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11].  அதாவது, எப்படியாவது, வழக்கை இழுத்தடிக்க, டென்னிஸன் முயன்றுள்ளான். கல்லூரி தரப்பு பதிலை ஏற்று, பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தன்னுடைய உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்ச், மசூதி, கோவில் விட்டு, மதம் தெருக்களில் கடைபிடிக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நிகழத்தான் கூடும், அதிகமாகும்- நீதிபதி . அதாவது இப்பொழுதெல்லாம், தெருக்களில் நமாஜ் செய்வது, பிரச்சாரம் செய்வது முதலிய அதிகமாகி விட்டன.

MCC, Zoology dept-Samuel Tennyson

இருபாலரும் படிக்கும்கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது[12]. எஸ். வைத்தியநாதன், நீதிபதி நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை / சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்தார்[13].  இப்பொழுதுள்ள நவநாகரிகமுள்ள காலத்தில் தான் இவ்வாறான கருத்துச் சொல்லப் பட்டிருக்கிறது என்பனை கவனிக்க வேண்டும்[14]. நிச்சயமாக அத்தகைய கருத்து, திடீரென்று வந்திருக்காது. இந்தியா முழுவதும் தொடர்ந்து சிறுவர் கற்பழிப்பு, கன்னியாஸ்திரிக்கள் கற்பழிப்பு, மற்ற பாலிய அத்துமீறல்கள் நடந்து வருவதை சுட்டிக் காட்டவே அவ்வாறு குறிப்பிட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அவற்றில் சம்பந்தப்பட்டது எல்லாம் கிருத்துவ குருமார்கள், சாமியார்கள், பாஸ்டர்கள், பிஷப்புகள் முதலியோர் தாம்[15]. அதிக அளவில் உள்ள கிருத்துவ மழலையர் பள்ளிகள், கான்வென்டுகள் முதல் மகளிர் கல்லூரிகள் வரை அவர்கள் நிர்வாகத்தில், கட்டுப்பாட்டில் இருப்பதால், அத்தகைய அச்சம்ம் வந்தது நியாயமானது தான்[16]. மதம் மாற்றம் முதலியவற்றையும் மறைக்கத்தான் முயல்கின்றனர். இச்செய்தியும் பிடிஐ மூலம் வெளிவந்துள்ளதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[17].

Raveen Rajasigh, Christian Collge, Madras.at coorg

பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள்: பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சில சட்டங்கள் பெண்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அப்பாவி ஆண்மகனை சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-08-2019

MCC, Zoology dept

[1] Bangalore Mirror, MCC sexual harassment case: Madras HC says there is a general feeling that Christian institutions are unsafe, Gladwin Emmanuel, Uploaded: August 16, 2019, 16:5 IST.

[2] தினமணி, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? – உயர்நீதிமன்றம், By DIN | Published on : 17th August 2019 04:39 PM.

[3] https://www.dinamani.com/tamilnadu/2019/aug/17/christian-institutions-unsafe-for-girl-students-madras-hc-3215633.html

[4] https://bangaloremirror.indiatimes.com/news/india/mcc-sexual-harassment-case-madras-hc-says-there-is-a-general-feeling-that-christian-institutions-are-unsafe/articleshow/70700615.cms

[5] TheNewsMinute, In a win for students, Madras Christian College dismisses prof found guilty of sexual harassment, Jayarajan, Tuesday, July 16, 2019 – 18:39

[6] https://www.thenewsminute.com/article/win-students-madras-christian-college-dismisses-prof-found-guilty-sexual-harassment-105563

[7] தமிழில் கடவுளை அவன், இவன் என்று பேசுவது, எழுதுவது வழக்கம், அதனால், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

[8] கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி – சென்னை உயர்நீதிமன்றம், WebDesk, Aug 16, 2019

[9] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-christian-college-women-students/

[10] தினமலர், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் பாதுகாப்பானதா ?, Updated : ஆக 17, 2019 18:16 | Added : ஆக 16, 2019 17:47

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2345457

[12] The Hindu, Sexual harassment case: HC refuses to interfere in show-cause notice to Madras Christian College staff, Legal Correspondent CHENNAI , AUGUST 17, 2019 01:05 IST. UPDATED: AUGUST 17, 2019 08:18 IST

[13]  https://www.thehindu.com/news/cities/chennai/hc-refuses-to-interfere-in-show-cause-notice-to-mcc-staff-college-took-the-step-against-teacher-after-34-students-levelled-charges-of-harassment/article29114275.ece

[14] Times of India, Christian institutions ‘unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST

[15] https://timesofindia.indiatimes.com/city/chennai/christian-institutions-unsafe-for-girl-students-hc-judge/articleshow/70708267.cms

[16] NDTV.News, Christian Co-Ed schools regarded ‘Highly unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST.

[17] https://www.ndtv.com/india-news/general-feeling-that-christian-co-ed-schools-highly-unsafe-for-girls-future-court-2086209

No comments:

Post a Comment