கேரள மாநிலம், தொடுபுழாவிலுள்ள நியூமேன் கல்லூரியில் பி.காம் மலையாளம் இன்ட்டர்னல் தேர்வில், மதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கேள்வி குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, அந்தக் கேள்வித் தாளை தயாரித்த பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கையை 2010-ம் ஆண்டு ஒரு கும்பல் வெட்டியது.
அந்த வழக்கு கொச்சி என்.ஐ.ஏ கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் மொத்தம் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
இறுதியாக 11 பேர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டது.
அதன்படி ஸஜன், நாசர், நஜீப் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நெளஷாத், மொய்தீன் குஞ்சு, அயூப் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து என்.ஐ.ஏ கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment