Sunday, July 23, 2023

இஸ்ரேலின் பழைய ஏற்பாடு - மனிதக் கற்பனையும், யூதக் கட்டுக் கதையும் - பவுல்

 

லூக்கா 16:16 மோசேயின் சட்டங்களும் தீர்க்கர்கள் கூற்றும் யோவான்ஸ்நானர் காலம் வரையிலும் தான்.அதுமுதல், தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் நுழைய வன்முறையாக பலர் முயல்கிறார்கள். 

1 தெசலோனிக்கேயர் 5: 21 பவுல் - "எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்"

1 தீமோத்தேயு  6:20  திமொத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக. உலகப் போக்கிலான வீண்பேச்சுக்களிலிருந்தும், ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும் முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு. 21அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தை விட்டு விலகினார்கள். இறை அருள் உங்களோடிருப்பதாக!

1 தீமோத்தேயு  4:7 உலகப் போக்கிலான புனைகதைகளையும் பாட்டிக் கதைகளையும் விட்டுவிலகு.

1 தீமோத்தேயு 1: 3 உன்னை எபேசு நகரில்   மாற்றுக் கொள்கைகளைக் போதிப்பதை செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு. 4 அவர்கள் புனைகதைகளிலும், முன்னோரின்  முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள். இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்குப் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருகின்றன.

தீத்து 1:14   யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும், விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.

தீத்து 3:9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற முன்னோர் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, மோசேயின் சட்டங்களைக் குறித்து சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பயன் அற்றவை, வீணானவை.

No comments:

Post a Comment

-ஈ.வே.ராமசாமி நாயக்கர் பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு -ஈ.வே.ராமசாமி நாயக்கர்  பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது, தொடர்ந்தால் மாநில அரசு தடுக்க நடவடிக்கை